எலிப்பாஸின் வார்த்தைகள்
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: யோபு 15:1யோபு 2:11யோபு 22:1யோபு 3:1-2யோபு 42:9யோபு 6:1யோபு 8:1
நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? யோபு 32:18-20அப் 4:20எரே 6:112 கொரி 2:4-62 கொரி 7:8-10எரே 20:9
ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, ஏசா 35:3எபி 12:12யோபு 16:5லூக் 22:32நீதி 10:21உபா 3:28எபே 4:29லூக் 22:43
சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர்.
விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், 1 தெச 5:14எபி 12:12நீதி 12:18சங் 145:142 கொரி 2:72 கொரி 7:6தானி 5:6ஏசா 35:3-4
தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; யோபு 19:212 கொரி 4:162 கொரி 4:1எபி 12:3எபி 12:5யோபு 1:11யோபு 2:5யோபு 3:25-26
அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், நீதி 3:26நீதி 14:26யோபு 1:1யோபு 17:15யோபு 23:11-12யோபு 13:15யோபு 16:171 பேது 1:13
உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ?
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சங் 37:252 பேது 2:9யோபு 36:7அப் 28:4யோபு 8:20பிரச 7:15பிரச 9:1-2யோபு 9:22-23
சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது?
இதை நினைத்துப்பாரும். நான் கண்டிருக்கிறபடி, கலா 6:7-8நீதி 22:8ஓசி 8:72 கொரி 9:6ஓசி 10:12-13எரே 4:18யோபு 15:35சங் 7:14-16
அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள்,
அதையே அறுக்கிறார்கள்.
தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, யோபு 15:302 தெச 2:8ஏசா 11:4ஏசா 30:33சங் 18:15வெளி 2:16யாத் 15:10யாத் 15:8
அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; சங் 58:6நீதி 30:14சங் 3:7சங் 57:4யோபு 29:17யோபு 5:15
பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும்.
கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், சங் 34:102 தீமோ 4:17ஆதி 49:9ஓசி 11:10எரே 4:7யோபு 1:19யோபு 27:14-15யோபு 38:39
பாலசிங்கங்கள் சிதறிப்போகும்.
இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, யோபு 26:141 கொரி 13:12சங் 62:11
அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது.
மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, யோபு 33:14-16ஆதி 2:21தானி 10:9தானி 2:19தானி 2:28-29தானி 4:5தானி 8:18ஆதி 15:12
இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, யோபு 33:19வெளி 1:17தானி 10:11ஆப 3:16ஏசா 6:5யோபு 7:14லூக் 1:12லூக் 1:29
என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, எபி 1:7தானி 5:6லூக் 24:37-39சங் 104:4ஏசா 13:8ஏசா 21:3-4எபி 1:14மத் 14:26
என் உடலின் முடிகள் சிலிர்த்தது.
அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, 1 இராஜா 19:12
ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை;
அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? யோபு 9:2யோபு 25:4பிரச 7:20சங் 143:2எரே 17:9ரோம 11:33எரே 12:1யோபு 15:14
மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ?
கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; 2 பேது 2:4யோபு 25:5-6யூதா 1:6யோபு 15:15-16சங் 103:20-21சங் 104:4ஏசா 6:2-3
தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, யோபு 10:9ஆதி 2:7ஆதி 3:19யோபு 33:62 கொரி 4:72 கொரி 5:1ஆதி 18:27யோபு 13:12
மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால்
அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, யோபு 20:72 நாளாக 15:62 நாளாக 21:20ஏசா 38:12-13யோபு 14:14யோபு 14:2யோபு 14:20யோபு 16:22
கவனிப்பார் ஒருவருமில்லாமல்,
நிலையான அழிவை அடைகிறார்கள்.
அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? யோபு 36:12யோபு 8:22லூக் 16:22-23சங் 39:11ஏசா 14:16ஏசா 2:22யாக் 1:11யோபு 18:21
ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.