சங்கீதங்கள் 137

Psalms 137
சங்கீதம் 137

பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, எசேக் 1:1எசேக் 3:15எசேக் 1:3புலம் 2:10-11புலம் 2:18புலம் 3:48எஸ்றா 8:21எஸ்றா 8:31

சீயோனை நினைத்தபோது அழுதோம்.

அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல் எசேக் 26:13ஏசா 24:8வெளி 18:22ஆமோ 8:10சங் 33:2சங் 81:2

எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.

ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள், லூக் 21:6புலம் 2:15-16மீகா 3:12சங் 9:141 நாளாக 16:7ஏசா 35:10எரே 26:18எரே 31:12-13

அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்;

எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி,

“சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்” என்று சொன்னார்கள்.

வேறுநாட்டு மண்ணில் இருக்கையில் ஆமோ 8:3ஏசா 22:12ஓசி 9:4புலம் 5:14-15பிரச 3:4ஏசா 49:21

யெகோவாவின் பாடல்களை எங்களால் எப்படிப் பாடமுடியும்?

எருசலேமே! நான் உன்னை மறந்தால், தானி 6:10-11எரே 51:50ஏசா 62:1சங் 122:5-9சங் 84:10சகரி 11:17ஏசா 62:6-7நெகே 1:2-4

என் வலதுகை அதின் திறமையை மறப்பதாக.

நான் உன்னை நினையாவிட்டால், எசேக் 3:26சங் 22:15ஏசா 41:17யோபு 29:10சங் 84:10புலம் 4:41 தெச 3:7-9அப் 20:24

எருசலேமை எனது மேலான மகிழ்ச்சியாகக்

நான் கருதாவிட்டால்,

என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

யெகோவாவே! எருசலேம் கைப்பற்றபட்ட நாளிலே புலம் 4:21-22எசேக் 25:12-14எரே 49:7-22ஒபதி 1:10-141 சாமு 15:2ஆமோ 1:11எசேக் 35:2ஆப 3:13

ஏதோமியர் செய்தவற்றை நினைவுகூரும்;

“அதை இடித்துப்போடுங்கள்,

அதின் அஸ்திபாரங்கள்வரை அதை இடித்துப்போடுங்கள்!” என்று சொன்னார்களே.

பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே, வெளி 18:6ஏசா 14:4-24எரே 25:12-14ஏசா 21:1ஏசா 47:1-15வெளி 14:8-11ஏசா 13:1-22ஏசா 44:28

நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக

உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

உன் குழந்தைகளைப் பிடித்து, ஏசா 13:16ஓசி 13:16நாகூ 3:102இராஜா 8:12ஓசி 10:14

அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.