எரேமியா 50

Jeremiah 50
அத்தியாயம் 50

பாபிலோனைக்குறித்த செய்தி

யெகோவா தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்திற்கும் விரோதமாகச் சொன்ன வசனம்: எரே 25:26-27ஏசா 13:1-3எரே 51:1-142 பேது 1:212 சாமு 23:2அப் 7:4ஆப 2:5-20ஏசா 14:4 பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் வெட்கமடைந்தது; அதினுடைய சிலைகள் நொறுங்கிப்போயின என்று மக்களுக்குள்ளே அறிவித்துப் பிரபலப்படுத்துங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்செய்யுங்கள். ஏசா 46:1ஏசா 21:9எரே 51:44எரே 51:47ஏசா 12:4ஏசா 13:2ஏசா 37:19ஏசா 39:1 அதற்கு விரோதமாக வடக்கிலிருந்து ஒரு தேசம் வந்து, அந்த தேசத்தை அழித்துப்போடும்; அதில் குடியிருப்பவரில்லை; மனிதருடன் மிருகங்களும் ஓடிப்போய்விடும். எரே 51:11செப்ப 1:3எரே 50:9எரே 51:62யாத் 12:12ஆதி 6:7ஏசா 13:17-22ஏசா 13:5-10 அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் மக்கள் வருவார்கள்; அவர்களும் யூதா மக்களும் ஏகமாக அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஓசி 1:11ஓசி 3:5எரே 31:31ஏசா 11:12-13எசேக் 37:16-22எசேக் 39:25எஸ்றா 3:12-13ஏசா 14:1 மறக்கமுடியாத நிலையான உடன்படிக்கையினால் நாம் யெகோவாவைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராக முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிறவழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள். எரே 32:40ஏசா 35:8எபி 8:6-10எரே 6:16ஏசா 2:3-5ஏசா 55:3ஏசா 56:6-7மீகா 4:1-2 என் மக்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறச்செய்து, மலைகளில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள். ஏசா 53:6மத் 9:36எசேக் 34:14மத் 10:6எரே 50:17சங் 119:176எசேக் 34:4-12எரே 3:6 அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லோரும் அவர்களைத் தாக்கினார்கள்; அவர்களுடைய எதிரிகள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதி தங்குமிடத்தில் யெகோவாவுக்கு விரோதமாக, தங்கள் முற்பிதாக்கள் நம்பின யெகோவாவுக்கு விரோதமாகவே, பாவம் செய்தார்கள் என்றார்கள். எரே 14:8எரே 2:3எரே 31:23எரே 40:2-3சகரி 11:5எரே 50:171 தீமோ 1:1தானி 9:16 பாபிலோனின் நடுவிலிருந்து ஓடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல இருங்கள். ஏசா 48:20எரே 51:6வெளி 18:4எரே 51:452 கொரி 6:17ஏசா 52:1எண் 16:26நீதி 30:31 இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய மக்கள் கூட்டத்தை எழுப்பி, அதை வரச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்செய்வார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் வீணாகத் திரும்புவதில்லை. 2 சாமு 1:22எஸ்றா 1:1-2ஏசா 13:17-18ஏசா 13:2-5ஏசா 21:2ஏசா 41:25ஏசா 45:1-4எரே 15:14 கல்தேயா கொள்ளையாகும்: அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லோரும் பரிபூரணமடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 25:12ஏசா 33:23ஏசா 33:4ஏசா 45:3எரே 27:7வெளி 17:16 தெரிந்தக்கொண்ட என் ஜனத்தை கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலிமையான எருதுகளைப்போல முழக்கம் போடுகிறீர்களே. ஏசா 47:6ஆமோ 4:1உபா 32:15எசேக் 25:15-17எசேக் 25:3-8எசேக் 26:2-3ஓசி 10:11ஏசா 10:6-7 உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் மக்களுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்திரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள். எரே 51:43கலா 4:26ஏசா 13:20-22ஏசா 14:22ஏசா 23:13எரே 25:12எரே 25:26எரே 49:2 யெகோவாவின் கோபத்தினால் அது குடியற்றதும் பெரும் பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, நடுங்குவான். எரே 18:16எரே 49:17ஆப 2:6-18ஏசா 14:4-17எரே 19:8எரே 25:12எரே 51:37யோபு 27:23 நீங்கள் எல்லோரும் பாபிலோனுக்கு விரோதமாகச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பார்க்காதீர்கள்; அது, யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது. எரே 