சங்கீதங்கள் 84

Psalms 84
சங்கீதம் 84

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

சேனைகளின் யெகோவாவே, சங் 27:4சங் 43:3சங் 36:8சங் 122:1சங் 132:5சங் 8:1வெளி 21:22-23நெகே 9:6

உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; ஏசா 26:9சங் 42:1-2சங் 63:1-2சங் 119:81சங் 73:26சங் 143:6சங் 119:20உன்னத 5:8

என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, சங் 91:1சங் 90:1மத் 8:20சங் 43:4சங் 116:7சங் 5:2மத் 23:37

உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும்,

தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; சங் 23:6சங் 65:4சங் 27:4ஏசா 12:4-5சங் 71:8சங் 42:11சங் 134:1-3சங் 145:21

அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)

உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும், சங் 28:7-82 கொரி 12:9சகரி 10:12பிலி 4:13சங் 40:8மீகா 4:2எரே 31:33சங் 55:14

தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; 2 கொரி 4:17யோவா 16:33யோவே 2:23ரோம 5:3-5ரோம 8:37வெளி 7:14சங் 68:9சங் 66:10-12

மழையும் குளங்களை நிரப்பும்.

அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, நீதி 4:182 கொரி 3:18ஏசா 40:31யோபு 17:92 பேது 3:18யோவா 1:16உபா 16:16சங் 42:2

சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.

சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, சங் 59:5

என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;

யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)

எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்; சங் 2:2ஆதி 15:1சங் 98:11 சாமு 16:61 சாமு 2:102 நாளாக 6:42உபா 33:29சங் 132:17

நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும்.

ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; சங் 27:4சங் 26:8-10சங் 63:2பிலி 3:20ரோம 8:5-6சங் 84:1-2சங் 141:4-5சங் 17:14-15

துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட

என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; சங் 34:9-10நீதி 2:7மத் 6:33பிலி 4:19சங் 85:12நீதி 10:9யோவா 8:12சங் 3:3

யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்;

உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.

சேனைகளின் யெகோவாவே, எரே 17:7-8சங் 62:8ஏசா 30:18ஏசா 50:10சங் 2:12சங் 146:5-6சங் 34:8

உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.