சங்கீதம்.
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; யாத் 15:6ஏசா 52:10சங் 33:3சங் 96:3வெளி 14:3சங் 96:1வெளி 5:9கொலோ 2:15
ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்;
அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே
இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது.
யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி, ஏசா 52:10ஏசா 62:2சங் 22:31ரோம 1:17ரோம 3:21-26ஏசா 49:6ஏசா 46:13எரே 23:6
தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார்.
அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த சங் 22:27அப் 13:47அப் 28:28உபா 4:31லூக் 1:72ஏசா 52:10சங் 98:2ஏசா 45:22
தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்;
பூமியின் எல்லைகள் எல்லாம்
நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன.
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் ஏசா 44:23வெளி 19:6சங் 100:1சங் 66:1சங் 95:1ஏசா 12:6எரே 33:11மத் 21:9
யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்;
முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள்.
யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; ஏசா 51:3சங் 33:2வெளி 5:81 நாளாக 25:1-62 நாளாக 29:25சங் 92:3-4வெளி 14:2-31 நாளாக 15:16
யாழோடும், கீதசத்தத்தோடும்,
எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் சங் 81:2-4வெளி 19:162 நாளாக 15:142 நாளாக 29:271 நாளாக 15:282 நாளாக 5:12-13மத் 25:34எண் 10:1-10
யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.
கடலும் அதிலுள்ள அனைத்தும், ஏசா 49:13சங் 24:1சங் 96:11ஏசா 61:11
உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக.
ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்; ஏசா 55:12சங் 65:12-13சங் 89:12சங் 47:1சங் 93:32இராஜா 11:12
மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும்.
அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்; சங் 96:13அப் 17:31சங் 96:10சங் 72:2வெளி 1:7ஏசா 5:16சங் 67:4அப் 24:25
ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
அவர் உலகத்தை நீதியுடனும்,
நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.