சங்கீதங்கள் 137

Psalms 137
சங்கீதம் 137

பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, எசேக் 1:1எசேக் 3:15எசேக் 1:3புலம் 2:10-11புலம் 2:18புலம் 3:48எஸ்றா 8:21எஸ்றா 8:31

அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். எசேக் 26:13ஏசா 24:8வெளி 18:22ஆமோ 8:10சங் 33:2சங் 81:2

எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும், லூக் 21:6புலம் 2:15-16மீகா 3:12சங் 9:141 நாளாக 16:7ஏசா 35:10எரே 26:18எரே 31:12-13

எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி:

சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? ஆமோ 8:3ஏசா 22:12ஓசி 9:4புலம் 5:14-15பிரச 3:4ஏசா 49:21

எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக. தானி 6:10-11எரே 51:50ஏசா 62:1சங் 122:5-9சங் 84:10சகரி 11:17ஏசா 62:6-7நெகே 1:2-4

நான் உன்னை நினைக்காமலும், எசேக் 3:26சங் 22:15ஏசா 41:17யோபு 29:10சங் 84:10புலம் 4:41 தெச 3:7-9அப் 20:24

எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால்,

என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்; புலம் 4:21-22எசேக் 25:12-14எரே 49:7-22ஒபதி 1:10-141 சாமு 15:2ஆமோ 1:11எசேக் 35:2ஆப 3:13

அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்வரை இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே, வெளி 18:6ஏசா 14:4-24எரே 25:12-14ஏசா 21:1ஏசா 47:1-15வெளி 14:8-11ஏசா 13:1-22ஏசா 44:28

நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, ஏசா 13:16ஓசி 13:16நாகூ 3:102இராஜா 8:12ஓசி 10:14

கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.