சங்கீதங்கள் 31

Psalms 31
சங்கீதம் 31

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; ரோம 10:11சங் 25:2சங் 71:1-3சங் 22:4-5ஏசா 49:23சங் 143:1தானி 9:16சங் 7:8-9

என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்;

உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

உமது செவியை எனக்குச் சாய்த்து, சங் 71:2-3சங் 102:2சங் 86:11 யோவா 4:15-16உபா 32:31சங் 130:21 யோவா 4:122 சாமு 22:3

என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்;

என் புகலிடமான கன்மலையாகவும்,

என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும்.

நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், சங் 143:10-11ஏசா 49:10யோவா 16:13லூக் 1:79சங் 25:5சங் 79:9எரே 14:7நெகே 9:12

உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும்.

நீரே என் புகலிடம், சங் 25:15சங் 140:52 தீமோ 2:26சங் 19:14சங் 57:6நீதி 29:5சங் 124:7சங் 35:7

ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும்.

உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்; லூக் 23:46அப் 7:59உபா 32:41 பேது 1:18-19சங் 71:232 தீமோ 2:13எபி 6:18தீத் 1:2

யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.

இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்; யோனா 2:8சங் 24:4சங் 26:51 கொரி 10:201 கொரி 8:4எரே 10:15எரே 10:81 நாளாக 16:28-29

நான் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறேன்.

நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்; ஏசா 49:13ஏசா 63:9சங் 119:1532 தீமோ 2:19கலா 4:9ஏசா 63:16யோவா 10:27-30ஏசா 43:2

ஏனெனில், நீர் என் வேதனையைக் கண்டு,

என் ஆத்தும துயரத்தை அறிந்திருக்கிறீர்.

நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல், யோபு 36:16உபா 32:30சங் 18:19சங் 4:11 சாமு 17:461 சாமு 24:18ஏசா 19:4யோபு 16:11

விசாலமான இடத்தில் என் பாதங்களை நிறுத்தினீர்.

யெகோவாவே, நான் துன்பத்தில் இருப்பதால், என்னில் இரக்கமாயிரும்; சங் 6:7சங் 88:9சங் 73:26யோபு 17:7யோபு 33:19-22புலம் 4:17புலம் 5:17சங் 102:3-5

துக்கத்தினால் என் கண்கள் பலவீனமடைகின்றன;

துயரத்தினால் என் ஆத்துமாவும் உடலும் பெலனில்லாமல் போகின்றன.

என் வாழ்க்கை வேதனையிலேயே கழிந்துபோயிற்று; சங் 32:3-4சங் 38:3சங் 88:15சங் 78:33ரோம 9:2யோபு 3:24சங் 102:3-28சங் 13:2

அழுது புலம்பியே என் வருடங்களும் கடந்துபோயிற்று.

என் துன்பத்தினால் 1 என் பெலம் குன்றி,

என் எலும்புகளும் பெலனற்றுப் போகின்றன.

என் பகைவர்கள் அனைவரின் நிமித்தம் சங் 38:11சங் 88:8மத் 26:56சங் 88:18ஏசா 49:7ஏசா 53:3-5யோபு 19:13-14சங் 41:8-9

நான் என் அயலாருக்கு நிந்தையாகிறேன்;

என் நண்பர்களுக்கு நான் பயங்கரமானேன்;

தெருவில் என்னைக் காண்பவர்கள் என்னைவிட்டு விலகி ஓடிப்போனார்கள்.

நான் இறந்துவிட்ட ஒருவனைப் போல, அவர்கள் என்னை மறந்துபோனார்கள்; சங் 88:4-5ஏசா 30:14சங் 119:83சங் 2:9ரோம 9:21-22ஏசா 38:11-12வெளி 2:27

நான் ஓர் உடைந்த பாத்திரத்தைப் போலானேன்.

அநேகர் என்னை அவதூறாய்ப் பேசுகிறதைக் கேட்கிறேன், எரே 20:10மத் 27:1புலம் 2:221 சாமு 20:332 சாமு 17:1-4மத் 26:3-4மத் 26:591 சாமு 19:10-17

“எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது!”

அவர்கள் எனக்கு விரோதமாக சூழ்ச்சிசெய்து,

என் உயிரை வாங்க சதித்திட்டம் போடுகிறார்கள்.

ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்; சங் 56:3-4சங் 18:2சங் 43:5மத் 26:42சங் 140:6சங் 16:1-2மத் 26:39சங் 63:1

“நீரே என் இறைவன்” என்று நான் சொன்னேன்.

என் நாட்கள் உமது கரங்களில் இருக்கிறது; அப் 1:7பிரச 3:1-8யோவா 17:1யோவா 7:6சங் 142:6யோபு 24:1சங் 17:8-92 தீமோ 4:6

என் பகைவரிடமிருந்தும்

என்னைத் துரத்துகிறவரிடமிருந்தும் விடுவியும்.

உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்; சங் 4:6சங் 6:4தானி 9:9சங் 80:3ரோம 9:15தானி 9:17-18எபே 1:6-7எபே 2:4-7

உமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைக் காப்பாற்றும்.

யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; சங் 25:2-3எரே 20:11ஏசா 41:11-12சங் 115:17சங் 34:5சங் 35:261 சாமு 2:9சங் 35:4

நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;

கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில்

மவுனமாய்க் கிடக்கட்டும்.

பெருமையோடும் அகந்தையோடும், யூதா 1:15சங் 94:41 சாமு 2:3ஏசா 54:17அப் 25:7யோவா 8:44யோவா 8:48மத் 12:24

நீதிமான்களுக்கு விரோதமாய்ப் பேசும்

அவர்களுடைய பொய் உதடுகள் ஊமையாகட்டும்.

உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக 1 கொரி 2:9ஏசா 64:4புலம் 3:23-251 பேது 1:4-5கொலோ 3:2-4யாக் 2:5சங் 16:11சங் 126:2-3

நீர் குவித்து வைத்திருக்கும் நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன;

உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறவர்கள்மேல்,

மனிதர் காணும்படியாக நீர் பொழிகின்ற நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன.

நீர் அவர்களை மனிதரின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கி, சங் 27:5சங் 32:7சங் 91:1-4யோபு 5:21சங் 64:2-4சங் 140:3சங் 140:5யாத் 18:11

உமது சமுகத்தின் அடைக்கலத்தில் மறைத்துவைக்கிறீர்;

அவர்களைக் குற்றப்படுத்தும் நாவுகளுக்கு விலக்கி,

உமது தங்குமிடத்தில் அவர்களை ஒளித்துவைக்கிறீர்.

யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, 1 சாமு 23:7-13சங் 17:71 பேது 2:9எரே 1:18சங் 118:23சங் 98:1

ஏனெனில் பட்டணம் முற்றுகையிடப்பட்டு நான் சிக்கலில் இருந்தபோது,

அவர் தமது உடன்படிக்கை அன்பின் அதிசயத்தை எனக்குக் காண்பித்தார்.

நான் அதிர்ச்சியடைந்து, சங் 116:11எபி 5:7எசேக் 37:11யோபு 35:14யோனா 2:7-9சங் 6:9சங் 88:161 சாமு 23:26

“உமது பார்வையிலிருந்து அகற்றப்பட்டேன்” என்று சொன்னேன்;

ஆனாலும் நான் உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது,

இரக்கத்திற்காக நான் கதறி அழுததை நீர் கேட்டீர்.

யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, அவரில் அன்புகூருங்கள்! சங் 97:10சங் 94:2சங் 145:20யோவா 10:27-30சங் 34:9சங் 30:41 சாமு 2:91 தெச 4:1

யெகோவா அவருக்கு உண்மையாய் இருப்பவர்களைப் பாதுகாக்கிறார்;

ஆனால் பெருமையுள்ளவர்களுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.

யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே, சங் 27:14சங் 146:5கொலோ 1:11ஏசா 35:3-4சங் 29:11எபி 12:12-13சங் 138:3யாக் 5:10-11

நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள்.