கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். கலா 1:6-121 கொரி 1:23-241 பேது 5:122 கொரி 1:241 கொரி 15:3-111 தெச 1:61 தெச 2:131 தெச 4:1 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே. எபி 3:6எபி 2:1எபி 3:141 கொரி 1:182 தீமோ 1:9கொலோ 1:23எபே 2:8யோவா 8:31-32 நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 1 பேது 2:24கலா 1:4ஏசா 53:1-121 யோவா 2:2அப் 26:22-23தானி 9:24-26கலா 1:12வெளி 1:5 அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, ஓசி 6:2மத் 12:40சங் 16:10-11அப் 13:29-37அப் 26:22-23ஏசா 53:9-12லூக் 24:46யோனா 1:17 கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார். மாற் 16:14அப் 1:2-14யோவா 20:19-261 கொரி 1:12யோவா 1:42லூக் 24:34-491 கொரி 3:221 கொரி 9:5 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள். மத் 28:10மாற் 16:7அப் 13:361 கொரி 15:182 பேது 3:4அப் 7:601 தெச 4:131 தெச 4:15 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார். லூக் 24:50அப் 1:2-12லூக் 24:33அப் 12:17லூக் 24:36 எல்லோருக்கும்பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். 1 கொரி 9:1அப் 26:16அப் 18:9அப் 22:18அப் 9:172 கொரி 12:1-6அப் 22:14அப் 9:3-6 நான் அப்போஸ்தலர்கள் எல்லோரையும்விட குறைந்தவனாக இருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கும் தகுதியற்றவன். எபே 3:7-81 தீமோ 1:13-152 கொரி 12:11அப் 8:3அப் 26:9-11அப் 9:1-19கலா 1:232 கொரி 11:5 ஆனாலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லோரையும்விட நான் அதிகமாகப் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் இல்லை, என்னுடன் இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது. பிலி 4:132 கொரி 3:5பிலி 2:13எபே 3:7-8எபே 2:7-82 கொரி 10:12-16கலா 2:8ரோம 12:3 ஆகவே, நானாயிருந்தாலும் அவர்களாயிருந்தாலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இதையே விசுவாசித்திருக்கிறீர்கள். 1 கொரி 2:21 கொரி 15:3-4
மரித்தோரின் உயிர்த்தெழுதல்
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? அப் 26:8அப் 17:322 தீமோ 2:18அப் 23:81 கொரி 15:13-192 தெச 2:17 மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே. யோவா 11:25-261 தெச 4:14ரோம 8:11வெளி 1:181 பேது 1:32 கொரி 4:10-14ரோம 4:24-251 கொரி 15:20 கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண். 1 கொரி 15:171 தெச 4:14அப் 17:31யாக் 2:20மத் 15:91 கொரி 15:2கலா 2:2ஏசா 49:4 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. அப் 2:24யோபு 13:7-101 கொரி 15:13அப் 2:321 கொரி 15:20அப் 10:39-42அப் 13:30-33அப் 4:10 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள். ரோம 4:251 பேது 1:31 கொரி 15:141 பேது 1:21ரோம 8:33-34ரோம 5:101 கொரி 15:2அப் 5:31 கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே. 1 தெச 4:13-141 தெச 4:161 கொரி 15:6வெளி 14:13 இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம். 1 பேது 1:21வெளி 14:132 தீமோ 1:121 கொரி 4:9-132 தீமோ 3:12அப் 14:22லூக் 21:34எபே 1:12-13 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார். 1 கொரி 15:23அப் 26:23வெளி 1:51 பேது 1:3கொலோ 1:18ரோம 8:111 கொரி 15:6 மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது. யோவா 11:25ரோம 5:12-17ரோம 6:231 கொரி 15:22 ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ரோம 5:12-211 கொரி 15:45-49யோவா 5:21-29ஆதி 2:17ஆதி 3:6ஆதி 3:19 அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ஏசா 26:19கலா 3:291 கொரி 15:521 கொரி 15:201 தெச 4:15-172 கொரி 10:71 தெச 2:19கலா 5:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். தானி 7:27தானி 7:14மத் 28:18ஏசா 9:7யோவா 13:3மத் 11:271 தீமோ 6:15தானி 2:44 எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும். சங் 110:1எபி 10:12-13மத் 22:44எபி 1:13சங் 2:6-10எபே 1:22அப் 2:34மாற் 12:36 அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம். 2 தீமோ 1:101 கொரி 15:55வெளி 21:4வெளி 20:14ஏசா 25:8எபி 2:14ஓசி 13:14லூக் 20:36 எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது. சங் 8:6எபி 2:8மத் 28:18மத் 11:27எபே 1:22யோவா 13:3யோவா 3:351 பேது 3:22 அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். கொலோ 3:111 கொரி 3:23எபே 1:23பிலி 3:211 கொரி 11:3யோவா 14:281 கொரி 12:6வெளி 19:11-21 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? ரோம 6:3-41 கொரி 15:161 கொரி 15:32மத் 20:22 நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாக இருக்கிறோம்? 