சங்கீதங்கள் 109

Psalms 109
சங்கீதம் 109

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, சங் 28:1சங் 83:1உபா 10:21யாத் 15:2ஏசா 42:14சங் 35:22-23எரே 17:14சங் 118:28

நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.

கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள், சங் 52:4நீதி 6:17சங் 120:2-32 சாமு 17:1அப் 6:13எரே 9:5நீதி 12:19சங் 31:13

தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்;

பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.

அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; சங் 69:4சங் 35:7யோவா 15:24-25சங் 35:20சங் 88:171 சாமு 19:4-51 சாமு 26:182 சாமு 15:12

காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள்.

அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள், சங் 38:20லூக் 23:34சங் 35:7சங் 69:12-13சங் 55:16-17லூக் 6:11-12சங் 35:122 கொரி 12:15

நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன்.

அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்; நீதி 17:13சங் 38:202 சாமு 15:31ஆதி 44:4சங் 35:7-12சங் 55:12-152 சாமு 15:12யோவா 13:18

என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள்.

என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்; சகரி 3:1மத் 5:25மத் 27:4யோவா 13:2யோவா 13:27

அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக.

அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்; நீதி 28:9நீதி 21:27கலா 3:10நீதி 15:82 சாமு 15:7-8ஏசா 1:15ஏசா 66:3மத் 23:13

அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக.

அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக; அப் 1:16-26சங் 55:23மத் 27:5

அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.

அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும், யாத் 22:24எரே 18:21புலம் 5:3

அவன் மனைவி விதவையாகட்டும்.

அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்; ஆதி 4:12-14சங் 37:252இராஜா 5:27ஏசா 16:2சங் 59:152 சாமு 3:29யோபு 24:8-12யோபு 30:3-9

அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக.

கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக; யோபு 5:5உபா 28:29உபா 28:33-34உபா 28:50-51யோபு 18:9-19யோபு 20:18நியாயாதி 6:3-6

அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக.

ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும், யாக் 2:13லூக் 6:38மத் 27:25சங் 137:8-9ஏசா 13:18ஏசா 27:11ஏசா 9:17யோபு 5:4

அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக.

அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக; நீதி 10:7யோபு 18:19சங் 37:281 சாமு 2:31-331 சாமு 3:132இராஜா 10:10-11உபா 25:19உபா 29:20

அவன் 1 பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக.

அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக; யாத் 20:5நெகே 4:5எரே 18:232 நாளாக 22:3-42இராஜா 10:13-142இராஜா 11:12இராஜா 8:272இராஜா 9:27

அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக.

ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே சங் 34:16யோபு 18:17சங் 90:8சங் 51:9ஆமோ 8:7உபா 32:34ஏசா 65:15எரே 2:22

யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்;

அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும்.

ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை; சங் 34:18யாக் 2:13மத் 18:33-35சங் 37:142 சாமு 16:11-122 சாமு 17:1-2ஆதி 42:21யோபு 19:2-3

மாறாக ஏழைகளையும், எளியவர்களையும்,

உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான்.

சாபம் இடுவதையே அவன் விரும்பினான்; மத் 7:2நீதி 14:14எசேக் 35:6சங் 52:4-5சங் 59:12-132 தெச 2:10-11வெளி 16:6

அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக;

ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை,

ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக.

அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்; சங் 73:6எண் 5:22கொலோ 3:12மத் 27:3-51 பேது 5:5அப் 1:18அப் 1:25கொலோ 3:8

அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும்,

அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது.

சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக; சங் 109:29சங் 132:18சங் 109:18சங் 35:26

அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக.

என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும், 2 தீமோ 4:141 இராஜா 2:44சங் 94:231 கொரி 12:31 தெச 2:15-162 சாமு 17:232 சாமு 18:32லூக் 19:27

என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும்

இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக.

ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, சங் 31:3சங் 69:16சங் 25:11சங் 63:3சங் 79:9-10பிலி 2:8-11சங் 143:11-12சங் 86:15

நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்;

உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும்.

ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன், சங் 86:1சங் 102:4சங் 40:172 கொரி 8:92இராஜா 4:27யோவா 12:27சங் 22:6ஏசா 53:3

என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது.

நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்; யாத் 10:191 நாளாக 29:15யோபு 14:2சங் 102:10-11பிரச 6:12பிரச 8:13யாத் 10:13யாக் 4:14

ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன்.

உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன; எபி 12:12மத் 4:2சங் 22:14சங் 32:3-42 கொரி 11:27யோபு 19:20சங் 102:4-5சங் 35:13-14

என் உடல் மெலிந்து போயிருக்கிறது.

என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்; சங் 22:6-7சங் 69:19-20ரோம 15:3சங் 69:9-12எபி 12:2எபி 13:13ஏசா 37:22யோபு 16:4

அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள்.

யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; சங் 119:86சங் 57:1எபி 5:7சங் 69:13சங் 40:12சங் 69:16

உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.

யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும், யோபு 37:71 இராஜா 18:36-37யாத் 8:191 சாமு 17:46-47அப் 2:32-36அப் 4:16சங் 126:2சங் 17:13-14

நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும்.

அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்; எண் 23:20யோவா 16:22எபி 12:2எண் 22:12சங் 109:172 சாமு 16:10-13ஏசா 65:13-16எண் 23:23

அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்;

ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன்.

என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்; சங் 132:18சங் 35:26யோபு 8:22எரே 20:11தானி 12:2மீகா 7:10சங் 109:17-19சங் 140:9

ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள்.

நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; சங் 111:1சங் 35:18சங் 138:1சங் 22:22-25எபி 2:12சங் 107:32சங் 108:1-3சங் 116:12-18

பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.

ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; சங் 121:5சங் 16:8ஏசா 54:17சங் 110:5சங் 140:12சங் 73:23நீதி 22:22-23பிரச 5:8

அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து

அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.