சங்கீதங்கள் 105

Psalms 105
சங்கீதம் 105

யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; ஏசா 12:4சங் 145:11-12ரோம 10:13சங் 106:11 நாளாக 16:34சங் 145:4-6சங் 96:31 நாளாக 29:13

அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.

அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்; ஏசா 12:5-6சங் 119:27சங் 77:12சங் 98:5சங் 98:1எபே 5:19சங் 78:4-6உபா 6:6-9

அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.

அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; புலம் 3:25கலா 6:141 கொரி 1:29நீதி 8:171 கொரி 1:31ஏசா 45:25எரே 9:23-24லூக் 11:9-10

யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; சங் 27:8செப்ப 2:2-32 நாளாக 6:41ஆமோ 5:4-6சங் 132:8சங் 78:61

எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.

அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், சங் 77:11சங் 119:13உபா 32:7லூக் 22:19ஏசா 43:18-19உபா 8:2சங் 40:5வெளி 16:7

அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள்.

அவருடைய ஊழியராம் ஆபிரகாமின் சந்ததிகளே, ஏசா 44:1-2யோவா 15:161 பேது 2:9ஏசா 41:8உபா 7:6-8யாத் 3:6ஏசா 41:14சங் 105:42

அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, நீங்கள் இவற்றை நினைவிற்கொள்ளுங்கள்.

அவரே நமது இறைவனாகிய யெகோவா; ஏசா 26:9உபா 26:17-18யாத் 20:2சங் 95:7வெளி 15:4உபா 29:10-15ஆதி 17:7யோசு 24:15-24

அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன.

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார், உபா 7:9லூக் 1:72-74சங் 106:45சங் 111:51 நாளாக 16:15சங் 105:42தானி 9:4நெகே 1:5

ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும்,

ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், ஆதி 17:2ஆதி 22:16-18ஆதி 26:3எபி 6:17அப் 7:8கலா 3:17ஆதி 12:7ஆதி 28:13

ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார்.

அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், 2 சாமு 23:5ஆதி 17:7-8ஆதி 28:13-15எபி 13:20

இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்திச் சொன்னதாவது:

“உங்களுடைய உரிமைச்சொத்தாக, ஆதி 13:15ஆதி 15:18சங் 78:55ஆதி 12:7ஆதி 26:3-4ஆதி 28:13

கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.”

அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உபா 7:7ஆதி 34:30எபி 11:9ஆதி 23:4உபா 26:5அப் 7:5எசேக் 33:24-33ஆதி 17:8

உண்மையிலேயே மிகச் சிலராகவும், வேற்று நாட்டினராகவும் இருந்தபோது,

அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும்,

ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள்.

அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; ஆதி 35:5யாத் 7:16-17ஆதி 12:14-17ஆதி 20:1-7ஆதி 26:14-33ஆதி 31:24-29

அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது:

“நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; சகரி 2:8ஆதி 26:11ஆதி 20:71 யோவா 2:27ஆதி 49:8-33ஆதி 48:19-20ஆதி 27:39-401 இராஜா 19:16

என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.”

எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து, எசேக் 4:16ஏசா 3:1ஆதி 41:54லேவி 26:26அப் 7:112இராஜா 8:1ஆதி 47:13சங் 104:15

அவர்களுடைய உணவு விநியோகத்தை நிறுத்தினார்;

அவர் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை என்ற ஒரு மனிதனை, அப் 7:9ஆதி 37:36ஆதி 45:4-5ஆதி 50:20ஆதி 37:27-28ஆதி 39:1ஆதி 45:7-8

அவர்களுக்குமுன் எகிப்திற்கு அனுப்பிவைத்தார்.

எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்; அப் 16:24ஆதி 39:20ஆதி 40:15சங் 107:10

அவனுடைய கழுத்து இரும்புகளால் பிணைக்கப்பட்டது.

அவன் முன்பு சொன்னவை நிறைவேறுமளவும், அப் 7:10நீதி 21:1ஆதி 40:20-21தானி 2:30ஆதி 41:11-16ஆதி 41:25சங் 44:4

யெகோவாவினுடைய வார்த்தை அவனை உண்மையானவன் என்று

நிரூபிக்கும் வரைக்கும் அவ்வாறு நடந்தது.

எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்; ஆதி 41:14

மக்களின் அதிகாரி அவனை விடுதலை செய்தான்.

அரசன் அவனைத் தன் வீட்டிற்குத் தலைவனாக்கி, ஆதி 41:40-44ஆதி 41:55ஆதி 45:26ஆதி 45:8

தன் உடைமைகளுக்கு எல்லாம் அதிபதியாக்கினான்.

தான் விரும்பியபடி இளவரசர்களுக்கு அறிவுறுத்தவும், ஆதி 41:33ஆதி 41:38ஆதி 41:44ஏசா 19:11

ஆலோசகர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவும் அரசன் யோசேப்பை நியமித்தான்.

அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; அப் 13:17அப் 7:11-15சங் 106:22சங் 78:51ஆதி 45:9-11ஆதி 46:2-7ஆதி 47:6-9ஆதி 10:6

யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான்.

யெகோவா தம் மக்களை பலுகிப் பெருகச்செய்தார்; அப் 7:17உபா 26:5யாத் 1:7-9யாத் 12:37ஆதி 46:3எபி 11:12ஆதி 13:16

அவர்களுடைய பகைவரைப் பார்க்கிலும், அதிக வலிமை உள்ளவர்களாக்கினார்.

அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும், அப் 7:19ஆதி 15:13யாத் 9:16யாத் 1:16ரோம 9:17-19உபா 2:30யாத் 1:8-14யாத் 10:1

அவருடைய ஊழியருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யவும்,

எகிப்தியரின் இருதயங்களை மாற்றினார்.

அவர் தமது அடியானாகிய மோசேயையும், யாத் 3:10யாத் 28:1-2யாத் 28:12யாத் 28:29-38யாத் 29:5-46யாத் 7:1எண் 16:401 சாமு 12:6

தாம் தெரிந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.

இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், சங் 78:43-51நெகே 9:10-11ஏசா 63:11-12எரே 32:20-21உபா 4:34யாத் 7:1-11சங் 105:23சங் 105:28

காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள்.

யெகோவாவினுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக சங் 99:72 பேது 2:172 பேது 2:4யோவே 2:31லூக் 23:44-45யாத் 10:21-23எசேக் 2:4-8யோவே 2:2

எகிப்தியர் கலகம் செய்தார்கள் அல்லவோ?

அதினால் அவர் இருளை அனுப்பி நாட்டை இருளாக்கினார்.

அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், யாத் 7:20-21சங் 78:44வெளி 16:3எசேக் 29:4-5ஏசா 50:2

அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது.

அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; யாத் 8:3-14வெளி 16:13-14சங் 78:45

அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன.

இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன; யாத் 8:21-24யாத் 8:16-18ஏசா 7:18சங் 78:45

கொசுக்கள் எகிப்திய நாடெங்கும் நிறைந்தன.

அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன் சங் 78:47-48யாத் 9:18-28வெளி 11:19வெளி 16:21வெளி 8:7

அவர்களுடைய நாடெங்கிலும் வரச்செய்தார்.

அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, சங் 78:47வெளி 9:4

அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார்.

அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும், யாத் 10:12-15யோவே 2:25சங் 78:46யோவே 1:4-7வெளி 9:3-10

பச்சைப்புழுக்களும் வந்தன.

அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும்

அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களையும் தின்று போட்டது.

பின்பு அவர் எகிப்து நாட்டின் முதற்பிறந்த எல்லாவற்றையும், ஆதி 49:3எபி 11:28சங் 136:10யாத் 11:4-5யாத் 12:12யாத் 12:29-30யாத் 4:23சங் 135:8

அவர்களுடைய ஆண்மையின் முதற்பேறான மகன்களையும் மரிக்கச் செய்தார்.

அவர் இஸ்ரயேலரை நிறைய வெள்ளியோடும் தங்கத்தோடும் புறப்படச் செய்தார், யாத் 12:35-36யாத் 3:22அப் 13:17ஆதி 15:14

அவர்களுடைய கோத்திரங்களில் ஒருவரும் தளர்ந்து போகவில்லை.

இஸ்ரயேலரைப் பற்றிய பயம் எகிப்தியரைப் பிடித்திருந்ததால், யாத் 12:33யாத் 15:16யோசு 2:9ஆதி 35:5யாத் 10:7

இஸ்ரயேலர் புறப்பட்டபோது எகிப்தியர் அகமகிழ்ந்தார்கள்.

யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்; நெகே 9:12ஏசா 4:5சங் 78:14யாத் 13:21-22யாத் 14:24நெகே 9:191 கொரி 10:1-2எண் 9:15-22

இரவிலே வெளிச்சம் கொடுப்பதற்கு நெருப்பையும் தந்தார்.

அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்; சங் 78:18உபா 8:3யோவா 6:31-33யோவா 6:48-58யோசு 5:12நெகே 9:20எண் 11:31-33சங் 78:23-28

பரலோகத்தின் அப்பத்தினால் அவர்களைத் திருப்தியாக்கினார்.

அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது; 1 கொரி 10:4எண் 20:11யாத் 17:6ஏசா 48:21சங் 114:8சங் 78:15-16சங் 78:20நெகே 9:15

அது ஒரு நதியைப்போல் பாலைவனத்தில் ஓடியது.

ஏனெனில் அவர் தமது அடியானாகிய ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த, யாத் 2:24லூக் 1:72-73ஆதி 12:7லூக் 1:54-55யாத் 32:13ஆதி 13:14-17மீகா 7:20உபா 9:27

தமது பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைவிற்கொண்டார்.

அவர் தமது மக்களைக் களிப்போடு வெளியே கொண்டுவந்தார்; ஏசா 35:10அப் 13:17அப் 7:36ஏசா 55:12எரே 31:11-12உபா 4:37-38யாத் 15:1-21ஏசா 51:10-11

தாம் தெரிந்துகொண்டவர்களை மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு வெளியே கொண்டுவந்தார்.

அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்; யோசு 24:13சங் 78:55உபா 6:10-11யோசு 11:23யோசு 24:8சங் 44:2-3யோசு 23:4நெகே 9:22-25

அவர்கள் மற்றவர்களின் கடின உழைப்பின் பலனுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.

அவருடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொண்டு, உபா 4:40தீத் 2:14எபே 2:8-10உபா 4:1சங் 106:1வெளி 19:3-4உபா 5:33உபா 6:21-25

அவருடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படியாகவே,

யெகோவா இப்படிச் செய்தார்.

அல்லேலூயா.