சங்கீதங்கள் 108

Psalms 108
சங்கீதம் 108

தாவீதின் சங்கீதமாகிய பாடல்.

இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; சங் 57:7-11சங் 145:21சங் 104:33சங் 71:15சங் 68:1சங் 71:23-24சங் 71:8யாத் 15:1

நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.

யாழே, வீணையே, விழித்தெழுங்கள், சங் 69:30சங் 81:2சங் 33:2சங் 57:8சங் 103:22சங் 92:1-4நியாயாதி 5:12

நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.

யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; சங் 22:22சங் 22:27சங் 117:1செப்ப 3:14செப்ப 3:20சங் 138:4-5சங் 96:10

மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.

ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, சங் 36:5எபே 2:4-7சங் 103:11சங் 89:2ஏசா 55:9சங் 85:10சங் 89:5மீகா 7:18-20

அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது;

உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.

இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; சங் 57:5மத் 6:9-10சங் 148:131 நாளாக 29:10-13சங் 21:13சங் 57:11சங் 72:19சங் 8:1

உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.

நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, 2 நாளாக 32:20-22சங் 60:5-12கொலோ 3:12உபா 33:12எபே 1:6சங் 35:1-31 இராஜா 18:241 இராஜா 18:29

உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.

இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: 1 பேது 1:82 பேது 1:3-4யோசு 20:71 பேது 1:32 சாமு 7:20-29நியாயாதி 8:5-6யோசு 17:7யோசு 24:1

“நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்;

சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.

கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; ஆதி 49:10சங் 122:51 சாமு 28:42 சாமு 2:8யோசு 13:8-112 சாமு 5:5உபா 33:17

எப்பிராயீம் என் தலைக்கவசம்,

யூதா என் செங்கோல்.

மோவாப் என் கழுவும் பாத்திரம், ஏசா 14:29-32யோவா 13:14யோவா 13:8ரூத் 4:7-82 சாமு 21:15-22சங் 60:8-102 சாமு 8:1-2

நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்;

நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”

அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? ஏசா 63:1-6ஒபதி 1:3-4சங் 20:6-8எரே 49:7-16சங் 60:1

யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?

இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், 2 நாளாக 13:12சங் 44:91 சாமு 17:361 சாமு 29:1-112 நாளாக 20:151 சாமு 17:262 நாளாக 14:11உபா 20:3-4

எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?

பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; எரே 17:5-8சங் 146:3-5ஏசா 2:22ஏசா 31:3புலம் 4:17ஏசா 30:3-5சங் 20:1-9யோபு 16:2

ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.

இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; சங் 118:6-13சங் 60:12ஏசா 63:3சங் 18:29-34ரோம 16:202 கொரி 2:14சங் 144:1சங் 18:42

அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.