யோபு 31

Job 31

“நான் ஒரு பெண்ணையும் இச்சையுடன் பார்க்கமாட்டேன், யாக் 1:14-15மத் 5:28-291 யோவா 2:16சங் 119:37நீதி 6:252 சாமு 11:2-4நீதி 4:25ஆதி 6:2

என என் கண்களோடு ஒப்பந்தம் செய்தேன்.

ஆனாலும் உன்னதத்தில் இருக்கும் இறைவனிடமிருந்து என்ன பங்கு? யோபு 20:29எபி 13:4யோபு 27:13

உன்னதத்தில் இருக்கும் எல்லாம் வல்லவர் அளிக்கும் சொத்து என்ன?

கொடியவனுக்கு பேராபத்தும், யோபு 21:30யோபு 34:221 தெச 5:32 பேது 2:12 தெச 1:9ஏசா 28:21யூதா 1:7மத் 7:13

தவறு செய்பவர்களுக்குப் பேரழிவும் அல்லவா?

அவர் என் வழிகளைக் காணவில்லையோ? யோபு 34:212 நாளாக 16:9நீதி 5:21யோபு 14:16எரே 32:19நீதி 15:3எரே 16:17சங் 139:1-3

என் ஒவ்வொரு காலடியையும் எண்ணவில்லையோ?

“நான் பொய்யாய் நடந்திருந்து, நீதி 12:11சங் 44:20-21எசேக் 13:8எரே 2:5மீகா 2:11சங் 12:2சங் 4:2சங் 7:3-5

என் கால்கள் ஏமாற்ற விரைந்திருந்தால்,

இறைவன் தராசில் என்னை நிறுத்தட்டும், தானி 5:27சங் 7:8-91 சாமு 2:3ஏசா 26:7மத் 7:23யோபு 27:5-6யோபு 6:2யோசு 22:22

நான் குற்றமற்றவன் என்பதை அவர் அறிந்துகொள்வார்.

என் காலடிகள் பாதையைவிட்டு விலகியிருந்தால், எண் 15:39பிரச 11:9மத் 5:29எசேக் 14:3எசேக் 14:7எசேக் 6:9ஏசா 33:15யோபு 23:11

அல்லது என் உள்ளம் என் கண்களைப் பின்பற்றியிருந்தால்,

அல்லது என் கைகள் கறைப்பட்டிருந்தால்,

அப்பொழுது நான் விதைப்பதை மற்றவர்கள் உண்ணட்டும், லேவி 26:16மீகா 6:15உபா 28:38உபா 28:30-33உபா 28:51நியாயாதி 6:3-6யோபு 15:30யோபு 18:19

என் விளைச்சல் வேரோடே பிடுங்கப்படட்டும்.

“என் உள்ளம் ஒரு பெண்ணால் கவரப்பட்டு, 1 இராஜா 11:4பிரச 7:26நியாயாதி 16:5ஓசி 7:4எரே 5:8யோபு 24:15-16நெகே 13:26நீதி 2:16-19

அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,

அப்பொழுது என் மனைவி இன்னொருவனுக்கு மாவரைப்பாளாக; எரே 8:102 சாமு 12:11உபா 28:30ஏசா 47:2யாத் 11:5ஓசி 4:13-14மத் 24:41

பிற மனிதர்கள் அவளுடன் உறவுகொள்ளட்டும்.

ஏனெனில், அது வெட்கக்கேடான, லேவி 20:10உபா 22:22-24யோபு 31:28ஆதி 38:24யாத் 20:14எசேக் 16:38ஆதி 20:9நீதி 6:29-33

தண்டிக்கப்படவேண்டிய பாவமாயிருக்கும்.

அது பாதாளம்வரை அழிக்கும் நெருப்பு; நீதி 6:27எரே 5:7-9எபி 13:4யோபு 15:30யோபு 20:28யோபு 26:6மல்கி 3:5நீதி 3:33

அது என் விளைச்சலை வேரோடே பிடுங்கிவிடும்.

“என் வேலைக்காரருக்கும், கொலோ 4:1உபா 15:12-15உபா 24:14-15எபே 6:9யாத் 21:20-21யாத் 21:26-27எரே 34:14-17லேவி 25:43

வேலைக்காரிகளுக்கும் எனக்கு எதிராக மனக்குறை இருந்தபோது,

நான் அவர்களுக்கு நீதிவழங்க மறுத்திருந்தால்,

இறைவன் என்னை எதிர்கொள்ளும்போது, நான் என்ன செய்வேன்? யாக் 2:13சங் 10:12-15சங் 44:21சங் 9:12சங் 9:19ரோம 3:19சகரி 2:13ஓசி 9:7

அவர் என்னிடம் கணக்குக் கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்?

