சங்கீதங்கள் 136

Psalms 136
சங்கீதம் 136

யெகோவாவை துதியுங்கள்; 1 நாளாக 16:34சங் 118:11 நாளாக 16:41சங் 106:1சங் 107:12 நாளாக 20:21எஸ்றா 3:112 நாளாக 7:3

அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

தேவாதி தேவனைத் துதியுங்கள்; உபா 10:17சங் 97:92 நாளாக 2:5தானி 2:47யாத் 18:11யோசு 22:22சங் 82:1சங் 97:7

அவர் கிருபை என்றுமுள்ளது.

கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; வெளி 17:141 தீமோ 6:15வெளி 19:16

அவர் கிருபை என்றுமுள்ளது.

ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; சங் 72:18யோபு 5:9சங் 86:10யாத் 15:11வெளி 15:3

அவர் கிருபை என்றுமுள்ளது.

வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; ஆதி 1:1சங் 104:24எரே 51:15சங் 33:6எரே 10:12நீதி 3:19-20நீதி 8:22-29

அவர் கிருபை என்றுமுள்ளது.

தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; சங் 24:2ஆதி 1:9எரே 10:12ஏசா 42:5ஏசா 44:24யோபு 26:7சங் 104:2-3சகரி 12:1

அவர் கிருபை என்றுமுள்ளது.

பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; உபா 4:19ஆதி 1:14-19சங் 104:19சங் 74:16-17

அவர் கிருபை என்றுமுள்ளது;

பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; சங் 148:3ஆதி 1:16எரே 31:35மத் 5:45

அவர் கிருபை என்றுமுள்ளது.

இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; யோபு 31:26சங் 89:36-37சங் 8:3

அவர் கிருபை என்றுமுள்ளது;

எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; யாத் 12:29சங் 78:51சங் 135:8யாத் 12:12சங் 105:36யாத் 11:5-6எபி 11:28

அவர் கிருபை என்றுமுள்ளது.

அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; யாத் 12:51யாத் 13:31 சாமு 12:6-8யாத் 13:17சங் 105:37சங் 78:52

அவர் கிருபை என்றுமுள்ளது.

வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; எரே 32:21உபா 4:34யாத் 6:6சங் 44:3உபா 11:2-4யாத் 13:14யாத் 15:6ஏசா 51:9-10

அவர் கிருபை என்றுமுள்ளது.

சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; சங் 78:13சங் 106:9-11யாத் 14:21-22யாத் 14:29எபி 11:29ஏசா 63:12-13சங் 66:5-6சங் 74:13

அவர் கிருபை என்றுமுள்ளது.

அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; யாத் 14:22சங் 106:9சங் 78:13

அவர் கிருபை என்றுமுள்ளது.

பார்வோனையும் அவன் சேனைகளையும் சங் 78:53நெகே 9:10-11சங் 135:9யாத் 14:27-28யாத் 15:10-13யாத் 15:4-5லூக் 1:71-74சங் 143:12

செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; உபா 8:15யாத் 13:18யாத் 15:22உபா 8:2சங் 77:20ஏசா 49:10ஏசா 63:11-14நெகே 9:12

அவர் கிருபை என்றுமுள்ளது.

பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; சங் 135:10-12யோசு 12:1-24

அவர் கிருபை என்றுமுள்ளது.

பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; உபா 29:7

அவர் கிருபை என்றுமுள்ளது. எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; உபா 2:30-36உபா 29:7எண் 21:21-24

அவர் கிருபை என்றுமுள்ளது.

பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; எண் 21:33உபா 3:1-29

அவர் கிருபை என்றுமுள்ளது.

அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; உபா 3:12-17யோசு 12:1-7யோசு 13:1-21நெகே 9:22-24எண் 32:33-42சங் 105:44சங் 135:12சங் 44:2-3

அவர் கிருபை என்றுமுள்ளது.

அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; சங் 105:6சங் 47:4

அவர் கிருபை என்றுமுள்ளது.

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; ஏசா 63:9லூக் 1:481 சாமு 2:7-8உபா 32:36சங் 113:7சங் 116:6சங் 142:6எசேக் 16:3-13

அவர் கிருபை என்றுமுள்ளது.

நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; யாத் 15:13சங் 107:2உபா 15:15ஏசா 63:9லூக் 1:68-74தீத் 2:14நீதி 23:10-11

அவர் கிருபை என்றுமுள்ளது.

உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; சங் 104:27சங் 145:15சங் 147:9

அவர் கிருபை என்றுமுள்ளது.

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; சங் 136:1-3யோனா 1:9நெகே 1:4சங் 115:3சங் 123:1வெளி 11:13

அவர் கிருபை என்றுமுள்ளது.