சங்கீதங்கள் 142

Psalms 142
சங்கீதம் 142

தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.

நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; சங் 30:8சங் 57:1சங் 141:11 நாளாக 4:101 சாமு 24:3சங் 77:1-2சங் 28:2சங் 32:1

நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன்.

அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்; ரோம 8:26ஏசா 26:16பிலி 4:6-7எபி 5:7சங் 62:81 சாமு 1:15-16சங் 102:1-28சங் 18:4-6

என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன்.

என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில், சங் 140:5சங் 141:9எரே 18:22மாற் 14:33-36சங் 139:2-4சங் 143:4சங் 61:2யோபு 23:10

நீரே என் வழியை அறிகிறவர்;

நான் நடக்கும் பாதையில்

மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை; எரே 30:17சங் 31:11சங் 88:18யோபு 19:13-19மத் 26:561 சாமு 27:12 தீமோ 4:16சங் 69:20

என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை.

எனக்குப் புகலிடம் இல்லை;

என்னைக் கவனிக்க எவருமில்லை.

யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்; 2 தீமோ 4:17சங் 16:5சங் 27:13யோவா 16:32புலம் 3:24சங் 73:26சங் 91:2சங் 91:9-10

“நீரே என் புகலிடம்,

வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன்.

என் கதறலுக்குச் செவிகொடும்; சங் 79:8சங் 116:6சங் 136:23சங் 17:11 சாமு 24:14சங் 143:7சங் 18:17சங் 3:1

நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;

என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;

ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

நான் உமது பெயரைத் துதிக்கும்படி, சங் 143:11சங் 146:7சங் 7:6-7சங் 13:6அப் 2:24ஏசா 61:1யாக் 5:11சங் 9:14

என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்;

அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம்,

நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள்.