கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.
என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே, ஏசா 12:2சங் 22:2லூக் 18:7சங் 86:31 இராஜா 4:31ஆதி 49:18சங் 27:9சங் 53:1
இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; சங் 31:2சங் 141:1-2புலம் 3:8சங் 79:111 இராஜா 8:31
என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; சங் 107:18புலம் 3:15-19மாற் 14:33-34ஏசா 53:10-11ஏசா 53:3யோபு 33:22யோபு 6:2-4மத் 26:37-39
என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது.
நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, சங் 28:12 கொரி 1:9ஏசா 38:17-18சங் 143:7சங் 31:122 கொரி 13:4யோபு 17:1சங் 30:9
பெலனற்ற மனிதனைப்போல ஆனேன்.
மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; ஏசா 53:8சங் 31:22ஏசா 14:9-12சங் 136:23எசேக் 32:18-32ஆதி 19:29ஆதி 8:1ஏசா 38:10-12
நீர் இனி ஒருபோதும் நினையாதபடி,
உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். சங் 69:15சங் 86:13யோவா 12:46புலம் 3:2சங் 143:3சங் 40:2உபா 32:22யூதா 1:13
உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; சங் 42:71 பேது 2:24யோபு 6:4ரோம 2:5-9யோவா 3:36யோபு 10:16யோனா 2:3சங் 102:10
உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா)
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, சங் 31:11ஏசா 49:7யோபு 30:10ஏசா 63:3எரே 32:2யோவா 15:23-24யோபு 19:13-19புலம் 3:7-9
அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்;
நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.
துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; யோபு 11:13சங் 38:10சங் 86:3சங் 143:6சங் 42:3எசேக் 17:11யோவா 11:35யோபு 16:20
யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு,
உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன்.
இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? ஏசா 26:19சங் 6:5ஏசா 38:18-19சங் 30:91 கொரி 15:52-57மாற் 5:35-36எசேக் 37:1-14யோபு 14:7-12
செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)
கல்லறைக்குழியில் உமது கிருபையும், நீதி 15:112 பேது 2:1யோபு 21:30யோபு 26:6மத் 7:13சங் 55:23சங் 73:18ரோம 9:22
அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது பிரச 9:5மத் 8:12பிரச 2:16பிரச 8:10ஏசா 8:22யோபு 10:21-22யூதா 1:13சங் 143:3
நீதியும் அறியப்படுமோ?
நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சங் 5:3மாற் 1:35சங் 30:2சங் 119:147-148
காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? யோபு 13:24சங் 13:1சங் 43:2சங் 44:24மத் 27:46சங் 44:9சங் 69:17சங் 77:7-9
ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; யோபு 6:4லூக் 22:44ஏசா 53:10யோபு 7:11-16சங் 73:14சகரி 13:7ஏசா 53:3யோபு 17:1
உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது,
நான் மனங்கலங்குகிறேன்.
உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; கலா 3:13வெளி 6:17தானி 9:26ஏசா 53:4-6ஏசா 53:8சங் 102:10சங் 38:1-2சங் 89:46
உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது.
அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, சங் 22:16சங் 116:3சங் 69:1-2யோபு 16:12-13யோபு 30:14-15புலம் 3:5-7மத் 27:39-44சங் 118:10-12
ஒன்றாக என்னை வளைந்துகொள்ளுகிறது.
நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; சங் 88:8சங் 38:11யோபு 19:12-15சங் 31:11
எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.