சங்கீதங்கள் 101

Psalms 101
சங்கீதம் 101

தாவீதின் பாடல்.

இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; சங் 89:1சங் 145:7சங் 71:22-23சங் 51:14வெளி 19:1-3சங் 103:6-8சங் 136:10-22சங் 97:8

யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.

உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; சங் 119:1061 இராஜா 9:41 தீமோ 3:4-51 இராஜா 11:4சங் 119:115சங் 40:17உபா 6:7எரே 23:5-6

எப்பொழுது என்னிடத்தில் வருவீர்!

என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; சங் 119:37யோபு 31:1யாக் 1:13-152 சாமு 11:2-3நீதி 6:25மத் 5:28சங் 40:4யாத் 20:17

வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்;

அது என்னைப் பற்றாது.

மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; நீதி 11:202 கொரி 6:14-162 தீமோ 2:19மத் 7:23நீதி 22:24நீதி 8:13நீதி 9:6சங் 119:115

பொல்லாதவனை ஏற்கமாட்டேன்.

பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; சங் 15:3சங் 18:271 கொரி 5:11லூக் 18:14ஒபதி 1:3-4நீதி 20:19நீதி 30:13சங் 50:20

பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; சங் 119:63லூக் 12:43-44வெளி 21:3யோவா 12:26சங் 119:1-3ரோம 13:1-4யோவா 17:24மத் 24:45

உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான்.

கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; அப் 5:1-102 சாமு 4:10-12நீதி 29:12அப் 1:16-20சங் 52:22இராஜா 5:26-27அப் 1:25

பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.

அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, சங் 75:10எரே 21:12நீதி 16:12சங் 48:8நீதி 20:26நீதி 20:8சங் 46:4வெளி 22:14-15

தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.