தாவீதின் சங்கீதம்.
யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது. பிலி 4:19யோவா 10:11ஏசா 40:11யோவா 10:27-30யோவா 10:14வெளி 7:17மத் 6:331 பேது 2:25
அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார், வெளி 7:17வெளி 22:1எசேக் 34:13-14சங் 46:4வெளி 21:6ஏசா 49:9-10ஏசா 30:23வெளி 22:17
அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார்.
அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார். ஏசா 42:16சங் 31:3சங் 19:7சங் 51:10சங் 143:8-10சங் 5:8சங் 51:12யோபு 33:30
தமது பெயருக்காக அவர் என்னை,
நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே ஏசா 41:10சங் 118:6சங் 138:7ஏசா 43:1-2சங் 3:6சங் 46:1-3லூக் 1:791 கொரி 15:55-57
நான் நடந்தாலும்
நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன்,
ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும்,
எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.
என் பகைவர்களின் சமுகத்தில் எபே 3:20சங் 92:10சங் 45:7சங் 16:51 யோவா 2:20சங் 31:19-20யோபு 36:161 யோவா 2:27
நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர்.
நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்;
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும் சங் 27:42 தீமோ 4:182 கொரி 5:1சங் 36:7-10சங் 16:11சங் 73:24-262 கொரி 1:10சங் 103:17
நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும்,
நான் யெகோவாவினுடைய வீட்டில்
என்றென்றுமாய் வாழ்வேன்.