மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம்.
என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; ஏசா 51:4ஏசா 55:32 நாளாக 15:1-16நியாயாதி 5:3நீதி 8:4-6சங் 49:1-3சங் 50:7சங் 74:1
என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; மத் 13:34-35மத் 13:11-13மாற் 4:34சங் 49:4நீதி 1:6
நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன்.
நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் சங் 44:1யாத் 12:26-27யாத் 13:14-15யாத் 13:8சங் 48:8
எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.
நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; உபா 11:19உபா 4:9யோவே 1:3சங் 145:4-6உபா 6:7சங் 71:17-18சங் 10:1-5யோசு 4:6-7
யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும்,
அவருடைய வல்லமையையும்,
அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம்.
அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, எபே 6:4உபா 4:45உபா 6:7ஆதி 18:19சங் 81:5உபா 11:19ஏசா 38:19ஏசா 8:20
இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி,
அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி,
நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; யோவே 1:3சங் 102:18உபா 4:10எஸ்த 9:28சங் 145:4சங் 22:31சங் 90:16யோசு 22:24-25
இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள்,
அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.
அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, உபா 5:29வெளி 14:121 யோவா 5:3உபா 4:9யோவா 14:21-241 யோவா 3:22-24எரே 17:7-8உபா 8:11
அவருடைய செயல்களை மறவாமல்,
அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள்.
அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; சங் 78:37யாத் 32:92இராஜா 17:14எசேக் 20:18உபா 31:27அப் 7:512 நாளாக 30:7உபா 9:13
ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும்
நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும்,
அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது.
எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும், 1 சாமு 31:1உபா 1:41-44யோசு 17:16-18சங் 78:571 சாமு 4:10நியாயாதி 20:39நியாயாதி 9:281 நாளாக 12:2
யுத்தநாளிலே புறமுதுகு காட்டி ஓடினார்கள்;
அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல், உபா 31:20உபா 31:16நியாயாதி 2:10-12நெகே 9:26-292இராஜா 17:14-15எரே 31:32
அவருடைய சட்டத்தின்படி வாழ மறுத்தார்கள்.
அவர்கள் அவருடைய செயல்களையும், சங் 106:13உபா 32:18எரே 2:32சங் 106:21-22சங் 78:7
அவர் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், எண் 13:22எசேக் 30:14ஏசா 19:11உபா 6:22யாத் 7:1ஏசா 19:13சங் 135:9உபா 4:34
அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார்.
அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்; யாத் 14:21யாத் 15:8யோசு 3:16சங் 106:9-10சங் 136:13-15சங் 66:61 கொரி 10:2-3ஆப 3:15
அவர் தண்ணீரை ஒரு சுவர்போல் உறுதியாய் நிற்கச்செய்தார்.
அவர் பகலில் மேகத்தினாலும், சங் 105:39யாத் 13:21-22யாத் 14:24யாத் 40:35-38நெகே 9:12நெகே 9:19
இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, யாத் 17:6எண் 20:11சங் 105:411 கொரி 10:4சங் 114:8ஏசா 41:18ஏசா 43:20ஏசா 48:21
கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார்.
அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து, எண் 20:10-11உபா 8:15எண் 20:8சங் 105:41உபா 9:21
தண்ணீரை ஆறுகளைப்போல் பாயும்படி செய்தார்.
ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; ஏசா 63:10உபா 9:8எபி 3:16-19உபா 9:12-22சங் 106:13-32சங் 95:8-10சங் 78:32
மகா உன்னதமானவருக்கு விரோதமாய்ப் பாலைவனத்தில் கலகம் செய்தார்கள்.
அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு, எண் 11:4உபா 6:161 கொரி 10:9சங் 106:14-151 கொரி 10:6யாத் 16:2-3யாக் 4:2-3சங் 95:9
வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தார்கள்.
அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி, எண் 21:5எண் 11:4யாத் 16:3யாத் 16:8-10சங் 23:5எண் 11:13எண் 20:3யோபு 34:37
“பாலைவனத்தில் விருந்தளிக்க
இறைவனால் முடியுமோ?
ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது, எண் 20:11எண் 11:21-23ஆதி 18:12-14எண் 11:18சங் 78:41யாத் 17:6-7
தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது,
நீரோடைகள் நிரம்பி வழிந்தன,
ஆனால் உணவையும் அவரால் கொடுக்க முடியுமோ?
தமது மக்களுக்கு இறைச்சியைக் கொடுக்கவும் அவரால் முடியுமோ?” என்றார்கள்.
யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்; 1 கொரி 10:11யூதா 1:5எண் 11:1-3எபி 12:29எண் 11:101 கொரி 10:5உபா 32:22சங் 78:31
அவருடைய நெருப்பு யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது;
அவருடைய கடுங்கோபம் இஸ்ரயேலுக்கு விரோதமாய் எழும்பியது.
ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை, எபி 3:18-19யூதா 1:5உபா 1:32எபி 11:6எபி 3:121 யோவா 5:10ஏசா 7:9சங் 106:24
அவருடைய மீட்பில் நம்பிக்கை வைக்கவுமில்லை.
ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்; ஆதி 7:11மல்கி 3:102இராஜா 7:19சங் 33:92இராஜா 7:2ஏசா 5:6
வானங்களின் கதவுகளைத் திறந்தார்.
அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்; யாத் 16:4சங் 105:40உபா 8:3யோவா 6:31-71யாத் 16:14நெகே 9:15நெகே 9:20சங் 68:9
பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்; யாத் 16:8மத் 14:20மத் 15:37சங் 103:20
அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை
இறைவன் அவர்களுக்கு அனுப்பினார்.
அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; எண் 11:31சங் 135:7
தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார்.
அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார், யாத் 16:12-13எண் 11:18-19எண் 11:32
பறக்கும் பறவைகளை கடற்கரை மணலைப்போல் பொழியச் செய்தார்.
அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும்,
அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார்.
அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்; எண் 11:19-20சங் 106:15
அவர்கள் எதை ஆசைப்பட்டார்களோ அதையே அவர்களுக்குக் கொடுத்தார்.
ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன், எண் 11:33-34லூக் 16:19-23எண் 22:20-22நீதி 1:32
அது அவர்களுடைய வாய்களில் இருக்கும்போதே,
இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; ஏசா 10:16
அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து,
இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார்.
இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், யோவா 12:37எசேக் 20:13லூக் 16:31சங் 78:22எண் 14:1-45சங் 78:11எண் 16:1-17எண் 21:1-6
அவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்;
அவருடைய அதிசயங்களைக் கண்டும் அவர்கள் அவரை நம்பவில்லை.
ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும், எண் 14:35எண் 14:29எண் 26:64-65உபா 2:14-16பிரச 12:13-14பிரச 1:13-14பிரச 1:2பிரச 12:8
அவர்களுடைய வருடங்களைப் பயங்கரமானதாயும் முடியப்பண்ணினார்.
இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்; ஓசி 5:15எண் 21:7நியாயாதி 3:12-15ஓசி 7:14ஏசா 26:6நியாயாதி 10:7-10நியாயாதி 3:8-9நியாயாதி 4:3
ஆர்வத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள்.
இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும், உபா 32:4ஏசா 41:14யாத் 15:13தீத் 2:14உபா 32:15உபா 7:8ஏசா 48:17உபா 15:15
மகா உன்னதமான இறைவன் தங்கள் மீட்பராய் இருந்தார் என்றும் நினைவில் கொண்டார்கள்.
ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து, எசேக் 33:31ஏசா 29:13உபா 5:28-29ஓசி 11:12ஏசா 57:11சங் 106:12-13சங் 18:44
தங்கள் நாவினால் பொய் சொன்னார்கள்.
அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை; அப் 8:21சங் 78:8சங் 51:10உபா 31:20ஓசி 10:2ஓசி 7:14ஓசி 7:16சங் 119:80
அவர்கள் அவருடைய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்ததுமில்லை.
ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்; எசேக் 20:17ஏசா 48:9எண் 14:18-202இராஜா 21:20யாத் 34:6-9எசேக் 20:13-14எசேக் 20:21-22ஏசா 44:21-22
அவர் அவர்களை அழித்துவிடாமல்
அவர்களுடைய அநியாயங்களை மன்னித்தார்.
அவர் அநேகமுறை கோபங்கொள்ளவில்லை,
அவர் தமது கடுங்கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், ஆதி 6:3யாக் 4:14யோபு 7:7யோபு 7:16யோபு 10:9சங் 103:14-16யோவா 3:6
அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார்.
அவர்கள் எத்தனை முறை பாலைவனத்திலே அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; எபே 4:30சங் 95:8-10எபி 3:15-17ஏசா 63:10எண் 14:11உபா 9:21-22ஏசா 7:13சங் 106:14-33
பாழ்நிலத்திலே அவரைத் துக்கப்படுத்தினார்கள்.
அவர்கள் திரும்பத்திரும்ப இறைவனைச் சோதித்தார்கள்; எண் 14:22எபி 3:8-11அப் 7:39உபா 6:162 பேது 2:21-22எண் 14:4சங் 78:19-202இராஜா 19:22
அவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை வேதனைப்படுத்தினார்கள்.
