சங்கீதங்கள் 107

Psalms 107
சங்கீதம் 107

பகுதி v

யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; 1 நாளாக 16:34சங் 106:12 நாளாக 7:3சங் 105:1சங் 100:5லூக் 1:50சங் 118:12 நாளாக 7:6

அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள், 1 பேது 1:18-19லூக் 1:74கலா 3:13சங் 106:10சங் 31:5தீத் 2:14ஏசா 44:22ஏசா 35:9

எதிரிகளின் கையிலிருந்து அவரால் விடுதலையாக்கப்பட்டவர்கள்,

கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் சங் 106:47ஏசா 43:5-6எரே 29:14வெளி 5:9உபா 30:3எசேக் 36:24எசேக் 39:27எரே 31:10

தெற்கிலுமிருக்கும் பல நாடுகளிலிருந்தும் சேர்க்கப்பட்டவர்கள் இதைச் சொல்லட்டும்.

சிலர் தாங்கள் குடியிருக்கத்தக்க பட்டணத்திற்குப் போகும் வழியைக் காணாமல், உபா 32:10எசேக் 34:12எசேக் 34:6எண் 14:33ஆதி 21:14-16எபி 11:38யோபு 12:24சங் 107:40

பாலைவனத்தின் பாழ்நிலங்களிலே அலைந்து திரிந்தார்கள்.

அவர்கள் பசியாயும் தாகமாயும் இருந்தார்கள், மாற் 8:2-31 சாமு 30:11-12ஏசா 44:12நியாயாதி 15:18-19புலம் 2:19எரே 14:18

அவர்களுடைய ஆத்துமா சோர்ந்துபோயிற்று.

அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், சங் 50:15சங் 91:15எபி 4:15-16எரே 29:12-142 கொரி 1:8-10சங் 107:13சங் 107:19சங் 107:28

அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை விடுவித்தார்.

குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்திற்கு எரே 31:9எஸ்றா 8:21-23எபி 11:9-10எபி 12:22சங் 77:202 பேது 2:15எபி 11:16ஏசா 30:21

அவர் அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தினார்.

யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், சங் 107:31சங் 147:1தானி 4:2-3சங் 107:15சங் 107:21சங் 78:4தானி 6:27உபா 32:29

அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களின் நிமித்தமும்

நன்றி செலுத்துவார்களாக.

ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்; மத் 5:6எரே 31:25சங் 34:10லூக் 1:53சங் 146:7ஏசா 55:1-3சங் 22:26வெளி 7:16-17

பசியாய் இருப்பவர்களை நன்மையினால் நிரப்புகிறார்.

சிலர் இருளிலும் காரிருளிலும் உட்கார்ந்தார்கள், லூக் 1:79மீகா 7:8ஏசா 42:7மத் 4:16ரோம 6:20-21யாத் 2:23-24யோபு 36:8-9மத் 22:13

சிறைக் கைதிகள் இரும்புச் சங்கிலிகளில் கட்டுண்டு வேதனைப்பட்டார்கள்.

ஏனெனில், அவர்கள் இறைவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய்க் கலகம்செய்து, சங் 106:43நீதி 1:25சங் 78:40ரோம 1:281 சாமு 2:5-82 நாளாக 33:102 நாளாக 36:16அப் 20:27

மகா உன்னதமான இறைவனின் ஆலோசனையை அசட்டைபண்ணினார்கள்.

ஆகவே அவர் அவர்களைக் கடினமான வேலைக்குட்படுத்தினார்; சங் 22:11யாத் 5:18-19யாத் 2:23லூக் 15:14-17ஏசா 51:232இராஜா 6:26-272இராஜா 6:33ஏசா 51:19-20

அவர்கள் இடறி விழுந்தார்கள்; அவர்களுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருக்கவில்லை.

அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; சங் 107:28சங் 107:6நியாயாதி 4:3நியாயாதி 6:6-10சங் 18:62 நாளாக 33:12-13யாத் 3:7-8சங் 116:3-6

அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.

அவர் அவர்களை, இருட்டிலிருந்தும் ஏசா 42:16சங் 116:16எபே 5:81 பேது 2:9சகரி 9:11-12சங் 107:10ஏசா 61:1எரே 52:31-34

ஆழ்ந்த இருளிலிருந்தும் வெளியே கொண்டுவந்து,

அவர்களுடைய சங்கிலிகளை அறுத்தெறிந்தார்.

யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், சங் 107:21சங் 107:31சங் 107:8சங் 116:17-19

அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும்

நன்றி செலுத்துவார்களாக.

ஏனெனில் யெகோவா வெண்கல வாசல்களை உடைத்தெறிகிறார்; ஏசா 45:1-2நியாயாதி 16:3மீகா 2:13

இரும்புத் தாழ்ப்பாள்களை வெட்டிப் பிளக்கிறார்.

சிலர் தங்களுடைய கலக வழிகளின் காரணமாக மூடராகி, புலம் 3:39நீதி 1:22ஏசா 57:17-18ஏசா 65:6-7எரே 2:19எண் 11:33-34எண் 21:5-9நீதி 7:7

தங்கள் அநியாயத்தினிமித்தம் உபத்திரவத்தை அனுபவித்தார்கள்.

அவர்கள் எல்லா உணவையும் அருவருத்து, சங் 88:3சங் 9:13யோபு 33:19-22ஏசா 38:10யோபு 38:17

மரண வாசல்களை நெருங்கினார்கள்.

அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; சங் 34:4-6சங் 78:34-35எரே 33:3சங் 107:13சங் 107:6சங் 116:4-8சங் 30:8-12சங் 107:28

அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.

அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவர்களைச் சுகப்படுத்தினார்; மத் 8:8சங் 103:3-4சங் 147:15சங் 147:32இராஜா 20:4-5யோபு 33:28-30சங் 56:13சங் 147:18-19

அவர் அவர்களை மரணக் குழிகளிலிருந்து தப்புவித்தார்.

யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், சங் 107:8லூக் 17:182 நாளாக 32:25சங் 107:15சங் 107:31சங் 66:5

அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும்

நன்றி செலுத்துவார்களாக.

அவர்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிட்டு, சங் 50:14சங் 118:17சங் 9:11எபி 13:15சங் 105:1-2சங் 116:17ஏசா 12:4லேவி 7:12

மகிழ்ச்சியின் பாடல்களால் அவருடைய செயல்களை அறிவிக்கட்டும்.

சிலர் கப்பல்களில் ஏறிக் கடல்மேல் போனார்கள்; சங் 48:7வெளி 18:17அப் 27:9-28எசேக் 27:26ஏசா 42:10

அவர்கள் கடலின் திரளான தண்ணீரின்மேல் தொழில் செய்தார்கள்.

அவர்கள் யெகோவாவினுடைய செயல்களையும், சங் 95:5யோபு 38:8-11சங் 104:24-27

ஆழத்தில் அவர் செய்த புதுமையான செயல்களையும் கண்டார்கள்.

ஏனெனில் அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழும்பிற்று; யோனா 1:4மத் 8:24சங் 148:8சங் 105:34சங் 93:3யோவா 6:18சங் 105:31சங் 135:7

அது அலைகளை உயர எழச்செய்தது.

அவர்கள் வானங்கள்வரை ஏறி, ஆழங்கள்வரை இறங்கிச் சென்றனர்; சங் 22:14சங் 119:282 சாமு 17:10ஏசா 13:7நாகூ 2:10

அவர்களுடைய ஆபத்தில் அவர்களுடைய தைரியம் பயனற்றுப்போனது.

அவர்கள் வெறியரைப்போல் உருண்டு புரண்டார்கள்; யோபு 12:25ஏசா 19:14ஏசா 19:3ஏசா 29:9அப் 27:15-20ஏசா 24:20யோபு 37:20

அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போயிற்று.

அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; மத் 8:25சங் 107:13சங் 107:19சங் 107:6அப் 27:23-25யோனா 1:14யோனா 1:5-6

அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.

அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்; மத் 8:26லூக் 8:23-25சங் 65:7மாற் 4:39-41சங் 89:9யோனா 1:15

கடலின் அலைகள் அடங்கிப்போயின.

அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்; யோவா 6:21

அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்குப் போக அவர் அவர்களுக்கு வழிகாட்டினார்.

யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், சங் 103:2சங் 107:8சங் 107:15சங் 107:21வெளி 15:32 தீமோ 3:2எபி 13:15ஓசி 2:8

அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும்

நன்றி செலுத்துவார்களாக.

