சங்கீதங்கள் 79

Psalms 79
சங்கீதம் 79

ஆசாபின் சங்கீதம்.

இறைவனே, பிற நாட்டு மக்கள் உமது உரிமைச்சொத்தின்மேல் படையெடுத்தார்கள்; 2 நாளாக 36:19புலம் 1:10மீகா 3:12சங் 74:1-4எரே 26:18சங் 74:7-82 நாளாக 36:172 நாளாக 36:3-4

அவர்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்திவிட்டார்கள்,

அவர்கள் எருசலேமை இடித்துக் கற்குவியலாக்கிவிட்டார்கள்.

அவர்கள் உமது பணியாளர்களின் இறந்த உடல்களை எரே 7:33எரே 34:20எரே 16:4உபா 28:26எரே 19:7எரே 15:3

ஆகாயத்துப் பறவைகளுக்கு இரையாக்கி,

உமது பரிசுத்தவான்களின் சதையை காட்டு மிருகங்களுக்குக் கொடுத்துள்ளார்கள்.

அவர்கள் எருசலேம் முழுவதையும் சுற்றிலும், எரே 14:16எரே 16:4வெளி 11:9எரே 15:3எரே 25:33எரே 34:20எரே 8:1-2மத் 23:35

இரத்தத்தைத் தண்ணீரைப்போல் ஊற்றிவிட்டார்கள்;

அங்கு இறந்தோரைப் புதைக்க ஒருவரும் இல்லை.

நாங்கள் எங்கள் அயலாரின் நிந்தனைக்கும், சங் 80:6எசேக் 36:15புலம் 5:1சங் 89:411 இராஜா 9:7தானி 9:16உபா 28:37எசேக் 35:12

எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாய் இருக்கிறோம்.

யெகோவாவே, எதுவரைக்கும் எங்கள்மேல் கோபமாய் இருப்பீர்? சங் 89:46சங் 74:1சங் 85:5உபா 29:20செப்ப 3:8எசேக் 36:5சங் 13:1-2சங் 74:9-10

எப்பொழுதுமே கோபமாய் இருப்பீரோ?

உமது சினம் எவ்வளவு காலத்திற்கு நெருப்பைப்போல் எரியும்?

உம்மை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்மேலும், எரே 10:252 தெச 1:8சங் 14:4சங் 53:4சங் 69:24ஏசா 45:4-5ரோம 1:28அப் 17:23

உமது பெயரைச் சொல்லி வழிபடாத

அரசுகள் மேலும்

உமது கடுங்கோபத்தை ஊற்றும்.

ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கி, எரே 51:34-35சகரி 1:15ஏசா 24:1-12ஏசா 64:10-11எரே 50:72 நாளாக 36:21சங் 80:13ஏசா 9:12

அவனுடைய சொந்த நாட்டை அழித்துப்போட்டார்கள்.

எங்கள் முன்னோரின் பாவங்களை எங்களுக்கு விரோதமாய் நினைவில் கொள்ளாதேயும்; ஏசா 64:9சங் 116:6சங் 142:6வெளி 18:5சங் 21:3ஓசி 9:9மத் 23:32-361 இராஜா 17:18

உமது இரக்கம் எங்களை விரைவாய் சந்திப்பதாக;

ஏனெனில் நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டு இருக்கிறோம்.

எங்கள் இரட்சகராகிய இறைவனே, எரே 14:72 நாளாக 14:11சங் 25:11எரே 14:21எசேக் 20:14ஏசா 48:9தானி 9:19எசேக் 20:9

உமது பெயரின் மகிமையின் நிமித்தம் எங்களுக்கு உதவிசெய்யும்;

உமது பெயரின் நிமித்தம்

எங்களை மீட்டு, எங்கள் பாவங்களை மன்னியும்.

“அவர்களுடைய இறைவன் எங்கே?” சங் 42:10யாத் 6:7யாத் 7:5எசேக் 39:21-22மீகா 7:10சங் 115:2சங் 42:3சங் 94:1

என்று பிற நாட்டு மக்கள் ஏன் சொல்லவேண்டும்?

சிந்தப்பட்ட உமது ஊழியரின் இரத்தத்திற்காக நீர் பழிவாங்குகிறீர் என்பதை,

எங்கள் கண்களுக்கு முன்பாக பிற நாட்டு மக்கள் மத்தியில் தெரியும்படிச் செய்யும்.

சிறைக் கைதிகளின் பெருமூச்சைக் கேளும்; சங் 102:20ஏசா 42:7ஏசா 33:2சங் 146:6-7யாத் 2:23-24சங் 12:5சங் 69:33எபே 3:20

மரணத் தீர்ப்புக்கு உள்ளானவர்களை உமது புயத்தின் பலத்தால் பாதுகாத்துக்கொள்ளும்.

யெகோவாவே, எங்கள் அயலார் உம்மேல் வாரியெறிந்த நிந்தனையை ஆதி 4:15எரே 32:18லேவி 26:21லேவி 26:28நீதி 6:31சங் 74:18-22லூக் 6:38ஏசா 65:5-7

அவர்களுடைய மடியில் ஏழுமடங்காகத் திரும்பக்கொடும்.

அப்பொழுது உமது மக்களும் உமது நிலத்தின் செம்மறியாடுகளுமாகிய நாங்கள் ஏசா 43:21சங் 95:7சங் 100:3சங் 74:1சங் 145:4சங் 44:8சங் 45:17சங் 74:18

என்றென்றும் உம்மைத் துதிப்போம்;

தலைமுறை தலைமுறையாக

நாங்கள் உமது துதியைச் சொல்வோம்.