முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; சங் 86:121 நாளாக 16:24சங் 145:1-3சங் 103:1-2சங் 111:1சங் 26:7எபி 13:15சங் 146:1-2
உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; சங் 83:18சங் 5:11சங் 7:17சங் 28:7சங் 97:9பிலி 4:4சங் 92:1சங் 97:12
உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, 2 தெச 1:9சங் 76:7சங் 80:16வெளி 20:11வெளி 6:12-17ஏசா 64:3சங் 68:1-2
உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, சங் 140:121 பேது 2:23ஏசா 11:4சங் 98:9சங் 47:8சங் 89:14சங் 16:5சங் 45:6-7
நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர்.
தேசங்களைக் கடிந்துகொண்டு, நீதி 10:7மல்கி 4:3வெளி 19:15உபா 9:14நீதி 13:92 சாமு 17:232 சாமு 22:44-46சங் 149:7
துன்மார்க்கர்களை அழித்து,
அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர்.
எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; யாத் 14:13ஏசா 14:22-231 கொரி 15:26மீகா 7:81 கொரி 15:54-571 சாமு 31:72இராஜா 19:25யாத் 15:16
அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்;
அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது.
யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; சங் 103:19எபி 13:8வெளி 20:11சங் 102:12சங் 89:142 பேது 3:8எபி 1:11-12சங் 102:24-27
தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார்.
அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, சங் 96:13வெளி 20:12-13அப் 17:31சங் 98:9ரோம 2:16ரோம 2:5-6ஆதி 18:25ஏசா 11:4-5
எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார்.
சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; நீதி 18:10சங் 91:1-2நாகூ 1:7சங் 32:7சங் 46:1சங் 62:8சங் 18:2சங் 37:39
நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; சங் 91:14நீதி 18:10ஏசா 26:3-4சங் 105:3-42 கொரி 1:9-10எரே 29:13சங் 5:112 தீமோ 1:12
ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.
சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, சங் 107:22சங் 148:1-5சங் 96:1-2சங் 66:2ஏசா 12:4-6சங் 105:1-2சங் 118:17சங் 96:10
அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்.
ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, சங் 34:6யாத் 3:7வெளி 16:6ஆதி 9:5வெளி 6:9-10ஏசா 26:21லூக் 18:7-8சங் 22:24
அவர்களை நினைக்கிறார்;
எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார்.
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, சங் 30:3ஏசா 38:10சங் 13:3சங் 86:13புலம் 1:11புலம் 1:9நெகே 9:32சங் 107:18
நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து,
உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு,
தேவனே நீர் எனக்கு இரங்கி, சங் 13:51 சாமு 2:1சங் 106:2சங் 20:5சங் 35:9சங் 51:12ஆப 3:18ஏசா 37:22
என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: சங் 57:6நீதி 5:22சங் 35:8சங் 7:15-16நீதி 22:8சங் 94:23சங் 37:15
அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.
யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; யாத் 7:5நீதி 12:13யாத் 14:31சங் 83:17-18யாத் 14:4ஏசா 8:15நியாயாதி 1:7யோசு 2:10-11
துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், சங் 50:22வெளி 21:8ரோம 2:8-92 தெச 1:7-9யோபு 8:13ஏசா 3:11எரே 13:25எரே 18:15
நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சங் 12:5நீதி 23:18யாக் 2:5நீதி 24:14லூக் 1:53லூக் 6:20சங் 102:20சங் 102:17
ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; சங் 3:7சங் 44:23சங் 44:26ஏசா 51:9சங் 10:12சங் 149:7சங் 7:6சங் 74:22-23
தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்
தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, ஏசா 31:3எரே 32:40சங் 62:9சங் 82:6-7அப் 12:22-23உபா 2:25சங் 76:12யாத் 23:27
அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா).