சங்கீதங்கள் 32

Psalms 32
சங்கீதம் 32

மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.

யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ, ரோம 4:6-8ஏசா 44:22சங் 85:2அப் 13:38-39ஏசா 43:25மீகா 7:18-19வெளி 22:14ஏசா 1:18

யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ,

அவர்கள் பாக்கியவான்கள்.

யாருடைய பாவத்தைக்குறித்து, யோவா 1:472 கொரி 5:19-21வெளி 14:51 பேது 2:1-22 கொரி 1:12லேவி 17:4ரோம 5:13

அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ,

யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது, நீதி 28:13சங் 38:3சங் 38:8சங் 22:1புலம் 3:8ஓசி 7:14யோபு 30:30சங் 31:9-10

தினமும் என் அழுகையினால்,

என் எலும்புகள் பலவீனமாயிற்று.

இரவும் பகலும் 1 சாமு 5:11சங் 38:2-8யோபு 33:7சங் 39:10-11சங் 22:15சங் 102:3-4சங் 90:6-71 சாமு 5:6-7

உமது கரம் பாரமாயிருந்தது;

ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல,

என் பெலன் வறண்டுபோயிற்று.

அதின்பின் நான் என் பாவத்தை நீதி 28:132 சாமு 12:13சங் 51:3-5சங் 38:18ஏசா 65:24சங் 30:51 யோவா 1:8-10ஓசி 6:1

உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்;

என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை.

நான், “யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்”

என்று சொன்னேன்;

நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர்.

ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில் ஏசா 55:6ஏசா 43:22 கொரி 6:2நீதி 1:28சங் 34:2-5சங் 4:3மத் 7:24-27யோவா 7:34

உம்மை நோக்கி மன்றாடட்டும்;

பெருவெள்ளம் எழும்பும்போது

நிச்சயமாய் அது அவர்களை அணுகாது.

நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்; சங் 91:1சங் 119:114சங் 27:5சங் 9:9சங் 143:9சங் 31:202 சாமு 22:1சங் 98:1

நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து,

மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர்.

யெகோவா சொல்கிறதாவது: “நான் உனக்கு அறிவுறுத்தி, நீதி 3:5-6சங் 33:18சங் 25:8-10மத் 11:29நீதி 8:10-11ஏசா 49:10நீதி 3:1சங் 34:11

நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்;

நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன்.

புத்தியில்லாத குதிரையைப் போலவோ, நீதி 26:3எரே 4:22யோபு 35:11யாக் 3:3யாக் 4:7-10எரே 8:6-7எரே 31:18

கோவேறு கழுதையைப் போலவோ நீ இருக்கவேண்டாம்;

கடிவாளத்தினால் கட்டுப்படுத்தப்பட்டால் ஒழிய,

அவை உன் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை.”

கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை, நீதி 16:20ஏசா 12:2-3நீதி 13:21சங் 147:11ரோம 2:8-91 தீமோ 6:10சங் 146:5சங் 34:19-21

ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறவனையோ,

அவருடைய உடன்படிக்கையின் அன்பு சூழ்ந்துகொள்கிறது.

நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்; சங் 64:10பிலி 4:4சங் 97:12சங் 5:11உபா 12:12சங் 68:3சங் 97:11 சாமு 2:1

உள்ளத்தில் உண்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் துதி பாடுங்கள்.