எரேமியா 25

Jeremiah 25
அத்தியாயம் 25

எழுபது வருட சிறையிருப்பு

யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் அரசாட்சியின் நான்காம் வருடத்திற்குச் சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருடத்தில் யூதாவின் மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை; எரே 36:12இராஜா 24:1-2தானி 1:1எரே 46:2 அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் மக்கள் அனைத்திற்கும்; எருசலேமின் குடிமக்கள் எல்லோருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி: எரே 18:11எரே 19:14-15எரே 26:2எரே 35:13எரே 38:1-2மாற் 7:14-15சங் 49:1-2 ஆமோனின் மகனாகிய யோசியாவின் அரசாட்சியின் பதின்மூன்றாம் வருடம் துவங்கி இந்நாள்வரை சென்ற இந்த இருபத்துமூன்று வருடங்களாகக் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டானது; அதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டுவந்தும் நீங்கள் கேளாமற்போனீர்கள். எரே 1:2எரே 11:7எரே 26:5எரே 7:132 நாளாக 34:32 நாளாக 34:8எரே 29:192 தீமோ 4:2 யெகோவா உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய எல்லா ஊழியக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் கேளாமலும், கவனிக்காமலும், கீழ்ப்படியாமலும் போனீர்கள். எரே 25:3எரே 26:52 நாளாக 36:15-16அப் 7:51-52எபி 12:25எரே 11:7-10எரே 13:10-11எரே 16:12 அவர்களைக்கொண்டு அவர்: உங்களில் அவனவன் தன்தன் பொல்லாதவழியையும், உங்கள் செயல்களின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, யெகோவா உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த தேசத்தில் சதாகாலமும் குடியிருந்து, எரே 7:7ஆதி 17:8ஏசா 55:6-7எரே 17:25எசேக் 18:30எரே 18:11எரே 35:15யோனா 3:8-10 அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன். உபா 8:191 இராஜா 14:222இராஜா 17:35உபா 6:14எரே 35:15எரே 7:61 இராஜா 11:4-10உபா 13:2 நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமூட்டுவதற்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 2இராஜா 21:15நீதி 8:362இராஜா 17:17உபா 32:21எரே 32:30-33எரே 7:18-19நெகே 9:26 நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், இதோ, நான் வடக்கேயிருக்கிற எல்லா வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்திற்கு விரோதமாகவும், இதின் குடிமக்களுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா மக்களுக்கும் விரோதமாகவும் வரச்செய்து, அவைகளை அழிவுக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய பழி போடுதலாகவும், நிலையான வனாந்திரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 13:3எரே 1:15எரே 18:16எசேக் 29:18-20ஆப 1:6-10எரே 43:10எரே 6:22-261 இராஜா 9:7-8 மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும், எந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 7:34எசேக் 26:13எரே 16:9வெளி 18:22-23எரே 33:10-11பிரச 12:2-4எஸ்த 3:13எஸ்த 7:4 இந்த தேசமெல்லாம் வனாந்திரமும் பாழுமாகும்; இந்த மக்களோ, எழுபது வருடங்களாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள். தானி 9:2சகரி 1:122 நாளாக 36:21-22எரே 25:12சகரி 7:5ஏசா 23:15-17எரே 12:11-12எரே 4:27 எழுபது வருடங்கள் முடிந்த பின்பு, நான் பாபிலோன் ராஜாவிடத்திலும், அந்த மக்களிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நிலையான பாழிடமாக்கி, தானி 9:2ஏசா 13:19எரே 29:10ஏசா 14:23எரே 50:1-46எரே 51:62-642இராஜா 24:1தானி 5:1-31 நான் அந்தத் தேசத்திற்கு விரோதமாக சொன்ன என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா எல்லா மக்களுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 1:10எரே 1:5தானி 5:28தானி 5:31வெளி 10:11 அநேக தேசங்களும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைப்படுத்துவார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் செயல்களுக்குத்தகுந்ததாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குத்தகுந்ததாகவும் பதில் அளிப்பேன் என்கிறார். எரே 51:6எரே 27:7எரே 50:9எரே 50:41ஏசா 14:2ஏசா 45:1-3ஏசா 66:6தானி 5:28