அவர்கள் அவருடைய வல்லமையையும், நியாயாதி 8:34எரே 32:21யாத் 14:12சங் 78:11சங் 106:7-10சங் 136:10-15யாத் 13:9ஏசா 11:11
ஒடுக்கியவனிடமிருந்து அவர் தங்களை மீட்ட நாளையும் நினைவில்கொள்ளவில்லை.
அந்நாளில் எகிப்திலே அவர் அடையாளங்களையும், யாத் 4:21உபா 6:22யாத் 3:19-20உபா 4:34யாத் 7:3நெகே 9:10சங் 105:27-38சங் 135:9
சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார்.
அவர் அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாறப்பண்ணினார்; சங் 105:29யாத் 7:17-21வெளி 16:3-6
அவர்களுடைய நீரோடைகளிலிருந்து அவர்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை.
அவர் பறக்கும் வண்டு கூட்டங்களை அனுப்பினார், அவைகள் அவர்களை தாக்கின. யாத் 8:21-24யாத் 8:2-15சங் 105:30-31வெளி 16:3
அவர் தவளைகளை அனுப்பினார், அவைகள் அவர்களைப் பாழாக்கின.
அவர் அவர்களுடைய பயிர்களைப் பச்சைப் புழுக்களுக்கும், யாத் 10:12-15சங் 105:34-35ஆமோ 7:1-2யோவே 1:4-7யோவே 2:25வெளி 9:2-11
அவர்களுடைய விளைச்சல்களை வெட்டுக்கிளிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும், யாத் 9:18-34சங் 105:32-33
அவர்களுடைய காட்டத்தி மரங்களை கல்மழையாலும் அழித்தார்.
அவர் அவர்களுடைய மாடுகளை பனிக்கட்டி மழைக்கும், யாத் 9:19யாத் 9:28
அவர்களுடைய மந்தை மிருகங்களை மின்னல் தாக்கத்திற்கும் ஒப்புக்கொடுத்தார்.
அவர் தமது கடுங்கோபத்தையும், 1 இராஜா 22:21-222 சாமு 24:16யாத் 12:13யாத் 15:7புலம் 4:11சங் 11:6ஏசா 42:25யோபு 1:12
சினத்தையும், எதிர்ப்பையும்,
இன்னலையும் அழிவின் தூதர் கூட்டமாக அவர்கள்மேல் கட்டவிழ்த்தார்.
அவர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை அமைத்தார்; எசேக் 7:42 பேது 2:4-5யாத் 9:3-6எசேக் 8:18எசேக் 9:10ரோம 8:32எசேக் 5:11எசேக் 7:9
அவர் அவர்களை மரணத்திலிருந்து தப்பவிடாமல்,
கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் சங் 105:23சங் 106:22சங் 135:8சங் 105:36சங் 136:10யாத் 12:29-30யாத் 13:15யாத் 12:12
காமின் கூடாரங்களில் 1 அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார்.
ஆனால் அவர் தமது மக்களை செம்மறியாடுகளைப்போல் வெளியே கொண்டுவந்து, நெகே 9:12சங் 77:20ஏசா 63:11-14யோவா 10:11-42ஏசா 40:11லூக் 15:4-6சங் 100:3சங் 105:37
அவர்களை மந்தையைப்போல் பாலைவனத்தின் வழியே,
பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால், யாத் 14:19-20யாத் 15:10யாத் 14:27-28யாத் 14:15எபி 11:29சங் 136:15
அவர்கள் பயப்படாதிருந்தார்கள்;
ஆனால் அவர்களுடைய பகைவர்களையோ, கடல் மூடிப்போட்டது.
இறைவன் தமது பரிசுத்த நாட்டின் எல்லைக்கு, யாத் 15:17சங் 44:3தானி 11:45தானி 9:16-20எபே 1:14யாத் 15:13ஏசா 11:9சங் 68:16
தமது வலதுகரத்தினால் கைப்பற்றியிருந்த மலைநாட்டிற்கு, அவர்களைக் கொண்டுவந்தார்.
அவர் அவர்களுக்கு முன்பாகப் பிற நாட்டு மக்களைத் துரத்தி, யோசு 13:7சங் 44:2நெகே 9:22-25உபா 6:10-12யோசு 6:1-21எண் 33:54சங் 105:44-45சங் 136:18-22
அவர்களுடைய நிலங்களைப் பங்கிட்டு சொத்துரிமையாகப் பிரித்துக் கொடுத்தார்;
அவர் இஸ்ரயேலின் கோத்திரங்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்தினார்.
ஆனால், அவர்களோ இறைவனைச் சோதித்து, நியாயாதி 2:11-122இராஜா 17:7-23உபா 31:16-20உபா 32:15-21எசேக் 16:15-26நெகே 9:25-26சங் 78:40-41
உன்னதமானவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்;
அவர்கள் அவருடைய நியமங்களைக் கைக்கொள்ளவில்லை.
அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்; ஓசி 7:16எசேக் 20:27-28நியாயாதி 3:5-7சங் 78:8நியாயாதி 3:12சங் 78:10-37சங் 78:41
இலக்குத் தவறும் வில்லைப்போல் நம்பமுடியாதவர்களாய் இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் வழிபாட்டு மேடைகளால் அவருக்குக் கோபமூட்டினார்கள்; உபா 32:21லேவி 26:301 கொரி 10:221 இராஜா 12:311 இராஜா 11:7உபா 12:2உபா 32:16-17யாத் 20:4-5
அவர்கள் தங்களுடைய இறைவனல்லாதவைகளால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்.
இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்; சங் 106:40புலம் 2:7உபா 32:19ஆதி 18:20-21லேவி 20:23லேவி 26:44சங் 11:4சங் 14:2-5
அவர் இஸ்ரயேலரை முழுமையாகப் புறக்கணித்தார்.
மனிதர் மத்தியில் தாம் அமைத்திருந்த கூடாரமாகிய யோசு 18:11 சாமு 4:4-11எரே 26:6-91 சாமு 1:3எரே 7:12-14
சீலோவின் இறைசமுகக் கூடாரத்தைவிட்டு அகன்றார்.
அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, சங் 132:81 சாமு 4:171 சாமு 4:21நியாயாதி 18:302 நாளாக 6:41யாத் 40:34சங் 24:7சங் 63:2
தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; 1 சாமு 4:2சங் 89:381 சாமு 4:10-11ஏசா 64:9
அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார்.
அவர்களுடைய இளைஞரை நெருப்பு சுட்டெரித்தது; எரே 7:34எரே 16:9எண் 11:1உபா 29:20உபா 32:22ஏசா 4:1எரே 25:10சங் 78:21
அவர்களுடைய இளம்பெண்களுக்குத் திருமணப் பாடல்கள் இல்லாமல் போனது.
அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; 1 சாமு 4:17யோபு 27:151 சாமு 22:18-191 சாமு 4:11எசேக் 24:231 சாமு 2:33-341 சாமு 4:19-20
அவர்களுடைய விதவைகளினால் அழவும் முடியவில்லை.
அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும், சங் 44:23ஏசா 51:9சங் 7:6ஏசா 42:13-14சங் 73:20
போர்வீரன் மதுமயக்கத்திலிருந்து எழும்புவது போலவும் விழித்தெழுந்தார்.
அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்; 1 சாமு 5:6எரே 23:40யோபு 40:121 சாமு 6:4
அவர்களை நித்திய வெட்கத்திற்கு உள்ளாக்கினார்.
அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்; 1 சாமு 6:212 சாமு 6:172 சாமு 6:2
எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளவில்லை.
ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும், சங் 87:2ஆதி 49:8-10சங் 132:12-141 சாமு 16:12 நாளாக 6:6ரூத் 4:17-22
தாம் நேசித்த சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
அவர் தாம் வாழும் தமது பரிசுத்த இடத்தை உயர்ந்த வானங்களைப் போலவும், 1 இராஜா 6:1-38ஏசா 51:61 நாளாக 29:11 நாளாக 29:191 இராஜா 9:81 சாமு 2:82 நாளாக 2:92 நாளாக 3:4
நித்தியமாய் தாம் நிலைப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
அவர் தமது அடியானாகிய தாவீதைத் தெரிந்தெடுத்து, 1 சாமு 16:11-12அப் 13:221 இராஜா 19:19-201 சாமு 17:15-542 சாமு 3:182 சாமு 6:212 சாமு 7:8ஆமோ 7:14-15
அவனை செம்மறியாட்டுத் தொழுவங்களிலிருந்து கொண்டுவந்தார்.
ஆடுகளை மேய்ப்பதைவிட்டுத் தமது மக்களாகிய யாக்கோபுக்கும், 2 சாமு 5:21 நாளாக 11:21 பேது 5:21 சாமு 10:11 சாமு 2:7-8எசேக் 34:23-24ஆதி 33:13ஏசா 40:11
தமது உரிமைச்சொத்தான இஸ்ரயேலுக்கும்
மேய்ப்பனாக இருக்கும்படியாக அவனைக் கொண்டுவந்தார்.
தாவீது அவர்களை தன் இருதயத்தின் உத்தமத்தோடு மேய்த்தான்; 1 இராஜா 9:42 தீமோ 2:15ஏசா 11:2-41 இராஜா 15:5அப் 13:22சங் 101:1-81 இராஜா 3:281 இராஜா 3:6-9
கைத்திறமையால் அவர்களை வழிநடத்தினான்.