சங்கீதங்கள் 80

Psalms 80
சங்கீதம் 80

எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் பாடல்.

இஸ்ரவேலின் மேய்ப்பரே, வெளி 21:23சங் 50:2சங் 77:20சங் 99:11 பேது 2:25ஏசா 63:111 சாமு 4:42 சாமு 6:2

யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே,

செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும்.

எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, சங் 35:23எண் 2:18-24ஏசா 42:13-14சங் 44:23-26ஏசா 25:9ஏசா 33:22எண் 10:22-24சங் 78:38

எங்களைக் காப்பாற்ற வந்தருளும்.

தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், புலம் 5:21எண் 6:25-26சங் 85:4சங் 4:6சங் 80:19சங் 80:71 இராஜா 18:37சங் 67:1

உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,

அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, சங் 85:5உபா 29:20ஏசா 58:2-3ஏசா 58:6-9புலம் 3:44லூக் 18:1-8மத் 15:22-28சங் 59:5

உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர்

எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.

கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், ஏசா 30:20சங் 42:3சங் 102:9எசேக் 4:16-17யோபு 6:7

மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.

எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; சங் 79:4எசேக் 36:4ஏசா 36:12-20ஏசா 36:8ஏசா 37:23நியாயாதி 16:25எரே 15:10எரே 48:27

எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள்.

சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், சங் 51:10ஏசா 64:5எரே 4:14சங் 80:19சங் 80:32 தீமோ 2:25-26ஏசா 30:15மாற் 4:12

உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,

அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, எரே 2:21எசேக் 17:6சங் 44:2ஏசா 5:1-7எரே 12:10யோவா 15:1-8எரே 18:9-10அப் 7:45

தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.

அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; யோசு 24:12யாத் 23:28-30ஏசா 27:61 நாளாக 21:51 நாளாக 27:23-241 இராஜா 4:201 இராஜா 4:25ஏசா 37:31

அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.

அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது. சங் 104:16

அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், சங் 72:81 நாளாக 18:31 இராஜா 4:211 இராஜா 4:24யாத் 23:31ஆதி 15:18

தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.

இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, ஏசா 5:5லூக் 20:16சங் 89:40-41ஏசா 18:5-6நாகூ 2:2

அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, எரே 4:7எரே 5:62 நாளாக 32:1-332 நாளாக 36:1-232இராஜா 18:1-192இராஜா 24:1-20எரே 39:1-3எரே 51:34

வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.

சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, ஏசா 63:15தானி 9:16-19ஏசா 63:17மல்கி 3:7சங் 90:13அப் 15:16யோவே 2:14புலம் 3:50

இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;

உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், யோவா 15:1சகரி 3:8சகரி 6:12ஏசா 11:1எரே 2:21எரே 23:5-6மாற் 12:1சங் 80:8

உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும்.

அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; சங் 39:11யோவா 15:62 தெச 1:9எசேக் 20:47-48ஏசா 27:11சங் 76:6-7சங் 79:5சங் 90:7

உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.

உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், தானி 7:13-14சங் 110:1சங் 89:21சங் 80:15ஏசா 53:5யோவா 5:21-29

உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.

அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; யோவா 6:66-69பிலி 2:12-13சங் 119:107சங் 119:154சங் 119:25சங் 119:40எபி 10:38-39உன்னத 1:4

எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம்.

சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, எரே 3:22-23சங் 27:4சங் 80:3சங் 44:3சங் 80:1சங் 27:9சங் 31:16சங் 80:7

எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்;

உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,

அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.