தாவீதின் வீட்டின் அருகே காத்திருந்து அவனை கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது, “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கத் தாவீது பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் சங்கீதம்.
இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்; 1 சாமு 19:11-24சங் 18:48ஏசா 33:16லூக் 1:74-75சங் 57:12 கொரி 11:32-332 தீமோ 4:17-18சங் 143:9
எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும்.
தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; சங் 139:19சங் 26:9சங் 55:23சங் 27:2
என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்! சங் 56:6சங் 69:41 சாமு 24:11யோவா 15:25நீதி 12:6மீகா 7:2சங் 37:32-331 சாமு 19:1
யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க,
சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள்.
நான் ஒரு தவறும் செய்யவில்லை; சங் 35:231 சாமு 19:12-24அப் 23:15ஏசா 51:9ஏசா 59:7நீதி 1:16சங் 35:19சங் 44:23
இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள்.
எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்!
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, சங் 55:15சங் 84:8சங் 9:15ஆமோ 9:7யாத் 20:5யாத் 3:15எசேக் 18:27-28ஆதி 33:20
இஸ்ரயேலின் இறைவனே,
இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்;
கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும்.
மாலையிலே அவர்கள் சங் 59:14சங் 22:161 சாமு 19:11
நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்;
நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்; சங் 57:4நீதி 15:2சங் 10:11சங் 73:11நீதி 12:18நீதி 15:28சங் 10:13சங் 55:21
அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை,
அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள்.
ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; நீதி 1:26சங் 37:13சங் 2:4மத் 18:17சங் 59:51 சாமு 19:15-16
அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்.
நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; சங் 9:9ஏசா 26:3-4சங் 27:14சங் 62:2சங் 59:17ஆப 3:19ஏசா 12:2ஏசா 40:31
இறைவனே, நீரே என் கோட்டை,
நான் சார்ந்திருக்கும் இறைவன். 1 பேது 5:10சங் 21:3சங் 54:7சங் 59:17சங் 54:5சங் 92:11எபே 2:4-5ஏசா 65:24
தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார்.
என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார்.
எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்; சங் 3:3உபா 28:64உபா 4:27லூக் 1:51-52வெளி 9:6எசேக் 12:15-16ஆதி 4:12-15நியாயாதி 1:6-7
அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள்.
உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி,
அவர்களைத் தாழ்த்திவிடும்.
அவர்களுடைய உதடுகளின் பேச்சு, நீதி 12:13ஓசி 4:2நீதி 18:7சங் 10:7மத் 12:36-37சங் 10:2சங் 120:3-4லூக் 23:5
அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது;
அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும்,
அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக.
உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்; சங் 83:18சங் 7:9எசேக் 39:7சங் 59:111 இராஜா 18:36-371 சாமு 17:46-472இராஜா 19:19தானி 4:25
அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும்.
அப்பொழுது இறைவன்,
யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று
பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.
மாலையிலே அவர்கள் சங் 22:16சங் 59:6
நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்;
நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்; யோபு 15:23சங் 109:10யோபு 30:1-7புலம் 5:92இராஜா 6:25-29உபா 28:48உபா 28:53-58ஏசா 56:11
திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள்.
ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; சங் 21:13எபே 3:20ரோம 15:9சங் 30:5சங் 143:8எபே 1:6-7சங் 31:7சங் 138:7
காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்;
ஏனெனில் நீரே எனது கோட்டையும்
துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; சங் 46:1சங் 59:9-10சங் 18:1
இறைவனே, நீரே என் கோட்டையும்,
என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.