இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; எபி 12:2மத் 2:2சங் 28:7சங் 62:7சங் 59:16-17சங் 2:6சங் 118:14-15சங் 20:5-6
உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, சங் 37:4சங் 20:4-5சங் 2:8-9எபி 7:25ஏசா 49:6-12சங் 92:11
அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)
உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, 2 சாமு 12:30எபே 1:31 நாளாக 20:2சங் 31:19சங் 59:10எபி 2:9ரோம 11:351 சாமு 16:13
அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர்.
அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; சங் 91:16வெளி 1:18சங் 119:77சங் 133:3சங் 61:5-6சங் 119:175சங் 89:29சங் 89:36-37
நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.
உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; 1 பேது 3:22எபே 1:20-22எபி 8:1வெளி 5:8-13யோவா 17:221 நாளாக 17:11-151 நாளாக 17:272 சாமு 7:19
மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.
அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; அப் 2:28சங் 45:7சங் 16:11கலா 3:9அப் 3:26எபே 1:3லூக் 2:10-111 நாளாக 17:27
அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; சங் 16:8சங் 91:2தானி 7:14சங் 18:2சங் 20:7-8சங் 26:1சங் 9:21 சாமு 30:6
உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; 1 கொரி 15:25சங் 110:1-2லூக் 19:27சங் 72:9வெளி 19:15ஆமோ 9:2-3எபி 10:28-29லூக் 19:14
உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
உமது கோபத்தின் காலத்திலே மல்கி 4:1சங் 18:8சங் 50:32 தெச 1:8புலம் 2:2நாகூ 1:6உபா 32:22ஏசா 26:11
அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்;
யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்;
நெருப்பு அவர்களை அழிக்கும்.
அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் சங் 37:281 இராஜா 13:34ஏசா 14:20யோபு 20:28சங் 109:13மல்கி 4:1யோபு 18:16-19
அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.
அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; சங் 10:2சங் 2:1எரே 11:18-19சங் 31:13ஏசா 7:6-7ஏசா 8:9-10மத் 2:16அப் 4:17-18
தீவினை செய்ய முயன்றார்கள்;
ஒன்றும் வாய்க்காமல்போனது.
உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். சங் 7:12-13சங் 18:40புலம் 3:12சங் 64:7யோபு 16:12-13யோபு 7:20சங் 44:10சங் 56:9
யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; வெளி 16:5-7வெளி 19:1-6சங் 113:5சங் 57:11வெளி 15:3-4மத் 6:10சங் 57:5சங் 72:18-19
அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.