ஆசாபின் பாடல்.
தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், சங் 28:1சங் 35:22சங் 50:3ஏசா 42:14சங் 109:1-2சங் 44:23
பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம்.
இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, சங் 81:15ஏசா 17:12மத் 27:24ஏசா 37:23நியாயாதி 8:28எரே 1:192இராஜா 19:28அப் 16:22
உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள்.
உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, சங் 64:2சங் 27:5சங் 31:20ஏசா 7:6-7லூக் 20:20-23சங் 10:9சங் 91:1சங் 56:6
உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள்.
அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், எரே 48:2எரே 11:19எஸ்த 3:6-9சங் 74:8அப் 9:1-2தானி 7:25யாத் 1:10எரே 31:36
இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக,
அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.
இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், சங் 2:2ஏசா 8:9-10வெளி 17:13ஏசா 7:5-7வெளி 19:192 சாமு 10:6-8ஏசா 7:2யோவா 11:47-53
இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும்,
கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், 1 நாளாக 5:102 நாளாக 20:12 நாளாக 20:10-11சங் 137:71 நாளாக 5:19-20ஆதி 25:12-18
தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும்,
ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து, யோசு 13:5எசேக் 27:3எசேக் 27:91 சாமு 15:21 சாமு 4:1ஆமோ 1:9
உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து, உபா 2:92இராஜா 15:19ஆதி 10:11ஆதி 19:37-38ஆதி 25:3ஏசா 33:2
லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா)
மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், ஏசா 9:4நியாயாதி 4:15-24நியாயாதி 5:21எண் 31:7-8ஏசா 10:26நியாயாதி 4:7நியாயாதி 7:1-25
கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, செப்ப 1:171 சாமு 28:7யோசு 17:112இராஜா 9:37எரே 16:4எரே 8:2
யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், நியாயாதி 7:25நியாயாதி 8:12-21
அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே. 2 நாளாக 20:11சங் 74:7-8சங் 83:4
என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், யோபு 21:18சங் 35:5ஏசா 40:24எரே 13:24யோபு 13:25சங் 74:11-12யாத் 15:7ஏசா 17:12-14
காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், உபா 32:22மல்கி 4:1ஏசா 9:18எசேக் 20:47-48ஏசா 30:33ஏசா 33:11-12ஏசா 64:1-2நாகூ 1:10
அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,
நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, யோபு 9:17சங் 50:3ஏசா 28:17சங் 58:9எபி 12:18யோபு 27:20-23மத் 7:27சங் 11:6
உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும்.
யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, சங் 6:10சங் 9:19-20யோபு 10:15சங் 109:29சங் 132:18சங் 34:5
அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே சங் 35:4சங் 109:29சங் 35:26சங் 40:14-15
நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி,
அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, யாத் 6:3எசேக் 38:23எரே 16:21சங் 59:132இராஜா 19:19சங் 97:9தானி 4:32எசேக் 30:19
அவமானமடைந்து அழிந்துபோவார்களாக.