செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், சங் 118:18சங் 38:1எரே 10:24எரே 46:281 கொரி 11:31-321 நாளாக 15:21ஏசா 57:16ஏசா 54:9
உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, ஓசி 6:1சங் 30:2சங் 31:10எரே 17:14உபா 32:39சங் 41:3-4சங் 51:8ஆதி 20:17
நான் பெலனில்லாமல் போனேன்;
என்னைக் குணமாக்கும் யெகோவாவே,
என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, சங் 90:13யோவா 12:27லூக் 18:7சங் 13:1-2சங் 42:11சங் 42:5சங் 77:2-3மத் 26:38
எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; தானி 9:18எபே 2:7-8சங் 116:4சங் 17:13மல்கி 3:7சங் 121:7சங் 22:20சங் 80:14
உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, சங் 88:10-12சங் 115:17பிரச 9:10சங் 30:9ஏசா 38:18-19சங் 118:17யோவா 9:4
பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; சங் 38:9சங் 42:3சங் 69:3யோபு 16:20யோபு 23:2யோபு 7:3புலம் 1:16புலம் 1:2
இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,
என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, யோபு 17:7சங் 38:10புலம் 5:17சங் 88:9சங் 31:9-10சங் 32:3
என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; லூக் 13:27சங் 119:115சங் 145:18மத் 7:23சங் 3:4எபி 5:7மத் 25:41சங் 139:19
யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; சங் 66:19-20சங் 120:12 கொரி 12:8-10சங் 118:5சங் 138:3சங் 40:1-2யோனா 2:72 கொரி 1:10-11
யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; எரே 20:11மல்கி 3:18சங் 86:17நீதி 29:1ஏசா 26:11சங் 109:28-29சங் 112:10சங் 132:18
அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.