தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; 1 பேது 3:12சங் 86:6சங் 61:1சங் 27:9சங் 64:1சங் 80:1சங் 143:7சங் 54:1-2
என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.
எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; ஏசா 38:14சங் 66:19சங் 77:3ஏசா 59:11சங் 64:1சங் 102:9-10சங் 38:6சங் 43:2
எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும்,
துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன்.
அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு, 2 சாமு 16:7-8சங் 35:11சங் 27:122 சாமு 15:32 சாமு 19:19புலம் 3:34-36மத் 26:59சங் 12:5
என்னைப் பகைக்கிறார்கள்.
என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; சங் 116:3மாற் 14:33-342 கொரி 1:8-10எபி 5:7சங் 18:4-5ஏசா 38:10-13மத் 26:37-38சங் 102:3-5
மரணபயம் என்மேல் விழுந்தது.
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது. யோபு 21:6சங் 119:120லூக் 22:442 சாமு 15:14எசேக் 7:18ஏசா 21:4யோபு 23:15-16யோபு 6:4
அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால், சங் 11:1வெளி 12:14சங் 139:9
நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா) எரே 9:22 சாமு 15:14எரே 37:122 சாமு 17:21-22நீதி 6:4-51 சாமு 27:1
பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன். ஏசா 4:6மத் 7:25-27சங் 18:4ஏசா 17:12-13
ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்; எரே 6:72 சாமு 15:31அப் 23:6-10ஆதி 11:7-92 சாமு 17:1-14எரே 23:14யோவா 7:45-53மத் 23:37-38
கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; சங் 59:14-15ஏசா 59:6-15யோவா 18:28அப் 9:24எசேக் 9:4சங் 59:61 சாமு 19:112 சாமு 16:21-22
அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; ஏசா 59:7சங் 5:9அப் 7:51-52எரே 5:26-27சங் 10:7எசேக் 22:1-12எரே 9:3-5மத் 26:4
கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.
என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; சங் 41:9யோவா 13:18மத் 26:21-23சங் 35:26யோவா 18:2-3ஏசா 10:15சங் 38:16
எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல,
அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன். மீகா 7:52 சாமு 15:12எரே 9:4மாற் 14:44-452 சாமு 16:23லூக் 22:47-48சங் 41:9லூக் 22:21
நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து, சங் 42:4எசேக் 33:31ஏசா 2:3சங் 122:1
கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; சங் 59:13அப் 1:18-20சங் 109:6-20சங் 64:7சங் 9:172 சாமு 18:14அப் 1:25மத் 26:24
அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக;
அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது.
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; சங் 50:15லூக் 6:11-12சங் 73:28சங் 91:15சங் 109:4
யெகோவா என்னை காப்பாற்றுவார்.
காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்; 1 தெச 5:17எபே 6:18சங் 141:2அப் 3:1எபி 5:7அப் 10:9தானி 6:10மாற் 1:35
அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார்.
திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; 1 யோவா 4:4மத் 26:53சங் 3:6-7சங் 57:32 நாளாக 32:7-82 சாமு 22:1சங் 27:1-32இராஜா 6:16
அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி,
என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; உபா 33:27செப்ப 1:12பிரச 8:11கொலோ 1:17எரே 48:11மீகா 5:2வெளி 6:10-111 தெச 2:15-16
அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)
அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத் அப் 12:1சங் 7:4சங் 89:34சங் 109:5சங் 120:6-71 சாமு 22:171 சாமு 24:10பிரச 8:2
தன்னுடைய கையை நீட்டி
தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான்.
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், சங் 57:4நீதி 5:3-4நீதி 26:28சங் 28:3லூக் 20:20-21நீதி 26:24-26சங் 12:2சங் 64:3
அவனுடைய இருதயமோ யுத்தம்;
அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள்.
ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.
யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; 1 பேது 5:7சங் 37:5பிலி 4:6-7மத் 6:25சங் 62:6சங் 16:8சங் 27:14சங் 37:24
நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; நீதி 10:27சங் 5:6யோபு 15:32சங் 7:15-16சங் 73:18பிரச 7:17ஏசா 38:17மத் 27:4-5
இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்;
நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.