சங்கீதங்கள் 5

Psalms 5
சங்கீதம் 5

புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல்.

யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், 1 யோவா 5:14-15சங் 54:2சங் 19:141 பேது 3:12சங் 55:1-2சங் 64:1சங் 17:1சங் 86:1

என்னுடைய தியானத்தைக் கவனியும்.

நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; சங் 65:2சங் 3:4ஏசா 33:22சங் 145:1சங் 84:3சங் 24:7-8சங் 74:12சங் 99:1-4

என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; சங் 119:147சங் 88:13சங் 130:6மாற் 1:35சங் 55:17ஏசா 26:9சங் 69:16சங் 22:2

காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; சங் 11:5எபி 12:14மல்கி 2:17சங் 50:21வெளி 21:27சங் 101:7சங் 140:13சங் 92:15

தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.

வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; சங் 11:5சங் 1:5ஓசி 9:15நீதி 6:16-19லேவி 20:23மத் 25:41நீதி 1:7நீதி 8:5

அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர்.

பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; சங் 55:23வெளி 21:8ஏசா 26:21வெளி 22:15ஆதி 34:25-26சங் 4:22 சாமு 16:82 சாமு 20:1

கொலை வெறியர்களையும்

வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.

நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, சங் 132:7சங் 138:2எபி 4:16எபி 12:28-29சங் 69:13ஏசா 55:7தானி 6:10ரோம 5:20-21

உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, சங் 27:11சங் 25:4-5நீதி 3:5-6சங் 119:10சங் 86:11சங் 143:8-10நீதி 4:25சங் 119:64

எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

அவர்கள் வாயில் உண்மை இல்லை, எரே 9:3-6ரோம 3:13சங் 62:4மீகா 6:12நீதி 29:5லூக் 11:44சங் 51:6சங் 52:2

அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது;

அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்;

தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.

தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; ஏசா 63:102 சாமு 17:14சங் 140:9-101 கொரி 3:192 சாமு 15:312 சாமு 17:23சங் 31:18சங் 71:13

அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்;

அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்;

உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே.

உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, ரோம 8:28வெளி 19:1-7சங் 68:3சங் 40:161 கொரி 2:9யாக் 1:12வெளி 18:20யாக் 2:5

எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;

நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;

உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக.

யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, சங் 84:11சங் 32:10சங் 115:13சங் 1:1-3சங் 112:1சங் 32:7சங் 29:11சங் 3:3

கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.