அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, சங் 69:34சங் 89:5வெளி 19:1-6லூக் 2:13-14ஏசா 49:13மத் 21:9சங் 146:1
யெகோவாவை துதியுங்கள்;
உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
அவருடைய தூதர்களே, சங் 103:20-21ஏசா 6:2-4எசேக் 3:12ஆதி 2:1யோபு 38:7வெளி 5:11-13
நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்;
அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்.
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; சங் 19:1-6சங் 136:7-9சங் 8:1-3ஆதி 1:14-16உபா 4:19ஆதி 8:22சங் 89:36-37எரே 33:20
பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; 1 இராஜா 8:27ஆதி 1:7உபா 10:14நெகே 9:62 கொரி 12:2ஆதி 7:11சங் 104:3சங் 113:6
வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே,
அவரைத் துதியுங்கள்.
அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; வெளி 4:11ஆதி 1:6சங் 33:6-9ஆதி 1:1-2எரே 10:11-13ஆமோ 9:6சங் 95:5
அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; எரே 33:25எரே 31:35-36யோபு 38:33சங் 89:37சங் 119:90-91யோபு 38:10-11ஏசா 54:9நீதி 8:27-29
மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார்.
பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; ஆதி 1:21சங் 74:13-14ஏசா 43:20யோபு 41:1-34சங் 104:25-26ஏசா 27:1ஏசா 51:9-10
பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே,
அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, சங் 147:15-18வெளி 16:21வெளி 16:8-9ஆமோ 7:4யாத் 10:13யாத் 10:19யாத் 14:21யாத் 9:23-25
அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, ஏசா 44:23ஏசா 49:13ஏசா 55:12-13சங் 97:4-5சங் 98:7-9எசேக் 36:1-15ஏசா 42:11ஏசா 64:1
எல்லா கேதுருக்களே,
காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, ஆதி 1:20-25சங் 150:6சங் 103:22எசேக் 17:23ஆதி 7:14சங் 50:10-11
ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, ஏசா 60:3சங் 102:15வெளி 21:24ஏசா 49:23நீதி 8:15-16சங் 138:4-5சங் 2:10-12சங் 22:27-29
பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே,
வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, எரே 31:13தீத் 2:4-6மத் 21:15-16சங் 68:25லூக் 19:37சங் 8:2சகரி 9:17
யெகோவாவை துதியுங்கள்.
அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; சங் 113:4சங் 8:1சங் 8:9ஏசா 12:4சங் 99:3-41 பேது 3:22ஏசா 33:5ஏசா 6:3
அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது;
அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், சங் 75:10உபா 4:7எபே 2:171 சாமு 2:1சங் 112:91 பேது 2:9உபா 10:21வெளி 5:8-14
தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக,
தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார்.
அல்லேலூயா.