ஆசாபின் பாட்டாகிய சங்கீதம்.
இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்; சங் 28:1சங் 35:22சங் 50:3ஏசா 42:14சங் 109:1-2சங் 44:23
செவிகொடாமல் இருக்கவேண்டாம்;
இறைவனே, அமைதியாய் இருக்கவேண்டாம்.
பாரும், உமது பகைவர் எவ்வளவாய் கொந்தளித்திருக்கிறார்கள்; சங் 81:15ஏசா 17:12மத் 27:24ஏசா 37:23நியாயாதி 8:28எரே 1:192இராஜா 19:28அப் 16:22
உமது எதிரிகள் எவ்வளவாய்த் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்.
அவர்கள் உமது மக்களுக்கு விரோதமாகத் தந்திரமாய் சூழ்ச்சி செய்கிறார்கள்; சங் 64:2சங் 27:5சங் 31:20ஏசா 7:6-7லூக் 20:20-23சங் 10:9சங் 91:1சங் 56:6
நீர் காக்கிறவர்களுக்கு விரோதமாய் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
“அவர்கள், வாருங்கள், ஒரு நாடாக அவர்கள் இல்லாதவாறு அழிப்போம்; எரே 48:2எரே 11:19எஸ்த 3:6-9சங் 74:8அப் 9:1-2தானி 7:25யாத் 1:10எரே 31:36
இஸ்ரயேலின் பெயரை இனி எவரும் நினைக்காதவாறு செய்திடுவோம்” என்று சொல்கிறார்கள்.
அவர்கள் ஒரே மனதுடன் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; சங் 2:2ஏசா 8:9-10வெளி 17:13ஏசா 7:5-7வெளி 19:192 சாமு 10:6-8ஏசா 7:2யோவா 11:47-53
அவர்கள் உமக்கு விரோதமாக தங்களிடையே ஒரு நட்புடன்படிக்கை ஏற்படுத்துகிறார்கள்.
அந்த உடன்படிக்கையிலே ஏதோமின் கூடாரத்தாரும், 1 நாளாக 5:102 நாளாக 20:12 நாளாக 20:10-11சங் 137:71 நாளாக 5:19-20ஆதி 25:12-18
இஸ்மயேலர், மோவாபியர், ஆகாரியர்,
கேபாலர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் ஆகியோரும், யோசு 13:5எசேக் 27:3எசேக் 27:91 சாமு 15:21 சாமு 4:1ஆமோ 1:9
தீருவின் மக்களும் இணைந்திருக்கிறார்கள்.
லோத்தின் சந்ததியினருக்குப் பக்கபலமாய் இருக்க உபா 2:92இராஜா 15:19ஆதி 10:11ஆதி 19:37-38ஆதி 25:3ஏசா 33:2
அசீரியாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டது.
இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும், ஏசா 9:4நியாயாதி 4:15-24நியாயாதி 5:21எண் 31:7-8ஏசா 10:26நியாயாதி 4:7நியாயாதி 7:1-25
கீசோன் நதியருகே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும்
அவர்களுக்கும் செய்யும்.
அவர்கள் எந்தோரில் செப்ப 1:171 சாமு 28:7யோசு 17:112இராஜா 9:37எரே 16:4எரே 8:2
அழிந்து நிலத்தின் குப்பைபோல் ஆனார்களே.
அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும். நியாயாதி 7:25நியாயாதி 8:12-21
அவர்களுடைய இளவரசர்கள் எல்லோரையும் சேபாவையும், சல்முனாவையும் போலாக்கும்.
“அவர்கள் இறைவனின் மேய்ச்சல் நிலங்களை எங்கள் உடைமையாக்குவோம்” 2 நாளாக 20:11சங் 74:7-8சங் 83:4
என்று சொன்னார்களே.
என் இறைவனே, அவர்களைக் காய்ந்த சருகைப் போலவும், யோபு 21:18சங் 35:5ஏசா 40:24எரே 13:24யோபு 13:25சங் 74:11-12யாத் 15:7ஏசா 17:12-14
காற்றில் பறக்கும் பதரைப்போலவும் ஆக்கும்.
காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும், உபா 32:22மல்கி 4:1ஏசா 9:18எசேக் 20:47-48ஏசா 30:33ஏசா 33:11-12ஏசா 64:1-2நாகூ 1:10
நெருப்புச் சுவாலை மலைகள் முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்வதுபோலவும்,
அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்; யோபு 9:17சங் 50:3ஏசா 28:17சங் 58:9எபி 12:18யோபு 27:20-23மத் 7:27சங் 11:6
உமது சூறாவளியினால் திகிலடையச் செய்யும்.
யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி, சங் 6:10சங் 9:19-20யோபு 10:15சங் 109:29சங் 132:18சங் 34:5
அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும்.
அவர்கள் எப்பொழுதும் வெட்கமடைந்து, மனம்சோர்ந்து போவார்களாக; சங் 35:4சங் 109:29சங் 35:26சங் 40:14-15
அவர்கள் அவமானத்தால் அழிவார்களாக.
யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே, யாத் 6:3எசேக் 38:23எரே 16:21சங் 59:132இராஜா 19:19சங் 97:9தானி 4:32எசேக் 30:19
பூமியெங்கும் மகா உன்னதமானவர் என்பதை அவர்கள் அறிவார்களாக.