மக்களின் சபையில் அவர்கள் அவரை புகழ்ந்துயர்த்தி, சங் 22:22சங் 22:25சங் 46:10சங் 99:5ஏசா 25:1சங் 119:46சங் 40:9-10அப் 4:8-12

தலைவர்களின் ஆலோசனை சபையிலே அவரைத் துதிக்கட்டும்.

யெகோவா ஆறுகளைப் பாலைவனமாகவும், ஏசா 42:15ஏசா 50:2ஆமோ 4:7-81 இராஜா 17:1-71 இராஜா 18:5எசேக் 30:12ஏசா 13:19-21ஏசா 19:5-10

சுரக்கும் நீரூற்றுகளை வறண்ட தரையாகவும் மாற்றினார்,

செழிப்பான நாட்டை உவர் நிலமாக மாற்றினார்; ஆதி 13:10ஆதி 14:3உபா 29:23-28எசேக் 47:11ஆதி 13:13ஆதி 19:24-25ஏசா 32:13-15

அங்கே வசித்தவர்களின் கொடுமையின் நிமித்தமே அவ்வாறு செய்தார்.

அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும், சங் 114:8ஏசா 35:6-7ஏசா 41:17-19ஏசா 44:3-52இராஜா 3:16-20எசேக் 47:6-12எண் 21:16-18

வறண்ட நிலத்தை சுரக்கும் நீரூற்றாகவும் மாற்றினார்.

பசியுள்ளவர்களை அங்கே குடியிருக்கும்படி கொண்டுவந்தார்; லூக் 1:53சங் 107:7அப் 17:26சங் 146:7

அங்கே அவர்கள் தாங்கள் குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்தைக் கட்டினார்கள்.

அவர்கள் வயல்வெளிகளில் விதைத்து, திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினார்கள்; 1 கொரி 3:72 கொரி 9:10ஏசா 37:30எரே 29:5சகரி 8:12எசேக் 28:26ஆதி 26:12ஆகா 1:10-11

அவை செழிப்பான அறுவடையைக் கொடுத்தன.

யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார், அவர்கள் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது; யாத் 1:7ஆதி 12:2ஆதி 17:20உபா 30:9உபா 7:14சங் 128:1-6உபா 28:11ஆதி 17:16

அவர்களுடைய மந்தைகள் குறைந்துபோக அவர் விடவில்லை.

பின்பு இறைவனது மக்களின் எண்ணிக்கை குறைந்தது, 2இராஜா 10:32யாத் 2:23-242 நாளாக 15:5-62இராஜா 14:26நியாயாதி 6:3-61 சாமு 2:5-72இராஜா 13:222இராஜா 13:7

அவர்கள் ஒடுக்குதலினாலும் இடுக்கணினாலும் கவலையினாலும் சிறுமையடைந்தார்கள்;

பெருமையான அதிகாரிகளின்மேல் இகழ்வை வரப்பண்ணும் அவரே, யோபு 12:24யோபு 12:21தானி 4:33ஏசா 23:8-91 இராஜா 21:191 சாமு 5:91 சாமு 6:42இராஜா 9:35-37

அவர்களைப் பாதையற்ற பாழ்நிலத்தில் அலையப்பண்ணினார்.

ஆனால் எளியவர்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து தூக்கியெடுத்து, 1 சாமு 2:8யோபு 21:111 சாமு 2:21எஸ்த 8:15-17ஏசா 49:20-22யோபு 8:7சங் 78:52யாக் 5:11

அவர்களுடைய குடும்பங்களை மந்தையைப்போல் பெருகப்பண்ணினார்.

நீதிமான்கள் அதைக்கண்டு மகிழ்கிறார்கள்; யோபு 22:19சங் 63:11ரோம 3:19சங் 52:6யோபு 5:15-16யாத் 11:7ஏசா 66:10-11ஏசா 66:14

ஆனால் கொடியவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள்.

ஞானமுள்ளவன் எவனோ அவன் இதைக் கவனித்துக் கொள்ளட்டும்; ஓசி 14:9எரே 9:12சங் 64:9தானி 10:12எபே 3:18-19எரே 9:24சங் 50:23ஏசா 5:12

யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பின் செயல்களைப்பற்றி சிந்திக்கட்டும்.