சங்கீதங்கள் 146

Psalms 146
சங்கீதம் 146

அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, சங் 103:22சங் 103:1சங் 104:35சங் 105:45

யெகோவாவை துதி.

நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; சங் 63:4சங் 104:33சங் 145:1-2சங் 71:14-15வெளி 7:9-17

நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.

பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். சங் 118:8-9எரே 17:5-6ஏசா 2:22சங் 108:12ஏசா 31:3சங் 62:9ஏசா 37:6சங் 60:11

அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; பிரச 12:7சங் 104:29ஆதி 2:7ஆதி 3:191 கொரி 2:6தானி 5:23யோபு 27:3சங் 33:10

அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.

யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, எரே 17:7-8சங் 144:15சங் 71:5சங் 33:12சங் 46:11சங் 84:12யாத் 3:6ஆதி 32:24-29

தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; யாத் 20:11வெளி 14:7சங் 100:5சங் 136:5-6கொலோ 1:16ஆதி 1:1எரே 32:17நீதி 8:28-29

அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; சங் 103:6சங் 68:6ஏசா 61:1நீதி 22:22-23சகரி 9:11-12லூக் 4:18சங் 10:18சங் 142:7

பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;

கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.

குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; சங் 11:7சங் 145:14அப் 26:18மத் 9:30எபே 1:18ஏசா 35:52 கொரி 7:6யோவா 16:27

விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.

நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.

அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; சங் 68:5உபா 10:18-19சங் 147:6யாத் 22:21-22மல்கி 3:5நீதி 15:25எரே 49:11யாக் 1:27

அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;

துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.

யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சங் 10:16யாத் 15:18வெளி 11:15தானி 6:26தானி 7:14ஏசா 12:6ஏசா 9:7யோவே 3:17

சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார்.

அல்லேலூயா.