இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.
என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; 1 சாமு 19:11-24சங் 18:48ஏசா 33:16லூக் 1:74-75சங் 57:12 கொரி 11:32-332 தீமோ 4:17-18சங் 143:9
என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, சங் 139:19சங் 26:9சங் 55:23சங் 27:2
இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும்.
இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; சங் 56:6சங் 69:41 சாமு 24:11யோவா 15:25நீதி 12:6மீகா 7:2சங் 37:32-331 சாமு 19:1
யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும்,
பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள்.
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், சங் 35:231 சாமு 19:12-24அப் 23:15ஏசா 51:9ஏசா 59:7நீதி 1:16சங் 35:19சங் 44:23
ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்;
எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, சங் 55:15சங் 84:8சங் 9:15ஆமோ 9:7யாத் 20:5யாத் 3:15எசேக் 18:27-28ஆதி 33:20
இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்;
வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா)
அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். சங் 59:14சங் 22:161 சாமு 19:11
இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; சங் 57:4நீதி 15:2சங் 10:11சங் 73:11நீதி 12:18நீதி 15:28சங் 10:13சங் 55:21
அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது,
கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
ஆனாலும் யெகோவாவே, நீதி 1:26சங் 37:13சங் 2:4மத் 18:17சங் 59:51 சாமு 19:15-16
நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்;
அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; சங் 9:9ஏசா 26:3-4சங் 27:14சங் 62:2சங் 59:17ஆப 3:19ஏசா 12:2ஏசா 40:31
தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; 1 பேது 5:10சங் 21:3சங் 54:7சங் 59:17சங் 54:5சங் 92:11எபே 2:4-5ஏசா 65:24
தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; சங் 3:3உபா 28:64உபா 4:27லூக் 1:51-52வெளி 9:6எசேக் 12:15-16ஆதி 4:12-15நியாயாதி 1:6-7
எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து,
அவர்களைத் தாழ்த்திப்போடும்.
அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; நீதி 12:13ஓசி 4:2நீதி 18:7சங் 10:7மத் 12:36-37சங் 10:2சங் 120:3-4லூக் 23:5
அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால்
தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.
தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, சங் 83:18சங் 7:9எசேக் 39:7சங் 59:111 இராஜா 18:36-371 சாமு 17:46-472இராஜா 19:19தானி 4:25
அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்;
இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா)
அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, சங் 22:16சங் 59:6
ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், யோபு 15:23சங் 109:10யோபு 30:1-7புலம் 5:92இராஜா 6:25-29உபா 28:48உபா 28:53-58ஏசா 56:11
முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, சங் 21:13எபே 3:20ரோம 15:9சங் 30:5சங் 143:8எபே 1:6-7சங் 31:7சங் 138:7
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; சங் 46:1சங் 59:9-10சங் 18:1
தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும்,
கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.