50:29ஆப 2:171 சாமு 17:20ஆப 2:8எரே 50:42எரே 50:7எரே 50:92 சாமு 10:9 அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது யெகோவா வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள். எரே 51:58எரே 46:10எரே 51:6வெளி 18:61 நாளாக 29:242 நாளாக 30:8எரே 51:11எரே 51:14 விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்செய்யுங்கள்; கொல்லுகிற பட்டயத்திற்குத் தப்ப அவரவர் தங்கள் மக்களிடத்திற்குத் திரும்பிக்கொண்டு, அவரவர் தங்கள் தேசத்திற்கு ஓடிப்போவார்கள். எரே 46:16எரே 51:9ஏசா 13:14யோவே 1:11ஆமோ 5:16எரே 25:38எரே 51:23 இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்ட ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான். எரே 2:151 பேது 2:252இராஜா 18:9-13எரே 50:6யோவா 10:10-12யோவே 3:22 நாளாக 28:202 நாளாக 32:1-23 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவைத் தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து, ஏசா 10:12நாகூ 1:1-3எசேக் 31:3-17ஏசா 37:36-38செப்ப 2:13-15 இஸ்ரவேலை அதின் இடத்திற்குத் திரும்பிவரச்செய்வேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும். ஆமோ 9:14-15எசேக் 34:13-14எரே 23:3எரே 24:6-7எரே 3:18எரே 30:10எரே 30:18எரே 31:14 அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடைக்காதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். மீகா 7:19எரே 31:34ஏசா 1:9ஏசா 43:25எபி 10:17-18சங் 103:12ரோம 8:33-34ஏசா 44:22 மெரதாயீம் தேசத்திற்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்செய்து, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 23:231 சாமு 15:11-241 சாமு 15:32 நாளாக 36:232இராஜா 18:252 சாமு 16:11ஏசா 10:6ஏசா 44:28 தேசத்தில் போரின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு. எரே 4:19-21எரே 51:54-56ஏசா 21:2-4 சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! மக்களுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போனது! எரே 51:20-24ஏசா 14:12-17ஏசா 14:4-6வெளி 18:16 பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதில் சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ யெகோவாவுடன் போரிட்டாயே. தானி 5:30-31யோபு 9:4யோபு 40:2யோபு 40:92 தெச 2:4பிரச 9:12யாத் 10:3ஏசா 13:11 யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய கோபத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்தில் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற செயல். எரே 51:25எரே 51:55ஆமோ 3:6எரே 50:15எரே 51:20ஏசா 13:17-18ஏசா 13:2-5ஏசா 14:22-24 கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள். ஏசா 14:23ஏசா 45:3எரே 50:10ஏசா 10:6ஏசா 25:10ஏசா 5:26ஏசா 63:3-4எரே 50:13 அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேருவதாக; ஐயோ, அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே. ஏசா 34:7எரே 46:21எரே 48:44சங் 22:12சங் 37:13எசேக் 39:17-20எசேக் 7:5-7எரே 27:7 நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனில் அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும். ஏசா 48:20எரே 50:15புலம் 1:10தானி 5:23எரே 51:10-11புலம் 2:6-7சங் 149:6-9தானி 5:3-5 பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் முகாமிடுங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் செயலுக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவுக்கு விரோதமாக இடும்பு செய்தது. ஏசா 47:10எரே 51:56தானி 4:37யாத் 10:3எரே 50:14-15வெளி 18:62 தெச 2:4தானி 11:36 ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் போர்வீரர் எல்லோரும் அந்நாளில் சங்காரமாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 49:26எரே 18:21எரே 9:21ஏசா 13:15-18எரே 48:15எரே 