தாவீதின் சங்கீதம்.
தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே; சங் 37:7நீதி 23:17நீதி 24:19நீதி 3:31நீதி 24:1சங் 73:3கலா 5:21யாக் 4:5-6
அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; சங் 92:7சங் 90:5-6யாக் 1:10-11யோபு 14:2சங் 37:35-36யோபு 20:5-91 பேது 1:24சங் 73:17-20
பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள்.
யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; எரே 17:7-8மத் 6:31-33சங் 62:81 கொரி 15:57-58சங் 34:9-10லூக் 22:35சங் 4:5எபி 6:10-12
நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு.
யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, யோவா 15:7சங் 145:19யோவா 15:16ஏசா 58:141 யோவா 5:14-15சங் 21:1-2யோபு 22:261 பேது 1:8
அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார்.
யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி; நீதி 16:31 பேது 5:7பிலி 4:6-7மத் 6:25சங் 55:22யாக் 4:15யோபு 22:28லூக் 12:29-30
அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார்.
அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், ஏசா 54:17யோபு 11:17ஏசா 58:8மீகா 7:8-9மத் 13:43ஏசா 58:10மல்கி 3:18சங் 31:20
உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார்.
யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து, யாக் 5:7-11சங் 27:14சங் 62:5எபி 10:36-37புலம் 3:25-26நீதி 20:22ஆப 2:3எரே 12:1
அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு;
மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும்
அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே.
கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; நீதி 14:29நீதி 16:32யாக் 1:19-20எபே 4:31எபே 4:26யாக் 3:14-18யோபு 5:2கொலோ 3:8
பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும்.
ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்; ஏசா 60:21சங் 25:13நீதி 2:21சங் 37:29ஏசா 57:13சங் 37:11-12சங் 55:23ஏசா 58:14
ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள்
நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; யோபு 24:241 பேது 4:7சங் 103:16சங் 107:42-43சங் 37:35-36எபி 10:36-37யோபு 7:10சங் 52:5
நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள்.
ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு, மத் 5:5கலா 5:22-23ஏசா 26:3யாக் 3:13சங் 119:165பிலி 4:7ஏசா 48:181 தீமோ 6:11
சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள்.
கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து, மீகா 2:1சங் 35:16தானி 8:12மத் 26:16சங் 31:131 சாமு 18:211 சாமு 23:7-92 சாமு 15:10-12
அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள்.
ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்; சங் 2:4நீதி 1:261 சாமு 26:10தானி 5:26எசேக் 21:25எசேக் 21:29எரே 50:27யோபு 18:20
அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார்.
ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும், நீதி 29:27சங் 11:21 யோவா 3:12நீதி 29:101 சாமு 24:111 சாமு 24:17அப் 12:11அப் 7:52
நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும்
கொடியவர்கள் வாளை உருவி
வில்லை வளைக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்; சங் 7:14-15சங் 35:81 சாமு 31:42 சாமு 17:23ஓசி 1:5ஓசி 2:18எரே 51:56சங் 46:9
அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும்.
கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும், நீதி 16:8நீதி 15:16-171 தீமோ 6:6நீதி 13:25பிரச 4:6நீதி 3:33பிரச 2:26மத் 6:11
நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது.
ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்; ஏசா 41:10சங் 63:8சங் 145:14ஏசா 42:1சங் 37:24சங் 119:116-117சங் 51:12யூதா 1:24
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்; சங் 1:6சங் 103:17ரோம 6:232 தீமோ 2:191 பேது 1:4-5சங் 31:7சங் 49:5சங் 73:24
அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; நீதி 10:3சங் 33:19யோபு 5:20-22ஏசா 33:16ஆமோ 5:13எபே 5:16பிரச 9:12மீகா 2:3
பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள்.
ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள், சங் 68:2சங் 102:3லூக் 13:3உபா 33:14-16நியாயாதி 5:312 பேது 2:12ஆதி 19:28லேவி 3:3-11
யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும்,
அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள்.
கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்; எபி 13:16சங் 112:5நீதி 22:7லூக் 6:30சங் 112:9உபா 28:122 கொரி 8:92 கொரி 9:6-15
ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள்.
யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் நீதி 3:331 கொரி 16:22கலா 3:13சங் 37:9கலா 3:10யோபு 5:3மத் 25:41சங் 115:15
நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்;
அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள்.
ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், நீதி 16:9சங் 119:133நீதி 4:261 சாமு 2:9சங் 40:2சங் 121:8சங் 85:13எரே 10:23
அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார்.
அவன் இடறினாலும் விழமாட்டான்; நீதி 24:16சங் 145:14சங் 94:18மீகா 7:7-8யோவா 10:27-30லூக் 22:31-32சங் 40:2சங் 34:19-20
ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார்.
நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; எபி 13:5சங் 37:28சங் 112:2சங் 25:131 சாமு 12:222 கொரி 4:9சங் 94:14சங் 71:18
ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ,
அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை.
நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; சங் 112:5சங் 37:21மத் 5:7உபா 15:8-10எரே 32:39லூக் 6:35-38நீதி 20:7சங் 112:9
அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; சங் 34:14நீதி 16:61 யோவா 2:16-171 தெச 5:15எபி 13:162 தீமோ 2:19தீத் 2:11-14எபி 13:21
அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்.
ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; நீதி 2:22சங் 11:7சங் 21:10ஏசா 59:211 பேது 1:5ஏசா 14:20-21ஏசா 61:8யோபு 27:14
தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார்.
அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள்.
ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம்.
நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, நீதி 2:21சங் 37:92 பேது 3:13சங் 37:11சங் 37:18வெளி 21:7உபா 30:20வெளி 21:3-4
அதில் என்றும் குடியிருப்பார்கள்.
நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; கொலோ 4:6நீதி 25:11-13எபே 4:29நீதி 15:7மத் 12:35நீதி 10:31நீதி 10:21சங் 71:15
அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; சங் 40:8உபா 6:6ஏசா 51:7சங் 119:11எரே 31:33சங் 37:23சங் 121:3உபா 11:18-20
அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை.
நீதிமான்களைக் கொல்லும்படி, எரே 20:10லூக் 14:1லூக் 19:47-48லூக் 20:20சங் 10:8-10அப் 9:24லூக் 11:54லூக் 6:7
கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; சங் 109:312 பேது 2:9ரோம 8:1ரோம 8:33-342 தீமோ 4:17சங் 31:7-8சங் 124:6-71 சாமு 23:26-28
நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை.
யெகோவாவை எதிர்பார்த்திருந்து, சங் 27:14நீதி 20:22சங் 37:9மத் 24:13சங் 37:7சங் 52:5-6யோபு 23:10-12நீதி 4:25-27
அவருடைய வழியைக் கைக்கொள்.
நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்;
கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய்.
கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; யோபு 5:3யோபு 21:7-17சங் 73:3-11எஸ்த 5:11எசேக் 31:18எசேக் 31:6-10ஏசா 14:14-19யோபு 8:13-19
அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான்.
ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; சங் 37:10அப் 12:22-23யாத் 15:19ஏசா 10:16-19ஏசா 10:33-34யாத் 15:9-10யோபு 20:5-29
நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை.
குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; ஏசா 32:17ஏசா 57:1-22 தீமோ 4:6-8அப் 7:59-60யோபு 1:1யோபு 42:12-17லூக் 2:25-29நீதி 14:32
சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; நீதி 14:32சங் 52:52 தெச 1:8-9மத் 13:49-50சங் 1:4-6சங் 9:17மத் 13:30மத் 25:46
கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.
நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; சங் 9:9சங் 91:15ஏசா 12:2சங் 3:82 தீமோ 4:17சங் 46:1எபே 2:8கொலோ 1:11
கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார்.
யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; ஏசா 31:51 நாளாக 5:20தானி 3:17தானி 6:23ஏசா 46:4தானி 3:281 யோவா 5:18சங் 22:4-5
அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால்,
கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.