என்னை கருப்பையில் உண்டாக்கியவர் அவர்களையும் உண்டாக்கவில்லையோ? நீதி 14:31யோபு 34:19மல்கி 2:10நீதி 22:2யோபு 10:8-12ஏசா 58:7யோபு 10:3நெகே 5:5

எங்கள் இருவரையுமே எங்கள் தாய்மாரின் வயிற்றில் உருவாக்கியவர் அவரல்லவோ?

“நான் ஏழைகளின் தேவைகளைக் கொடுக்க மறுத்து, உபா 15:7-10ஏசா 38:14அப் 11:29உபா 28:32கலா 2:10யோபு 20:19யோபு 22:7-9யோபு 5:16

விதவைகளின் கண்களைக் கண்ணீர் விடுவதினால் இளைக்கப் பண்ணியிருக்கிறேனா?

அல்லது அநாதைகளோடு என் உணவைப் பகிர்ந்துகொள்ளாமல், 1 யோவா 3:17அப் 4:32உபா 15:11உபா 15:14எசேக் 18:16எசேக் 18:7யாக் 1:27யோவா 13:29

நான் மட்டும் சாப்பிட்டிருக்கிறேனா?

ஆனால் நானோ இளவயதுமுதல் அவர்களை ஒரு தகப்பனைப்போல் வளர்த்தேனே;

என் பிறப்பிலிருந்தே விதவைகளுக்கு நான் வழிகாட்டினேனே.

உடுக்க உடையின்றி ஒருவன் அழிவதையோ, யோபு 22:61 யோவா 3:182 நாளாக 28:15அப் 9:39ஏசா 58:7யாக் 2:16யோபு 24:4யோபு 29:13

அல்லது ஏழை ஒருவன் உடையின்றி இருப்பதையோ நான் கண்டும்,

என் செம்மறியாடுகளின் கம்பளி, உபா 24:13யோபு 29:11

அவன் குளிரைப் போக்காததினால் அவன் இருதயம் என்னை ஆசீர்வதிக்காமல் இருக்குமோ?

நீதிமன்றத்தில் 1 எனக்குச் செல்வாக்கு இருப்பதை நான் அறிந்திருந்தும், யோபு 22:9யோபு 29:12எசேக் 22:7எரே 5:28யோபு 24:9யோபு 6:27மீகா 2:1-2மீகா 7:3

அநாதைக்கு விரோதமாக நான் எனது கைகளை உயர்த்தியிருந்தால்,

என் தோள்பட்டை தோளிலிருந்து கழன்று போகட்டும், யோபு 31:10யோபு 31:40யோபு 38:15யோசு 22:22-23சங் 137:6சங் 7:4-5

அது மூட்டிலிருந்து முறிந்து போகட்டும்.

இறைவனுடைய தண்டனைக்கு நான் பயந்ததினாலும், யோபு 13:11சங் 119:1202 கொரி 5:11ஏசா 13:6சங் 76:7ஆதி 39:9யோபு 20:23யோபு 21:20

அவருடைய மாட்சிமையின் பக்தி எனக்கிருந்ததினாலும்

தீமையை என்னால் செய்ய முடியவில்லை.

“நான் என் நம்பிக்கையை பொன்னின்மேல் வைத்து, உபா 8:12-14நீதி 11:28சங் 49:6-7சங் 52:71 தீமோ 6:101 தீமோ 6:17லூக் 12:15நீதி 10:15

சுத்த தங்கத்தைப் பார்த்து, ‘நீயே என் பாதுகாப்பு’ எனச் சொல்லியிருந்தால்,

என் செல்வம் பெரியதென்றும், சங் 62:10தானி 4:30உபா 8:17-18எஸ்த 5:11எசேக் 28:5ஆப 1:16ஓசி 12:8ஏசா 10:13-14

அதை என் கைகளே சேர்த்ததென்றும் நான் மகிழ்ந்திருந்தால்,

பிரகாசமுள்ள சூரியனையும், எசேக் 8:16உபா 4:19உபா 17:32இராஜா 23:112இராஜா 23:5எரே 44:17எரே 8:2உபா 11:16

தன் மகிமையில் நகர்ந்து செல்லும் சந்திரனையும் கண்டு அதைப் பெரிதாக மதித்து,

என் மனம் இரகசியமாகக் மயங்கி, உபா 13:6உபா 11:161 இராஜா 19:18ஓசி 13:2ஏசா 44:20சங் 2:12ரோம 1:21ரோம 1:28

நான் அவைகளுக்கு மரியாதை முத்தமிட்டிருந்தால்,

அப்பொழுது இவைகளும் தண்டனைக்குரிய பாவங்களாய் இருந்திருக்கும்; உபா 17:2-7யோபு 31:11சங் 50:6உபா 17:9ஆதி 18:25நியாயாதி 11:27யோபு 23:7யோபு 9:15

நான் என் உன்னதத்திலுள்ள இறைவனுக்கு உண்மையற்றவனாய் இருந்திருப்பேன்.

