சங்கீதங்கள் 103

Psalms 103
சங்கீதம் 103

தாவீதின் பாடல்.

என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; சங் 146:1-2சங் 57:7-11யோவா 4:241 கொரி 14:15சங் 111:1சங் 103:22கொலோ 3:16சங் 99:3

என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.

என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; ஏசா 63:7சங் 116:12சங் 105:5லூக் 17:15-18உபா 6:12உபா 32:18உபா 32:62 நாளாக 32:25

அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே.

அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, யாத் 15:26ஏசா 53:5எரே 17:14சங் 30:2சங் 41:3-4சங் 147:3மாற் 2:10-11யாக் 5:15

உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,

உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, சங் 56:13சங் 71:23சங் 103:12சங் 34:221 பேது 5:4சங் 8:5யாக் 1:12சங் 5:12

உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; ஏசா 40:31சங் 107:91 தீமோ 6:172 கொரி 4:16சங் 63:5சங் 104:28சங் 23:5சங் 65:4

கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.

ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். சங் 12:5சங் 9:9சங் 146:7நீதி 14:31சங் 72:12உபா 24:14-15நீதி 22:22-23சங் 109:31

அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார். யாத் 33:13சங் 147:19சங் 78:11நெகே 9:14உபா 34:10சங் 77:20யோவா 5:45-47சங் 99:7

யெகோவா உருக்கமும், இரக்கமும், சங் 86:15யோவே 2:13யாத் 34:6-7சங் 145:8நாகூ 1:3சங் 86:5எபே 1:7-8யோனா 4:2

நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; ஏசா 57:16சங் 30:5எரே 3:5மீகா 7:18-19எரே 3:12

என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.

அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், எஸ்றா 9:13புலம் 3:22நெகே 9:31சங் 130:3தானி 9:18-19யோபு 11:6ஆப 3:2

நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, சங் 57:10லூக் 1:50எபே 2:4-7சங் 103:17சங் 36:5நீதி 25:3ஏசா 55:9சங் 89:2

அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.

மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, ஏசா 43:251 யோவா 1:7மீகா 7:18ஏசா 38:17எரே 31:34எபி 10:22 சாமு 12:13எரே 50:20

அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.

தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, லூக் 11:11-12எபி 12:5-11லூக் 15:21-22சங் 103:17எரே 31:20நீதி 3:12எரே 31:9மல்கி 4:2

யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; பிரச 12:7யோபு 10:9சங் 78:38-39சங் 89:47ஆதி 3:19யோபு 7:21யோபு 7:5-7யோபு 13:25

நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.

மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; 1 பேது 1:24யாக் 1:10-11ஏசா 51:12ஏசா 28:1ஏசா 40:6-8யோபு 14:1-3ஏசா 28:4நாகூ 1:4

வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.

காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; ஏசா 40:7யோபு 20:9யோபு 14:10ஆதி 5:24யோபு 7:6-10யோபு 27:20-21யோபு 8:18-19

அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், சங் 100:52 தீமோ 1:9எபே 2:4-7யாத் 20:6ரோம 1:17ஏசா 51:62 தெச 2:13-14எபே 1:4-8

அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.

அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. உபா 7:9லூக் 1:6மத் 28:20சங் 132:12யாத் 24:8நீதி 3:1சங் 25:10அப் 24:16

யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; சங் 47:2பிலி 2:9-10சங் 9:71 பேது 3:22சங் 11:4தானி 4:34-35எபி 8:1ஏசா 66:1

அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.

யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, எபி 1:14சங் 148:2லூக் 1:19மத் 26:532இராஜா 19:35லூக் 2:13-14சங் 78:25யோவே 2:11

அவருடைய வசனத்தின்படி செய்கிற

பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே,

அவரைத் துதியுங்கள்.

யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, 1 இராஜா 22:19நெகே 9:6லூக் 2:13சங் 104:4எபி 1:14யோசு 5:14வெளி 22:8-9ஆதி 32:2

அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே,

அவரைப் போற்றுங்கள்.

யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, ஏசா 49:13ஏசா 42:10-12சங் 145:10சங் 148:3-12சங் 150:6ஏசா 44:23ஏசா 43:20வெளி 5:12-14

அவரைப் போற்றுங்கள்;

என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.