சங்கீதங்கள் 33

Psalms 33
சங்கீதம் 33

நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; சங் 32:11பிலி 4:4சங் 147:1சங் 118:15சங் 97:121 கொரி 1:30-31நீதி 15:8சங் 78:36-37

துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.

சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, சங் 150:3-6சங் 98:4-5சங் 144:9யாத் 15:201 நாளாக 15:161 நாளாக 15:281 நாளாக 25:31 நாளாக 25:6

பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.

அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; எபே 5:191 நாளாக 25:7ஏசா 42:10சங் 96:11 நாளாக 13:8கொலோ 3:16சங் 144:9சங் 98:1

ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.

யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், சங் 12:6உபா 32:4தீத் 1:2நீதி 30:5சங் 19:8தானி 4:37சங் 119:75சங் 36:5-6

அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; சங் 11:7சங் 119:64மத் 5:45சங் 104:24சங் 45:7அப் 14:17எபி 1:9சங் 145:15-16

பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.

யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், எபி 11:32 பேது 3:5யோபு 33:4யோவா 1:1-3ஆதி 2:1சங் 33:9ஆதி 2:7ஆதி 1:1

அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.

அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, யாத் 15:8யோசு 3:16யோசு 3:13ஆதி 1:9-10ஆப 3:15சங் 104:6-9எரே 5:22யோபு 26:10

ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; வெளி 14:6-7சங் 96:9-10வெளி 15:4சங் 22:27எரே 10:7-12சங் 67:7சங் 76:7தானி 6:25-26

உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். ஆதி 1:3சங் 33:6சங் 148:5-6வெளி 4:11கொலோ 1:16-17எபி 11:3எபி 1:3சங் 119:90-91

யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, சங் 21:11யோபு 5:12-13ஏசா 44:25நீதி 21:302 சாமு 15:31ஏசா 8:9-10சங் 140:8சங் 2:1-4

மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.

யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், நீதி 19:21ஏசா 46:10யோபு 23:13ஏசா 14:24ஏசா 55:8-9எரே 29:11புலம் 3:37எபே 1:11

அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், சங் 144:151 பேது 2:9யோவா 15:16உபா 7:6-8உபா 33:29எபே 1:4சங் 65:4தீத் 2:14

அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.

யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். யோபு 28:24சங் 11:4சங் 53:2எபி 4:132 நாளாக 16:9எரே 23:23-24நீதி 15:3சங் 14:2

தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். 1 இராஜா 8:391 இராஜா 8:271 இராஜா 8:301 இராஜா 8:431 தீமோ 6:16ஏசா 57:15ஏசா 66:1லூக் 11:2

அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். எரே 32:19ஓசி 7:2சங் 44:211 கொரி 4:5அப் 17:26பிரச 7:29ஏசா 64:8யோபு 10:8

எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; சங் 44:3எரே 9:23சங் 44:6-7நியாயாதி 7:21 சாமு 14:8-161 சாமு 17:45-492 நாளாக 32:8-92 சாமு 21:16-22

போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.

காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; நீதி 21:31சங் 20:7சங் 147:10யோபு 39:19-25ஓசி 14:3ஏசா 30:162இராஜா 7:6-7பிரச 9:11

அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; 1 பேது 3:12சங் 147:11யோபு 36:7சங் 34:15-20எபி 6:18சங் 13:5சங் 52:8ரோம 4:4-8

பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், சங் 37:19நீதி 10:3யோபு 5:19-22ஏசா 33:16யோவா 10:28மத் 6:31-33சங் 37:3சங் 91:10

யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.

நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; ஏசா 40:31சங் 27:14சங் 130:5-6சங் 115:9-121 நாளாக 5:20சங் 62:5-6ஏசா 8:17சங் 144:1-2

அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், சங் 13:5யோவா 16:22சகரி 10:7ஏசா 25:9சங் 30:10-12வெளி 4:81 நாளாக 16:10சங் 28:7

நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.

யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. சங் 13:5சங் 119:76மத் 9:29சங் 5:11-12சங் 119:49சங் 32:10