தேவனின் கோபமுள்ள பாத்திரம்

இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற மக்கள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போக, சங் 75:8ஏசா 51:17யோபு 21:20வெளி 14:10ஏசா 51:22எரே 51:7எரே 13:12-14சங் 11:6 இந்தக் கடுங்கோபமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லோருக்கும் அதில் குடிக்கக்கொடு என்றார். எரே 51:7நாகூ 3:11எசேக் 23:32-34எரே 25:27எரே 51:39புலம் 4:21வெளி 14:10வெளி 16:9-11 அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் யெகோவாவுடைய கையிலிருந்து வாங்கி, யெகோவா என்னை அனுப்பின எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தேன். எரே 1:10எரே 25:28எசேக் 43:3எரே 27:3எரே 46:1-28 எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும், அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்திரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய பழிபோடுதலும் சாபமுமாக்கிப்போட குடிக்கக்கொடுத்தேன். எரே 24:9எரே 44:22சங் 60:31 இராஜா 8:241 பேது 4:172இராஜா 22:19ஆமோ 2:5ஆமோ 3:2 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் ஊழியக்காரருக்கும், அவன் பிரபுக்களுக்கும், அவனுடைய எல்லா மக்களுக்கும், எரே 46:13-26எரே 46:2நாகூ 3:8-10எசேக் 29:1-21எரே 43:9-11 கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தின் எல்லா ராஜாக்களுக்கும், பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும், காசாவுக்கும், எக்ரோனுக்கும், அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும், யோபு 1:1எசேக் 30:5ஏசா 20:1எரே 50:37புலம் 4:21யாத் 12:38எரே 25:24எரே 47:1-7 ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் மக்களுக்கும், எரே 48:1எரே 9:26சங் 137:7ஆமோ 1:11எசேக் 25:2-14எசேக் 32:29எசேக் 35:1-15ஏசா 15:1-9 தீருவின் எல்லா ராஜாக்களுக்கும், சீதோனின் எல்லா ராஜாக்களுக்கும், மத்திய தரைக் கடலுக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும், எரே 47:4ஆமோ 1:3-5ஆமோ 1:9-10எசேக் 26:1-21எசேக் 28:22-23எசேக் 29:18எசேக் 32:30எரே 27:3 தேதானுக்கும், தேமாவுக்கும், பூஸுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும், எரே 9:26எரே 49:32எரே 49:8ஆதி 22:21யோபு 6:191 நாளாக 1:30எசேக் 25:13எசேக் 27:20 அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்திரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும், 2 நாளாக 9:14எரே 25:20எசேக் 30:5எரே 50:371 இராஜா 10:15எசேக் 27:21ஆதி 25:12-16ஆதி 25:2-4 சிம்ரியின் எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமின் எல்லா ராஜாக்களுக்கும், மேதியாவின் எல்லா ராஜாக்களுக்கும், ஆதி 10:22ஏசா 11:11ஏசா 13:17எரே 49:34-39எரே 51:11எரே 51:28தானி 5:28தானி 8:2 வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின் மீதிலுள்ள எல்லா தேசத்து ராஜ்யங்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிறகு குடிப்பான் என்றார். எரே 51:41எரே 25:9தானி 5:1-31எசேக் 32:30ஆப 2:16ஏசா 13:1-14ஏசா 47:1-15எரே 25:12 நீங்கள் குடித்து, வெறித்து, வாந்தியெடுத்து, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல். ஆப 2:16எரே 25:16எசேக் 21:4-5ஏசா 51:21புலம் 4:21உபா 32:42எசேக் 24:21-25ஏசா 63:6 அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்து முடிக்கவேண்டும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று சொல். யோபு 34:33அப் 4:28தானி 4:35எபே 1:11ஏசா 14:24-27ஏசா 46:10-11எரே 4:28எரே 49:12 இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் பெயர் சூட்டப்பட்ட நகரத்தில் துவங்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிமக்களின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 1 பேது 4:17எசேக் 38:21நீதி 11:311 இராஜா 8:43எசேக் 9:6எரே 49:12ஒபதி 1:16தானி 9:18-19 ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவர்களை நோக்கி: யெகோவா உயரத்திலிருந்து சத்தமிட்டு, தமது பரிசுத்த இடத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய இருப்பிடத்திற்கு விரோதமாக மிகவும் சத்தமிட்டு, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல பூமியினுடைய எல்லாக் குடிமக்களுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார். ஆமோ 1:2ஏசா 42:13யோவே 3:16ஏசா 16:9சங் 78:651 இராஜா 9:32 நாளாக 30:27ஆமோ 3:8 ஆரவாரம் பூமியின் கடைசிவரை போய் சேரும்; தேசங்களுடன் யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான அனைவருடனும் அவர் நியாயத்திற்குள் நுழைவார்; துன்மார்க்கரைப் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பார் என்று யெகோவா சொல்லுகிறார். ஓசி 4:1யோவே 3:2ஏசா 66:16மீகா 6:2எசேக் 20:35-36ஓசி 12:2ஏசா 34:8எசேக் 38:22 இதோ, தேசத்திலிருந்து தேசத்திற்கு தீமை பரவும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புயல் எழும்பும். ஏசா 34:2எரே 23:192 நாளாக 15:6ஏசா 30:30எரே 30:23ஏசா 5:28ஏசா 66:18லூக் 21:10 அக்காலத்தில் பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைவரை யெகோவாவால் கொலை செய்யப்பட்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்புவார் இல்லாமலும், சேர்க்கப்படாமலும், அடக்கம் செய்யப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள். ஏசா 66:16எரே 8:2சங் 79:3ஏசா 5:25எரே 16:4-72இராஜா 9:37எசேக் 39:4-20ஏசா 34:2-8 மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரபலமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள். எரே 6:262 நாளாக 36:10ஆமோ 5:11தானி 11:8எசேக் 27:30-31எசேக் 34:16-17எசேக் 34:20ஏசா 10:12 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரபலமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது. யோபு 11:20ஆமோ 2:14ஆமோ 9:1-3தானி 5:30எசேக் 17:15எசேக் 17:18ஏசா 2:12-22ஏசா 24:21-23 தங்கள் மேய்ச்சலைக் யெகோவா பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரபலமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும். எரே 4:8எரே 25:34 அவர்கள் சமாதானமாயிருந்த இருப்பிடங்கள் யெகோவாவுடைய கோபத்தின் எரிச்சலால் அழிந்தன ஏசா 27:10-11ஏசா 32:14 அவர் பதுங்கியிருந்து புறப்படும் சிங்கத்தைப் போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய கோபத்தினாலும், அவனுடைய கடுங்கோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழானது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். எரே 4:7ஓசி 13:7-8ஓசி 5:14எரே 5:6ஆமோ 8:8ஓசி 11:10எரே 49:19எரே 50:44