ஆரோகண பாடல்.
என்னுடைய சிறுவயது முதற்கொண்டு சங் 124:1ஓசி 11:1எரே 2:2யாத் 1:12-14சங் 120:1சங் 122:1சங் 126:1சங் 127:1
அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், 2 கொரி 4:8-9மத் 16:18சங் 34:19வெளி 12:8-9யோவா 16:33சங் 118:13சங் 125:1சங் 42:1
என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, ஏசா 51:23சங் 141:7
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
யெகோவாவோ நீதியுள்ளவர்; சங் 119:137புலம் 3:22தானி 9:7நெகே 9:33சங் 124:6-7எஸ்றா 9:15சங் 140:5-11புலம் 1:18
துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று,
இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். ஏசா 37:35சங் 71:13எஸ்த 6:13ஏசா 10:12ஏசா 37:22சங் 83:4-11சகரி 12:31 கொரி 16:22
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; சங் 37:22இராஜா 19:26ஏசா 37:27எரே 17:5-6மத் 13:6சங் 92:7
அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், கலா 6:8ஏசா 17:10-11சங் 126:6ஓசி 8:7
அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; ரூத் 2:4சங் 118:26
யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்
என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.