சங்கீதங்கள் 6

Psalms 6
சங்கீதம் 6

கம்பியிசைக் கருவிகளுடன் செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க இசைக்குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்

யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்; சங் 118:18சங் 38:1எரே 10:24எரே 46:281 கொரி 11:31-321 நாளாக 15:21ஏசா 57:16ஏசா 54:9

உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டியாதேயும்;

யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்; ஓசி 6:1சங் 30:2சங் 31:10எரே 17:14உபா 32:39சங் 41:3-4சங் 51:8ஆதி 20:17

யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும்.

என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது. சங் 90:13யோவா 12:27லூக் 18:7சங் 13:1-2சங் 42:11சங் 42:5சங் 77:2-3மத் 26:38

எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு?

யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; தானி 9:18எபே 2:7-8சங் 116:4சங் 17:13மல்கி 3:7சங் 121:7சங் 22:20சங் 80:14

உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும்.

இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. சங் 88:10-12சங் 115:17பிரச 9:10சங் 30:9ஏசா 38:18-19சங் 118:17யோவா 9:4

பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்?

நான் கலங்கியே இளைத்துப் போனேன். சங் 38:9சங் 42:3சங் 69:3யோபு 16:20யோபு 23:2யோபு 7:3புலம் 1:16புலம் 1:2

இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி,

நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன்.

என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன; யோபு 17:7சங் 38:10புலம் 5:17சங் 88:9சங் 31:9-10சங் 32:3

என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன.

அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; லூக் 13:27சங் 119:115சங் 145:18மத் 7:23சங் 3:4எபி 5:7மத் 25:41சங் 139:19

ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார்.

இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; சங் 66:19-20சங் 120:12 கொரி 12:8-10சங் 118:5சங் 138:3சங் 40:1-2யோனா 2:72 கொரி 1:10-11

யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார்.

என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்; எரே 20:11மல்கி 3:18சங் 86:17நீதி 29:1ஏசா 26:11சங் 109:28-29சங் 112:10சங் 132:18

அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள்.