சங்கீதங்கள் 82

Psalms 82
சங்கீதம் 82

ஆசாபின் சங்கீதம்.

மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; யோவா 10:352 நாளாக 19:6-7சங் 82:6-7ஏசா 3:13பிரச 5:8சங் 58:11சங் 138:1யாத் 21:6

“கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:

“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, உபா 1:17நீதி 18:5சங் 58:1-2யாத் 10:3கலா 2:61 இராஜா 18:212 நாளாக 19:7யாத் 23:6-7

கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?

பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; யாக் 1:27எரே 22:3சங் 10:18ஏசா 1:17எரே 5:28உபா 10:18உபா 24:17எரே 22:16

ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.

பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; நீதி 24:11-12யோபு 29:12யோபு 5:15-16சங் 140:12சங் 72:12-14யோபு 29:16-17நெகே 5:1-13

அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.

“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; நீதி 2:13சங் 11:3ரோம 1:28மீகா 3:1யோவா 12:35யோவா 3:19நீதி 1:291 யோவா 2:11

அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்;

பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.

“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; யோவா 10:34-36சங் 82:1யாத் 22:28யாத் 22:9

நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.

ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; சங் 49:12எசேக் 31:14யோபு 21:32சங் 83:11

மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.”

இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; வெளி 11:15சங் 2:8சங் 96:13சங் 22:28சங் 102:13செப்ப 3:8மீகா 7:2மீகா 7:7

ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.