சங்கீதங்கள் 61

Psalms 61
சங்கீதம் 61

நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, பிலி 4:6சங் 4:1சங் 86:6சங் 130:2சங் 55:1-2சங் 17:1சங் 28:2சங் 5:1-3

என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.

என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது சங் 18:2சங் 139:9-10ஏசா 32:2சங் 62:6உபா 4:29சங் 62:2சங் 77:3சங் 18:46

பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;

எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

நீர் எனக்கு அடைக்கலமும், நீதி 18:10சங் 62:7சங் 116:2சங் 140:7சங் 18:22 கொரி 1:10ஏசா 46:3-4சங் 4:6-7

எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.

நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; சங் 23:6சங் 17:8சங் 27:4சங் 91:4சங் 15:1சங் 57:1சங் 63:7ரூத் 2:12

உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)

தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; மல்கி 3:16-18சங் 56:12சங் 115:13சங் 86:11அப் 10:35சங் 16:5-6சங் 65:1சங் 66:19

உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.

ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; சங் 21:4சங் 89:36-37சங் 21:6ஏசா 53:10சங் 72:15-17

அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; சங் 40:11ஆதி 24:27ஏசா 9:6-7லூக் 1:33சங் 41:12சங் 57:3எபி 9:24லூக் 1:54-55

தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.

இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, சங் 65:1சங் 145:1-2சங் 66:13-16சங் 71:22சங் 79:13சங் 146:2சங் 30:12

உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.