“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.
இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; சங் 145:18எரே 10:6சங் 138:2உபா 4:7யாத் 23:21யாத் 34:6-7சங் 57:1சங் 76:1
உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்;
மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, பிரச 3:17அப் 17:31அப் 1:7யோவா 7:6சங் 102:132 சாமு 2:42 சாமு 23:3-42 சாமு 5:3
நீதியாய் நியாயந்தீர்பேன்.
பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; 1 சாமு 2:8ஏசா 24:19எபி 1:3ஏசா 49:81 சாமு 18:71 சாமு 25:281 சாமு 31:1-72 சாமு 5:2
நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.
அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், சகரி 1:21நீதி 1:22நீதி 8:5சங் 148:14சங் 82:2-8சங் 89:17சங் 94:8தானி 7:20-21
கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.
உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; 2 நாளாக 30:8அப் 7:51ஏசா 48:4உபா 31:27யாத் 32:9எசேக் 2:4
தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ”
கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, சங் 3:3
அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.
ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: லூக் 1:52தானி 2:21-22சங் 113:7-8சங் 147:62 சாமு 6:21சங் 50:61 சாமு 2:7-8எரே 27:4-8
அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.
யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் யோபு 21:20எரே 25:15சங் 11:6வெளி 16:19வெளி 14:9-10எரே 25:17ஏசா 5:22சங் 60:3
காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது;
அவர் அதை ஊற்றுகிறார்;
பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.
நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; சங் 104:33சங் 145:1-2சங் 40:10சங் 9:14
நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; சங் 89:17சங் 92:10எரே 48:25சங் 101:8சங் 148:14சகரி 1:20-211 சாமு 2:1லூக் 1:69
ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்”
என்று இறைவன் சொல்கிறார்.