சங்கீதங்கள் 125

Psalms 125
சங்கீதம் 125

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் எரே 17:7-8சங் 62:2நீதி 3:5-6சங் 118:8-9சங் 120:1சங் 25:2சகரி 1:17சங் 34:22

என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.

மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், சகரி 2:5ஏசா 4:5சங் 121:8யோவா 10:28-29உபா 33:27சங் 34:7புலம் 4:12

யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும்

தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.

நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், ஏசா 14:5-6சங் 89:22நீதி 22:81 கொரி 10:13வெளி 2:10ஏசா 27:81 சாமு 24:10ஏசா 10:5

கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது;

இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத்

தங்கள் கைகளை நீட்டலாம்.

யெகோவாவே, நல்லவர்களுக்கு, சங் 7:10சங் 84:11சங் 119:68சங் 94:15சங் 119:80சங் 36:10சங் 51:181 யோவா 3:17-24

இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.

குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, ஏசா 59:8நீதி 2:15சங் 128:6கலா 6:16சங் 40:4யோவா 14:27மத் 7:23சங் 101:3

யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார்.

இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.