தாவீதின் நன்றிப்பாடல்
அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள். 1 நாளாக 15:12 நாளாக 1:42 சாமு 6:17-19எஸ்றா 6:16-181 நாளாக 15:122 நாளாக 5:6-71 இராஜா 8:5-6சங் 132:8 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதித்து, ஆதி 47:102 நாளாக 30:18-202 நாளாக 30:27யோசு 22:61 இராஜா 8:55-562 நாளாக 29:292 சாமு 6:18ஆதி 14:19 ஆண்கள்துவங்கி பெண்கள்வரை, இஸ்ரவேலர்களாகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான். எசேக் 45:171 பேது 4:9நெகே 8:102 நாளாக 30:242 நாளாக 35:7-8
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான். 1 நாளாக 24:3சங் 103:2சங் 105:5சங் 106:48சங் 72:181 நாளாக 15:161 நாளாக 16:37-421 நாளாக 16:8 அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும், 1 நாளாக 6:391 நாளாக 15:16-241 நாளாக 25:1-62 நாளாக 29:25 பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். 2 நாளாக 29:26-282 நாளாக 13:122 நாளாக 5:12-13எண் 10:8
அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது. 2 சாமு 22:12 சாமு 23:1-2சங் 18:12 நாளாக 29:30நெகே 12:24சங் 12:1
யெகோவாவை துதித்து, சங் 105:1-15ஏசா 12:42இராஜா 19:19சங் 145:5-61 நாளாக 16:341 நாளாக 16:8-221 கொரி 1:21 இராஜா 8:43
அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்;
அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள்.
அவரைப் பாடி, அவரைத் துதித்து, கொலோ 3:16யாக் 5:13சங் 96:1-3சங் 98:1-4மத் 26:30சங் 95:1-2எபே 5:19சங் 40:10
அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; மத் 7:7-8எரே 29:13நீதி 8:17சங் 34:2ஏசா 55:6-7ஏசா 45:25எரே 9:23-241 நாளாக 28:9
யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; சங் 27:8-9செப்ப 2:2-3சங் 68:35சங் 24:6சங் 67:1சங் 4:62 நாளாக 6:41ஆமோ 5:6
அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள்.
அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் 1 சந்ததியே! சங் 111:4சங் 103:2சங் 119:20சங் 119:137சங் 119:75ரோம 11:331 நாளாக 16:8-9சங் 119:13
அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
அவர் செய்த அதிசயங்களையும் 1 பேது 2:9யாத் 19:5-6சங் 135:4உபா 7:6ஆதி 17:7ஆதி 28:13-14ஆதி 35:10-12
அவருடைய அற்புதங்களையும்
அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள்.
அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா; ஏசா 26:9சங் 48:10-11யாத் 15:2சங் 100:31 நாளாக 16:12சங் 118:28சங் 63:1சங் 95:7
அவருடைய நியாயத்தீர்ப்புகள்
பூமியெங்கும் விளங்கும்.
ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், சங் 105:8உபா 7:9மல்கி 4:4சங் 25:10சங் 44:17
ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். ஆதி 17:2ஆதி 26:3ஆதி 35:11கலா 3:15-17ஆதி 15:18அப் 3:25யாத் 3:15ஆதி 12:7
அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும், ஆதி 17:7-8ஆதி 35:11-122 சாமு 23:5யாத் 3:17எபி 13:20ஏசா 55:3எரே 11:2யோசு 24:11-13
இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். ஆதி 13:15உபா 32:8எண் 26:53-56ஆதி 12:7ஆதி 17:8ஆதி 28:13-14ஆதி 35:11-12மீகா 2:5
அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள். உபா 7:7ஆதி 34:30எபி 11:13அப் 7:5
அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும், ஆதி 46:3ஆதி 46:6ஆதி 12:10ஆதி 20:1
ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள்.
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், ஆதி 20:3ஆதி 12:17ஆதி 31:29யாத் 7:15-18யாத் 9:13-18ஆதி 31:24ஆதி 31:42
அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், ஆதி 20:7சங் 105:15ஆதி 49:8-101 யோவா 2:271 இராஜா 19:16ஆதி 48:19-20ஆதி 27:39-40
என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
பூமியின் எல்லா குடிமக்களே, யெகோவாவைப் பாடி, சங் 96:1-13சங் 71:15ஏசா 51:6-8ஏசா 12:51 நாளாக 16:9சங் 30:4சங் 40:10யாத் 15:21
நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள்.
தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், ஏசா 12:2-6சங் 22:27தானி 4:1-32இராஜா 19:19
எல்லா மக்களுக்குள்ளும்
அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எரே 10:6-10சங் 66:3-5சங் 89:7வெளி 15:3-4யாத் 15:11சங் 144:3-6சங் 76:7ஏசா 40:12-17
எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே.
அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; ஏசா 42:5ஏசா 44:24சங் 102:25ஏசா 40:26லேவி 19:41 கொரி 8:4அப் 19:26ஏசா 44:9-20
யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர்.
மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; சங் 96:6சங் 16:11சங் 28:7-8சங் 43:2-4சங் 63:2-3சங் 8:1யோவா 17:24சங் 27:4-6
வல்லமையும் மகிழ்ச்சியும்
அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது.
மக்களின் வம்சங்களே, 1 கொரி 15:10பிலி 4:13சங் 100:1-22 கொரி 12:9-10எபே 1:17-19சங் 29:1-2சங் 115:1-2சங் 66:1-2
யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
கர்த்தருக்கே அதை செலுத்துங்கள்.
யெகோவாவுக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, சங் 100:4சங் 96:9ஏசா 6:3சங் 108:3-5சங் 96:6சங் 95:2சங் 29:2சங் 72:15
காணிக்கைகளைக் கொண்டுவந்து,
அவருடைய சந்நிதியில் நுழையுங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; எபி 1:3சங் 33:9சங் 148:5-6சங் 93:1வெளி 11:151 நாளாக 16:231 நாளாக 16:25கொலோ 1:17
அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர்.
வானங்கள் மகிழ்ந்து, சங் 96:10சங் 97:1சங் 99:1வெளி 19:6சங் 93:1-2ஏசா 49:13சங் 98:4ஏசா 33:22
பூமி பூரிப்பதாக; யெகோவா ஆளுகைசெய்கிறார்
என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக.
கடலும் அதின் நிறைவும் முழங்கி, சங் 98:7-8ஏசா 44:23சங் 148:9-10சங் 93:4
நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக.
அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக் சங் 96:12-13சங் 98:92 பேது 3:142 தெச 1:8எசேக் 17:22-24வெளி 11:17-182 தெச 1:10
காட்டுமரங்களும் முழக்கமிடும்;
அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
யெகோவாவை துதியுங்கள், சங் 106:12 நாளாக 7:3எஸ்றா 3:11சங் 107:1சங் 136:1-262 நாளாக 5:13எரே 33:11சங் 118:1
அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது.
எங்கள் இரட்சிப்பின் தேவனே, சங் 106:47-481 பேது 2:9சங் 79:9-101 பேது 2:5ஏசா 43:21சங் 14:71 நாளாக 16:9-101 கொரி 1:31
நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி,
உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து,
எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள்.
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு 1 இராஜா 8:15சங் 72:18-191 இராஜா 8:56நெகே 8:6எபே 1:31 கொரி 14:161 பேது 1:3எரே 28:6
சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக;”
அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் யெகோவாவை துதித்தார்கள்.”
பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேரையும் வைத்து, 2 நாளாக 8:14எஸ்றா 3:41 நாளாக 15:17-241 நாளாக 16:4-61 நாளாக 25:1-6 எதித்தூனின் மகனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான். 1 நாளாக 26:101 நாளாக 13:141 நாளாக 25:31 நாளாக 26:4-8 கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை எப்பொழுதும், காலையிலும் மாலையிலும், யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் யெகோவாவுக்குச் செலுத்துவதற்காக, 1 இராஜா 3:41 நாளாக 15:111 நாளாக 12:281 நாளாக 21:292 நாளாக 1:132 நாளாக 1:3-4 அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களையும் வைத்து, எண் 28:3-8யாத் 29:38-421 இராஜா 18:292 நாளாக 2:42 நாளாக 31:3ஆமோ 4:4தானி 9:21எசேக் 46:13-15 இவர்களோடு ஏமானையும், எதித்தூனையும், பெயர்பெயராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும், 2 நாளாக 5:131 நாளாக 25:1-61 நாளாக 16:341 நாளாக 6:332 நாளாக 20:212 நாளாக 7:3எஸ்றா 3:11எண் 1:17 பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் ஒலிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் மகன்களை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான். சங் 150:3-6சங் 84:101 நாளாக 25:6-72 நாளாக 29:25-282 நாளாக 7:6 பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான். 2 சாமு 6:19-201 இராஜா 8:66ஆதி 18:19யோசு 24:15சங் 101:2