50:36எரே 51:3-4எரே 51:56-57 இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது. எரே 21:13எரே 50:291 பேது 5:5எசேக் 39:1ஆப 2:4-5யாக் 4:6நாகூ 2:13தானி 4:30-31 பெருமையுள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் நெருப்பைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லோரையும் பட்சிக்கும். எரே 21:14எரே 49:27ஏசா 10:12-15ஆமோ 2:5வெளி 18:8ஆமோ 1:10ஆமோ 1:12ஆமோ 1:14 சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் ஏகமாக ஒடுக்கப்பட்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின அனைவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள். யாத் 9:2-3ஏசா 14:17ஏசா 58:6யாத் 9:17-18ஏசா 47:6எரே 50:17-18யாத் 5:2யாத் 8:2 அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்; தேசத்தை இளைப்பாறச்செய்வதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கச்செய்வதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார். ஏசா 54:5ஏசா 41:14ஏசா 47:4எரே 15:21எரே 51:36ஏசா 43:14மீகா 7:9சங் 35:1 பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று யெகோவா சொல்லுகிறார். எரே 47:6தானி 5:1-2தானி 5:30தானி 5:7-8ஓசி 11:6எரே 51:57எசேக் 14:2ஏசா 19:11-13 பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள். எரே 49:22ஏசா 44:25நாகூ 3:131 தீமோ 4:21 தீமோ 6:42 நாளாக 25:162 சாமு 17:142 தெச 2:9-11 பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலதேசத்தின் மக்கள் அனைவர்மேலும் வரும், அவர்கள் தைரியமற்றவர்களாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும். எரே 51:30நாகூ 3:13எரே 25:20எரே 48:41எரே 51:21ஏசா 19:16எசேக் 30:5ஏசா 45:3 வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும், அவைகள் வறண்டுபோகும்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள். ஏசா 44:27எரே 50:2வெளி 16:12எரே 51:47எரே 51:52அப் 17:16தானி 3:1-30தானி 5:4 ஆகையால் காட்டுமிருகங்களும் நரிகளும் அதில் குடியிருக்கும்; தீக்கோழிகள் அதில் தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் குடியிருப்பதுமில்லை. ஏசா 13:20-22வெளி 18:2எரே 25:12ஏசா 14:23ஏசா 34:11-17எரே 50:12-13எரே 51:26எரே 51:37-38 தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை. ஆதி 19:24-252 பேது 2:6ஏசா 13:19-20எரே 49:18யூதா 1:7லூக் 17:28-30ஆமோ 4:11உபா 29:23 இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள். எரே 51:27-28ஏசா 13:2-5எரே 50:9எரே 6:22-23ஏசா 13:17-18எரே 25:14எரே 50:2-3எரே 51:1-2 அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியவர்கள்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் மகளே, அவர்கள் உனக்கு விரோதமாக போருக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள். ஏசா 5:30ஏசா 13:17-18ஏசா 47:6எரே 47:3எரே 8:16ஆப 1:6-8ஏசா 14:6ஏசா 5:28 அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும். எரே 49:24எரே 51:31தானி 5:5-6ஏசா 13:6-8ஏசா 21:3-4எரே 49:22 இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தங்குமிடத்திற்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியில் ஓடிவரச்செய்வேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டம்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்? எரே 49:19-21யாத் 15:11ஏசா 40:25ஏசா 41:25ஏசா 43:10ஏசா 46:11ஏசா 46:9சங் 89:6 ஆகையால் யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்திற்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்களுடைய தங்குமிடங்களை அவர் பாழாக்குவார். எரே 49:20எரே 51:10-11அப் 4:28எபே 1:11ஏசா 14:24-27ஏசா 46:10-11எரே 37:10சங் 33:10-11 பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் மக்களுக்குள்ளே கேட்கப்படும். எரே 49:21எசேக் 26:18எசேக் 31:16வெளி 18:9-19எசேக் 32:10ஏசா 14:9-10