ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம்.
யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, சங் 147:1சங் 107:1எபே 5:19சங் 107:21-22சங் 135:3சங் 33:1சங் 73:28தானி 4:34-37
உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது.
காலையிலே உமது அன்பையும் புலம் 3:22-23சங் 89:1-2யோவா 1:17ஏசா 63:7சங் 42:8அப் 16:25சங் 71:15சங் 145:2
இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது.
பத்து நரம்பு வீணையின் இசையினாலும், சங் 33:21 நாளாக 13:82 நாளாக 23:5நெகே 12:27சங் 68:251 சாமு 10:5சங் 9:161 நாளாக 15:16
யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது.
யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; 2 கொரி 2:14சங் 126:3சங் 8:6ஏசா 65:13-14லூக் 1:47யோவா 16:22சங் 143:5வெளி 18:20
உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன்.
யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, ரோம 11:33-34ஏசா 55:8-9சங் 40:5சங் 139:17சங் 145:3-41 கொரி 2:10சங் 111:2வெளி 15:3
உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை!
உணர்வற்ற மனிதன் அறியாததும், 1 கொரி 2:14சங் 73:22சங் 94:8நீதி 1:22சங் 49:10நீதி 24:7சங் 14:1எரே 10:14
மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே,
கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், சங் 37:38சங் 73:18-201 பேது 1:24எரே 12:1-2சங் 37:1-2சங் 37:35-36யாக் 1:10-11மல்கி 4:1
தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும்,
என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள்.
ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர். சங் 83:18அப் 12:1அப் 12:22-24யாத் 18:11தானி 4:34-35பிரச 5:8சங் 102:26-27சங் 56:2
யெகோவாவே, உமது பகைவர், சங் 37:20சங் 89:102 தெச 1:7-9மத் 7:23சங் 21:8-9சங் 68:1-2உபா 28:64எசேக் 5:12
நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்;
தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள்.
காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; சங் 23:5சங் 89:17சங் 45:72 கொரி 1:21சங் 75:101 யோவா 2:201 சாமு 2:10சங் 112:9
சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன.
என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; சங் 54:7சங் 91:8சங் 112:8சங் 59:10சங் 37:34
என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன்.
நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், எரே 17:8சங் 1:3சங் 104:16சங் 52:8ஓசி 14:5-6எண் 24:6ஆமோ 2:9ஏசா 65:22
அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்;
அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, 2 பேது 3:18எபே 3:17ஏசா 61:3ஏசா 60:21ரோம 6:5சங் 100:4ரோம 11:17சங் 116:19
நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள்.
அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, ஏசா 46:4எரே 17:8சங் 71:18யோவா 15:2-5பிலி 1:11யோபு 17:9சங் 1:3மத் 3:10
தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள்.
“யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; சங் 18:2ரோம 9:14உபா 32:4யோபு 34:10சங் 62:6சங் 145:171 கொரி 1:8-91 பேது 1:4-5
அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.