சங்கீதங்கள் 46

Psalms 46
சங்கீதம் 46

அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாடல்.

இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், சங் 145:18சங் 9:9நீதி 18:10சங் 62:7-8சங் 91:1-9சங் 142:5உபா 4:7சங் 46:11

ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே.

ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும் சங் 23:4எபி 13:6சங் 27:3லூக் 21:9-11மத் 21:21லூக் 21:33சங் 18:72 பேது 3:10-14

மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும்

கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் எரே 5:22சங் 93:3-4யோபு 9:5-6நியாயாதி 5:4-5மீகா 1:4நாகூ 1:5சங் 114:4-7வெளி 16:20

அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.

ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும் வெளி 22:1-3எசேக் 47:1-12சங் 36:8-9சங் 48:8சங் 87:3ஏசா 60:142 நாளாக 6:6சங் 23:2

பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன.

இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; சகரி 2:5யோவே 2:27செப்ப 3:15சகரி 2:10-11எசேக் 43:7சங் 62:2ஏசா 12:6சங் 112:6

அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார்.

நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன; ஆமோ 9:5சங் 18:13ஆப 3:5-6நாகூ 1:5மீகா 1:42 பேது 3:10-12ஆமோ 9:13யோவே 2:11

யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது.

சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; ரோம 8:31சங் 9:9எண் 14:92 நாளாக 13:12மத் 28:20ஏசா 8:102 தீமோ 4:22சங் 46:11

யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.

யெகோவாவினுடைய செயல்களையும் சங் 66:5ஏசா 24:1ஏசா 61:4சங் 92:4-6ஏசா 34:2-17சங் 111:2-32 நாளாக 20:23-24யாத் 12:30

அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள்.

யெகோவா பூமியின் கடைசிவரை ஏசா 2:4மீகா 4:3-4மீகா 5:10ஏசா 60:18யோசு 11:91 சாமு 2:4ஏசா 11:9சங் 76:3-6

யுத்தங்களை நிறுத்துகிறார்;

அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்;

கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார்.

யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து சங் 100:3ஆப 2:20எசேக் 38:23சகரி 2:13சங் 83:18ஏசா 2:17சங் 57:51 நாளாக 29:11

நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள்.

நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன்,

நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.”

சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; உபா 33:27எரே 16:19சங் 46:1சங் 46:7சங் 48:3

யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.