அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; சங் 96:1-4சங் 7:17சங் 111:1சங் 33:1-2சங் 106:1சங் 107:8சங் 112:1சங் 148:13
யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
யெகோவாவுடைய வீட்டிலும், சங் 116:19சங் 92:13லூக் 2:37சங் 96:81 நாளாக 16:37-421 நாளாக 23:30நெகே 9:5
நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே,
யெகோவாவை துதியுங்கள்.
யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; சங் 147:1சங் 119:68சங் 106:1சங் 33:1மத் 19:17சங் 118:1சங் 145:7-8சங் 100:5
அது இன்பமானது.
யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், 1 பேது 2:9உபா 10:15உபா 7:6-7மல்கி 3:171 சாமு 12:22உபா 32:9ஏசா 41:8ஏசா 43:20-21
இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
யெகோவா பெரியவர் என்றும், சங் 95:3உபா 10:17சங் 48:1சங் 97:9தானி 6:26-27சங் 86:8-10தானி 3:29ஏசா 40:22
நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், தானி 4:35சங் 115:3மத் 28:18ஏசா 46:10மத் 8:26-27சங் 33:9சங் 33:11ஆமோ 4:13
யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, எரே 10:13எரே 51:16யோபு 28:25-26சகரி 10:1யோவா 3:8சங் 148:81 இராஜா 18:11 இராஜா 18:41-45
மழையுடன் மின்னலையும் உண்டாக்கி,
காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார்.
அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். சங் 78:51யாத் 12:12சங் 105:36யாத் 13:15சங் 136:10யாத் 12:29-30
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் சங் 136:15உபா 6:22அப் 7:36உபா 4:34யாத் 7:1-15ஏசா 51:9-10எரே 32:20-21நெகே 9:10
அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; சங் 136:17-22எண் 21:24சங் 44:2-3
எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், யோசு 12:7-24உபா 29:7நெகே 9:22உபா 2:30யோசு 10:1-12எண் 21:21-35
கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,
அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். சங் 78:55சங் 136:21-22உபா 29:8யோசு 11:23யோசு 12:7எண் 33:54சங் 44:1-3
யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; சங் 102:12யாத் 3:15சங் 72:17சங் 8:1சங் 8:9யாத் 34:5-7ஓசி 12:5மத் 6:9
யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, உபா 32:36யோனா 4:2சங் 50:4சங் 7:81 நாளாக 21:15ஆமோ 7:3ஆமோ 7:6ஓசி 11:8-9
தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், சங் 115:4-8அப் 17:29ஆப 2:18-19ஏசா 37:19எரே 10:3-11ஏசா 44:9-20ஏசா 46:6-7உபா 4:28
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, மத் 13:14-16ஏசா 6:10
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,
அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், சங் 115:82 கொரி 4:4ஏசா 44:18-20எரே 10:8சங் 97:7
அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
இஸ்ரவேல் குடும்பத்தாரே, சங் 115:9-11சங் 118:1-4சங் 145:10சங் 147:19-20சங் 148:14வெளி 19:5
யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்;
யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு சங் 134:3சங் 132:13-142 நாளாக 6:6ஏசா 12:6சங் 128:5சங் 76:2சங் 48:1சங் 48:9
சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும்.
அல்லேலூயா.