“என் பகைவனுக்கு வரும் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்தேனோ? நீதி 24:17-18நீதி 17:5ஒபதி 1:12சங் 35:13-14சங் 35:25-262 சாமு 1:122 சாமு 16:5-82 சாமு 4:10-11

தீமை அவனுக்கு வந்தபோது, நான் ஏளனம் செய்ததுண்டோ?

இல்லையே! நான் அவனுடைய வாழ்வுக்கு எதிராகச் சாபமிட்டுப் 1 பேது 3:9ரோம 12:141 பேது 2:22-23யாத் 23:4-5யாக் 3:9-10மத் 5:22மத் 5:43-44பிரச 5:2

பாவம் செய்யும்படி என் வாயை அனுமதித்ததில்லையே.

‘யோபுவின் உணவை உண்டு திருப்தியடையாதவன் யார்?’ 1 சாமு 24:101 சாமு 24:41 சாமு 26:82 சாமு 16:9-102 சாமு 19:21-22எரே 40:15-16யோபு 19:22யோபு 22:7

என என் வீட்டிலுள்ள மனிதர் ஒருபோதும் சொல்லாது இருந்ததுண்டோ?

வழிப்போக்கருக்கு என் வாசல்களைத் திறந்தேன் எபி 13:2ஆதி 19:2-3நியாயாதி 19:20-211 பேது 4:9ஏசா 58:7மத் 25:35ரோம 12:131 தீமோ 5:10

பிறர் வீதியில் தன் இரவைக் கழிக்கவில்லையே!

மனிதர் செய்வதுபோல, என் குற்றத்தை என் உள்ளத்தில் ஒளித்து, நீதி 28:13அப் 5:81 யோவா 1:8-10ஆதி 3:12ஓசி 6:7யோசு 7:11ஆதி 3:7-8

என் பாவத்தை மறைத்தேனோ?

நான் மக்கள் கூட்டத்திற்குப் பயந்ததாலும், யாத் 23:2நீதி 29:252 கொரி 5:16ஆமோ 5:11-13எஸ்த 4:11எஸ்த 4:14யாத் 32:27எரே 38:16

குலத்தவர்களின் இகழ்ச்சிக்கு அஞ்சினதாலும்

வெளியே போகாமல் மவுனமாய் இருந்தேனோ?

“நான் சொல்வதைக் கேட்க யாரும் இல்லையோ? யோபு 13:21-22யோபு 40:4-5யோபு 13:24யோபு 13:3யோபு 17:3யோபு 19:23-24யோபு 19:7யோபு 23:3-7

இதோ நான் சொன்ன எனது எதிர்வாதத்தில் கையொப்பமிடுகிறேன்.

எல்லாம் வல்லவர் எனக்குப் பதிலளிக்கட்டும்,

என்னைக் குற்றம் சாட்டுகிறவர் தனது குற்றச்சாட்டை எழுதிக்கொடுக்கட்டும்.

நிச்சயமாக அதை நான் என் தோளின்மேல் வைத்து, ஏசா 22:22யாத் 28:12ஏசா 62:3யோபு 29:14பிலி 4:1

ஒரு மகுடத்தைப்போல் சூட்டிக்கொள்வேன்.

நான் ஒரு இளவரசனைப்போல் அவரை அணுகி, யோபு 13:15எபே 3:12எபி 4:15-161 யோவா 3:19-21ஆதி 32:28யோபு 1:3யோபு 14:16யோபு 29:25

என் ஒவ்வொரு காலடிக்கும் கணக்குக் கொடுப்பேன்.

“என் நிலம் எனக்கெதிராக அழுது புலம்பினாலும், ஆப 2:11யாக் 5:4யோபு 20:27சங் 65:13

அதின் வரப்புகள் கண்ணீரால் நனைந்திருந்தாலும்,

நான் பணம் கொடுக்காமல் அதின் விளைவை விழுங்கியிருந்தாலும், 1 இராஜா 21:19யாக் 5:41 இராஜா 21:13-16எசேக் 22:12-13எசேக் 22:6ஆதி 4:12ஏசா 26:21நீதி 1:19

அல்லது அதின் குத்தகைக்காரனை உள்ளமுடையச் செய்திருந்தாலும்,

அந்த நிலத்தில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், ஆதி 3:17-18ஏசா 7:23மல்கி 1:3சங் 72:20செப்ப 2:9

வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்.”

யோபுவின் வார்த்தைகள் இத்துடன் முடிவடைகின்றன.