தாவீதின் ஜெபம்.
யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், சங் 142:6சங் 61:11 யோவா 3:21தானி 9:18-19மத் 15:8சங் 145:182 நாளாக 7:15ஏசா 29:13
என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்;
பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும்
என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக; சங் 37:62 தெச 1:6-9எசேக் 18:25எசேக் 18:29யூதா 1:24எசேக் 33:17சங் 37:33எசேக் 33:20
உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக.
நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து, யோபு 23:10அப் 11:23சங் 26:2சங் 39:1மல்கி 3:2எரே 50:20நீதி 13:3சங் 119:106
இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும்
ஒன்றும் காணாமலிருக்கிறீர்; 1என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன்.
மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே 1 கொரி 3:31 பேது 5:8சங் 119:9-11எபே 6:17மத் 4:10மத் 4:7வெளி 12:11யாக் 1:18
தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.
என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. சங் 44:18சங் 119:1331 சாமு 2:9சங் 121:3சங் 121:7சங் 18:36சங் 38:16எரே 10:23
என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை.
தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், சங் 116:2சங் 86:7சங் 66:19-20சங் 88:2சங் 55:16தானி 9:17-19ஏசா 37:17ஏசா 37:20
ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து,
என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும்.
உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து சங் 60:5சங் 20:6சங் 31:21சங் 5:11-12ஏசா 41:101 சாமு 17:45-572 நாளாக 16:92இராஜா 19:34
உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே!
உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும்.
கண்மணியைப்போல் என்னைக் காத்து. உபா 32:10சங் 91:4சங் 91:1நீதி 7:2சங் 61:4சகரி 2:8லூக் 13:34சங் 36:7
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், சங் 35:4சங் 35:71 நாளாக 17:91 சாமு 24:11சங் 31:20சங் 35:12சங் 7:5
என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக,
உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
அவர்கள் கொழுத்துப்போய், 1 சாமு 2:3சங் 123:4சங் 31:18மத் 13:15வெளி 13:5-62 பேது 2:18அப் 28:27யாத் 15:9
தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள்.
நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; நீதி 6:13-14சங் 37:14சங் 10:8-101 சாமு 23:261 சாமு 24:2-31 சாமு 26:2-3சங் 88:17
எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், சங் 7:21 பேது 5:8சங் 10:92 தீமோ 4:17சங் 22:13
மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள்.
யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் சங் 3:7சங் 44:26சங் 7:6அப் 4:28சங் 22:20சங் 44:23சங் 7:11-13ஏசா 10:15
என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.
யெகோவாவே, மனிதருடைய கைக்கும், யோபு 22:18யோவா 17:14யோவா 15:19யோவா 8:23லூக் 12:19-21லூக் 16:25லூக் 16:8சங் 49:17-19
இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும்
உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்;
அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்;
அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து,
தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.
நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; 2 கொரி 3:18மத் 5:6சங் 11:7சங் 16:111 யோவா 3:2-3சங் 4:6-7பிலி 3:21ஏசா 26:19
நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.