சங்கீதங்கள் 132

Psalms 132
சங்கீதம் 132

ஆரோகண பாடல்.

யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும். சங் 120:1சங் 129:1புலம் 5:1சங் 121:1சங் 126:1யாத் 2:24ஆதி 8:1புலம் 3:19

அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், ஆதி 49:24சங் 65:12 சாமு 7:1ஏசா 49:26ஏசா 60:16சங் 116:14-18சங் 119:106சங் 132:5

யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை,

என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை, ஆகா 1:4மத் 6:33பிரச 9:10

என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், நீதி 6:4ரூத் 3:18ஆதி 24:33

என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,

யெகோவாவுக்கு ஆணையிட்டு, எபே 2:221 நாளாக 22:72 நாளாக 2:6அப் 7:46-491 நாளாக 15:121 நாளாக 15:31 இராஜா 8:272 சாமு 6:17

யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான்.

இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, 1 சாமு 17:121 சாமு 7:1மீகா 5:21 நாளாக 13:5-6ஆதி 35:19ரூத் 1:2

வயல்வெளிகளில் அதைக் கண்டோம்.

அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, சங் 99:5சங் 5:7புலம் 2:1சங் 118:19சங் 122:1சங் 95:6ஏசா 2:3சங் 66:13-14

அவர் பாதத்தில் பணிவோம்.

யெகோவாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும். 2 நாளாக 6:41-42எண் 10:35-36சங் 68:1சங் 78:61

உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும். யோபு 29:14வெளி 19:81 பேது 5:5ஏசா 61:10சங் 104:1சங் 132:16சங் 93:1சகரி 9:9

நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும். 2 நாளாக 6:421 இராஜா 11:12-131 இராஜா 11:341 இராஜா 15:4-52இராஜா 19:34ஓசி 3:5சங் 84:9சங் 89:38-39

உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும், 2 சாமு 7:12அப் 2:30சங் 89:3-4சங் 110:42 நாளாக 6:16எபி 6:18லூக் 1:32லூக் 1:69-70

உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், அப் 2:30ஏசா 59:21லூக் 1:32-33சங் 89:30-35ஏசா 9:7சங் 102:28சங் 115:14

நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால்,

அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும்,

யெகோவா தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.

யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, எபி 12:22சங் 78:68-69சங் 68:16சங் 87:2சங் 76:1-2ஏசா 14:32சங் 48:1-3

அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.

இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; சங் 132:81 இராஜா 8:13ஏசா 12:6சங் 135:21சங் 76:2சங் 87:2ஏசா 8:18சங் 68:18

இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன்.

அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; சங் 147:14லேவி 26:4-5நீதி 3:9-102 கொரி 9:10-11மாற் 8:6-9மத் 5:6உபா 14:29யாத் 23:25

அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.

அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; 2 நாளாக 6:41சங் 132:9ஏசா 61:10யோவா 16:24கலா 3:27ஓசி 11:12சங் 140:4சகரி 9:15-17

அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.

அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; லூக் 1:69எசேக் 29:212 நாளாக 21:71 இராஜா 11:361 இராஜா 15:4சங் 92:102இராஜா 8:19லூக் 2:30-32

நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன்.

அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; சங் 35:26யோபு 8:22லூக் 1:32-33மத் 28:18சங் 109:29சங் 21:8-9ஏசா 58:10-12சங் 72:8-11

அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.