2 கொரி 11:23-272 கொரி 6:91 கொரி 15:312 கொரி 4:7-12கலா 5:11ரோம 8:36-39 நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாகச் சொல்லுகிறேன். 2 கொரி 4:10-11ரோம 8:361 கொரி 4:9-13பிலி 3:31 தெச 3:92 கொரி 11:23அப் 20:23எரே 11:7 நான் எபேசுவிலே கொடிய மிருகங்களுடனே போராடினேனென்று மனிதர்கள் வழக்கமாகச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்கு பலன் என்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே? ஏசா 22:13ஏசா 56:12லூக் 12:192 கொரி 1:8-102 பேது 2:12அப் 18:19யூதா 1:10அப் 19:1 மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். நீதி 13:20மத் 24:41 கொரி 5:6நீதி 9:6எபே 5:6கலா 6:72 தீமோ 2:16-181 கொரி 6:9 நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன். 1 கொரி 6:5எபி 5:11-12ரோம 13:11யோவே 1:5எபே 5:141 கொரி 8:7யோவா 5:14யோவா 8:11
மகிமையின் சரீரம்
ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால், எசேக் 37:31 கொரி 15:38-53பிலி 3:21ரோம 9:19பிரச 11:5யோவா 3:4யோவா 3:9யோவா 9:10 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே. யோவா 12:24லூக் 11:40எபே 5:15லூக் 12:20லூக் 24:25ரோம 1:22 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். 1 கொரி 3:7ஏசா 61:11ஆதி 1:11-12மாற் 4:26-29சங் 104:14 எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு. ஆதி 1:20-26 வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு; சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. உபா 4:19ஏசா 24:23சங் 148:3-5ஆதி 1:14யோபு 31:26சங் 19:4-6சங் 8:3 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்; தானி 12:3மத் 13:43பிலி 3:20-211 பேது 1:4ரோம 8:211 கொரி 15:50-54அப் 2:27அப் 2:31 மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும். கொலோ 3:41 கொரி 6:14பிலி 3:20-212 கொரி 13:4தானி 12:1மத் 22:29-30மாற் 12:24-252 கொரி 13:14 சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு. 1 கொரி 15:50யோவா 20:19லூக் 24:31யோவா 20:26 அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர். யோவா 5:21ஆதி 2:7ரோம 8:2ரோம 8:10-11ரோம 5:12-14யோவா 6:63யோவா 14:6யோவா 6:39-40 ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. கொலோ 3:9-10எபே 4:22-24ரோம 6:6 முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். யோவா 3:31ஆதி 2:7ஆதி 3:192 கொரி 5:11 கொரி 15:45ஏசா 9:6யோவா 3:12-13லூக் 2:11 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. ஆதி 5:3யோவா 3:6பிலி 3:20-21யோபு 14:4ரோம 5:12-211 கொரி 15:21-22 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம். ரோம 8:292 கொரி 3:181 யோவா 3:22 கொரி 4:10-11ஆதி 5:3மத் 13:43 சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை. யோவா 3:3-6மத் 16:172 கொரி 5:1எபே 4:17கலா 5:161 கொரி 6:13கலா 3:171 கொரி 1:12 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம். 1 தெச 4:14-17பிலி 3:211 கொரி 15:20எபே 1:91 கொரி 4:11 கொரி 15:61 கொரி 2:71 கொரி 13:2 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 1 தெச 4:16-17மத் 24:31யோவா 5:28யோவா 5:25ஏசா 27:131 கொரி 15:422 பேது 3:10சகரி 9:14 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும். 2 கொரி 5:2-41 யோவா 3:2எபே 4:24ரோம 13:12-14ரோம 2:7கலா 3:27 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். ஏசா 25:8எபி 2:14-15வெளி 20:14வெளி 21:4லூக் 20:362 கொரி 4:112 தெச 1:10ரோம 8:11 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? ஓசி 13:14சங் 89:48ரோம 5:14அப் 2:27சங் 49:8-15பிரச 2:15-16அப் 9:5பிரச 9:5-6 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். ரோம 4:15கலா 3:10-13ரோம 6:23ரோம 7:5-13யோவா 8:24ரோம 5:12-13யோவா 8:21ரோம 5:20 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 2 கொரி 2:14ரோம 8:371 யோவா 5:4-5நீதி 21:31வெளி 12:11யோவா 16:332 கொரி 9:15சங் 98:1 ஆகவே, எனக்குப் பிரியமான சகோதரர்களே, கர்த்தருக்குள் நீங்கள் செய்கிற முயற்சி வீணாக இருக்காதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், அசையாதவர்களாகவும், கர்த்தருடைய செயலிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக. கலா 6:92 நாளாக 15:7எபி 6:10பிலி 2:161 கொரி 3:82 பேது 3:17-18கொலோ 1:23எபி 13:15-16