கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், சங் 78:1மத் 11:15சங் 33:8மத் 28:19-20வெளி 2:17வெளி 2:7ரோம 10:18ரோம 3:29
இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே,
தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, சங் 62:9யாக் 2:1-71 சாமு 2:7-8எரே 5:4-5யோபு 34:19நீதி 22:2யாக் 1:9-11வெளி 6:15-17
எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்:
என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்; மத் 12:35சங் 19:14நீதி 22:20-21நீதி 22:172 தீமோ 3:15-17உபா 32:2யோபு 33:3யோபு 33:33
என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.
நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்; சங் 78:2மத் 13:35எண் 12:8எண் 23:72 கொரி 3:12லூக் 12:3மத் 13:11-15தானி 8:23
விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்:
தீங்கு நாட்கள் வரும்போதும், அப் 27:24பிலி 1:28நீதி 24:10ரோம 8:33-341 சாமு 26:20ஆமோ 5:13எபே 5:16ஆதி 49:17
கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும்
நான் ஏன் பயப்படவேண்டும்?
அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, 1 தீமோ 6:17எசேக் 28:4-5எரே 9:23சங் 52:7நீதி 11:28லூக் 12:19மாற் 10:24எஸ்த 5:11
தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள்.
ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; மத் 16:26மத் 20:281 பேது 1:181 தீமோ 2:6மத் 25:9
அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.
ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; மத் 16:26யோபு 36:18-19
எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது.
அவர்கள் அழிவைக் காணாமல் சங் 89:48சங் 16:10பிரச 8:8யோவா 8:51-52நீதி 10:2நீதி 11:4அப் 2:27அப் 2:31
என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது.
ஞானிகள் சாவதையும், லூக் 12:20சங் 39:6பிரச 5:13-161 தீமோ 6:6-10எபி 9:27எரே 10:8நீதி 30:2பிரச 2:26
மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்;
அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.
தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், ஆதி 4:17சங் 5:9சங் 64:62 சாமு 18:18எசேக் 38:10சங் 10:61 சாமு 15:12அப் 8:22
அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும்
முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.
ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; பிரச 3:18-21சங் 39:5சங் 49:20சங் 82:7பிரச 9:12யாக் 1:10-111 பேது 1:24
அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.
தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; லூக் 12:201 கொரி 3:19லூக் 16:27-28எரே 44:17லூக் 11:47-48
இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே.
அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மல்கி 4:31 கொரி 6:2தானி 7:22யோபு 24:19-20யோபு 30:23தானி 7:18எரே 12:3லூக் 22:30
மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும்.
நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்;
அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல்,
கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும்.
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; சங் 73:24சங் 56:13சங் 86:13சங் 89:48ஓசி 13:14சங் 16:10-11வெளி 5:9ஆதி 5:24
அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார்.
பிறர் செல்வந்தர்களாகி, சங் 37:7சங் 37:1வெளி 21:24வெளி 21:26எஸ்த 3:1-6ஆதி 31:1எஸ்த 5:11நீதி 28:12
அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;
ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; 1 தீமோ 6:7யோபு 27:191 கொரி 15:43பிரச 5:15யோபு 1:21லூக் 16:24ஏசா 10:3ஏசா 5:14
அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.
அவர்கள் உயிரோடிருந்தபோது, உபா 29:19லூக் 12:19சங் 10:31 சாமு 25:6அப் 12:20-22எஸ்த 3:2ஓசி 12:8வெளி 13:3-4
தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள்.
அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; யோபு 33:30ஆதி 15:15சங் 56:13லூக் 12:201 இராஜா 16:6பிரச 12:7பிரச 3:21யூதா 1:13
வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.
செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் பிரச 3:18-19சங் 49:12எஸ்த 7:10யோபு 4:21எஸ்த 5:11-14சங் 73:18-19
அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.